KAILASA Library/வாழும் அவதார புருஷர்/குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை -Sign in
வாழும் அவதார புருஷர்

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை -

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

2

Kriya for kundalini awakening Level-2

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி:

மஹா முத்ராவுடன் கேச'ரீ முத்ரா, சா'ம்பவீ முத்ரா, மூலபந்தம்

1. மஹா முத்ரா

ஹடப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15

பாதமூலேன வாமேன யோனிம் ஸம்பீட்ய தக்ஷிணம் /
ப்ரஸாரிதம் பதம் க்ரு'த்வா கராப்யம் சூரேயேத் த்ரு'டம் // 3-10

கண்டே பந்தம் ஸமரோப்ய தூரேயேத்-வாயும் ஊர்த்வத: /
யதா தண்ட -ஹதஹ ஸர்போ தண்டாகாரஹ ப்ரஜாயதே // 3-11

ரு'ஜ்வீ - பூத்வா ததா ச'க்தி: குண்டலீ ஸஹஸ ப்ரவேத் /
ததா ஸா மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாச்'ரயா // 3-12

ததஹ ச'னைஹி ச'னைரேவ ரேசயத் நைவ வேகத: /
மஹாமுத்ராம் ச தேனவ வதந்தி விபுதோத்தமா: // 3.13

சந்த்ராங்கே து ஸமப்யஸ்ய ஸூர்யாங்கே புனரப்யஸ்யேத் /
யாவத்-துல்யா ப்ரவேத் ஸங்க்யா ததோ முத்ராம் விஸர்ஜயேத் // 3-15

மொழிபெயர்ப்பு

இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பின் (யோனி) வாயிலில் அழுத்தமாக வைத்து, வலது காலை நீட்டி, வலது பாதத்தை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும். (3.10)

தொண்டையை இறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்தும்ப்போது, கம்பால் அடிக்கப்பட்ட பாம்பு சீறி நேராக எழுவதுபோல், பிராண சக்தியானது நேராக எழுகிறது. (3.11)

குண்டலி சக்தி நேராக எழும்பும்போது, ஸுஷும்னா நாடி வழியாகச் சக்தி பாய்வதால், இடகலை பிங்கலை நாடிகள் இரண்டுமே செயலிழக்கின்றன. (மரணமடைகின்றன.) (3.12)

பிறகு சுவாசத்தை மிக மிக மெதுவாக வெளியே விடவும். இதுவே ‘மஹாமுத்ரா’ என்று மஹாத்பாட்களால் (ரிஷிகளால்) விளக்கப்பட்டுள்ள முத்ராவாகும். (3.13)

இடது குதிகாலை வைத்து செய்ததுபோல், வலது காலை மடித்தும் செய்யுங்கள். ஏதாவது ஒரு கால் பக்கம் மட்டும் செய்துவிட்டு, அடுத்த கால் பக்கம் செய்யாமல் இடையிலேயே நிறுத்தக்கூடாது. இரண்டு புறமும் சமமான எண்ணிக்கையில் செய்யவேண்டும். பிறகு முத்திரையை விடுவிக்கவும்.(3.15)

2. கேச'ரீ முத்ரா

ஹடப்ரதீபிகா, உபதேசம் 3, ஸ்லோகம் 31

கபாலகுஹரே ஜிஹ்வா ப்ரவிணோ விபரேதகா /
ப்ரு'வோரந்தர்கதா தாநோயிர் முத்ரா பவதி கேசரே //

மொழிபெயர்ப்பு

கேசரி முத்ரா என்பது நாக்கை உட்புறமாக மடித்து, மேலன்னத்தை தொடுமாறு வைத்து, கண்களின் கருவிழிகள் இரண்டையும் புருவமத்தியை நோக்கித் திருப்புவதாகும்.

3. சா'ம்பவீ முத்ரா

ஹடப்ரதீபிகா, உபதேசம் 3, ஸ்லோகம் 31

அந்தர் லக்ஷ்யம் பஹிர்த்து'ஷ்டிர்-நிமேஷோந்-மேஷவர்ஜிதா /
ஏஷா ஸா சா'ம்பவீ முத்ரா வேதசா'ஸ்த்ரேஷு கோபிதா //

மொழிபெயர்ப்பு

இமைகளைச் சிமிட்டாத வெளிமுகமான நோக்கும், உள்முகப்படுத்தப்பட்ட விழிப்புணர்வும்தான் சாம்பவீ முத்ரா என்று வேதங்கள் பகர்கின்றன.

4.மூலபந்த:

ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-61

பார்ஷ்ணிபாகேன ஸம்பீட்ய யோனிமாகுஞ்சயேந்குதம் /
அபானமூர்த்துவமாக்ரு'ஷ்ய மூலபந்தோபிதீயதே //

மொழிபெயர்ப்பு

குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை உட்பக்கமாக சுருக்கும்வதன்மூலம், அபானவாயு மேல்நோக்கி நகர்வதே மூலபந்தம்.

மஹாமுத்ரா ஆஸனம்

மஹாமுத்ரா ஆஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நேராக நீட்டி அமரவும்.
  1. இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பின் வாயிலில் அழுத்தமாக வைக்கவும்,
  1. சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும். முன்புறமாகக் குனிந்து, நீட்டப்பட்டிருக்கும் வலது பாதத்தின் பெருவிரலை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். தலையை நேராக நிமிர்த்தி, கண்களை மூடவும்.
  1. முதுகெலும்பு வளையாது நிமிர்ந்திருக்கட்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் தளர்வாக அமரவும்.
  1. இப்போது கேசரீ முத்ராவைக் கடைபிடிக்கவும். (அதாவது நாக்கை உட்புறமாக மடித்து, மேலன்னத்தை தொடுமாறு வைத்து, கண்களின் கருவிழிகள் இரண்டையும் புருவமத்தியை நோக்கித் திருப்பவும்.)
  1. மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்த்து, சாம்பவீ முத்ராவைக் கடைபிடிக்கவும். அதாவது கண்களைத் திறந்து, இமைகளைச் சிமிட்டாமல் பார்வையை நிலையாக ஓரிடத்தில் நிறுத்துங்கள்.
  1. மொத்த விழிப்புணர்வையும் உள்முகப்படுத்தவும். முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, மூலபந்தாவைக் கடைபிடிக்கவும். அதாவது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, அடிவயிற்றுப் பகுதியை உட்பக்கமாக இழுத்துச் சுருக்கவும்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, கண்களை மெதுவாகத் திறந்து, மூலபந்தாவை விடுவிக்கவும். தலையை நிமிர்த்தவும். பிறகு மிக மிக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இது ஒரு சுற்று. இந்தச் சுற்றை 3 முறை செய்யுங்கள். 12. இடது குதிகாலை வைத்துச் செய்ததுபோல், வலது காலை மடித்தும் 3 முறை செய்யுங்கள்.

பிறகு இரண்டு கால்களையும் நீட்டி 3 முறை செய்யுங்கள்.

(குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்தச் சுற்றுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். சொல்லப்போனால், குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் இந்த கிரியாக்களை குருநாதரிடம் தீக்ஷைபெற்ற பின்பு செய்வதுதான் சாலச் சிறந்தது.)