KAILASA Library/வாழும் அவதார புருஷர்/குழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

குழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Kids' Memory Power

நோய் பற்றிய விபரம்

மனப்பாடம் செய்வது என்பது ஏதாவது ஒன்றை நமது நினைவில் வைத்துக் கொள்ள நாம் செய்யும் ஒரு செயல்முறையைக் குறிக்கும். மனப்பாடம் செய்யும் செயல்முறையை நாம் பெரும்பாலும் நமது அனுபவங்கள், பிற பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், பட்டியல்கள், கதைகள், செய்யுட்கள், படங்கள், நிலவரைபடங்கள், வரைபடங்கள், சந்திப்புதிட்டங்கள், ஆதாரபூர்வமான செய்திகள், பாட்டு அல்லது காட்சிகள், டூ கட்பதைச் சார்ந்த அல்லது நுட்பத்திறனுக்கான செய்திகள் போன்றவற்றை பிற்காலத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்காகச் செய்கின்றோம். மனப்பாடம் செய்வது என்பதை ஒரு குறிப்பிட்ட செய்தியை நினைவு என்னும் கருவியில் சேமித்து வைக்கும் ஒரு செயல்முறை என்றும் சொல்லலாம்.

நினைவாற்றல் அறிவியல், புரிதலுக்கான நரப்பியலின் ஒரு பகுதியாக விளங்குகிறது. அதாவது புரிதலுக்கான உளவியல் மற்றும் புரிதலுக்கான நரம்பியல் இவற்றுக்கு இடையே உள்ள ஒழுங்கான ஒருங்கிணைப்பாக இருப்பதுதான் நினைவாற்றல் அறிவியல்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 10, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பத்மாஸனம்
  1. சீதலீ ப்ராணாயாமம்
  1. ஸீத்காரீ ப்ராணாயாமம்
  1. உஜ்ஜாயீகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரூ-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ப்ரு'ளௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷ்யுத்தரப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /

துர்லபும் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்து க்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
பத்மாஸனம்

பத்மாஸனம்

7. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே சீதலீகும்பக:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74

அथ சீ’தலீகும்புக:

ஜிஹ்வயா வாய்மாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

மொழிபெயர்ப்பு

வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.

தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.

செய்நுட்பம்

  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
  1. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  1. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  1. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  1. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  1. இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43

அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.

செய்நுட்ப்பம்

  1. மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜாயீகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132

அத உஜ்ஜாயீகும்பஃ

முக_ம் நியம்ப்ய நாடீப்யாமாக்ரு’ஷ்யாஸு-ம் நியோஜயேத் /
குண்டலீ-பார்ச்’வயோர் பாச்’சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131//

ரேசயேதிடயா வாயு-ம் கச்சன்-திஷ்ட_ன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்பஃ ப்ரோக்த: சி’வேநாகில-வேதினா //132//

மொழிபெயர்ப்பு

வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

செய்நுட்ப்பம்

  1. அதே ஆசனத்தில் அமரவும்.
  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள். இந்தக் கிரியாசெய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்பவிக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.