KAILASA Library/வாழும் அவதார புருஷர்/குடலிறக்க நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

குடலிறக்க நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Hernia

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 22, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. ஸிம்ஹாஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. ஸீமதி ஆஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. ஸூர்ய ஆஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. ஸ்வஸ்திக் ஆஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. உன்முத பிட்டாஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. * உத்தான-சி'கி பீடகாஸனம்
  1. பஹிஃகும்பகம்
  1. வஜ்ரஸங்கர ஆஸனம்
  1. பஹிஃகும்பகம்

1. ஸிம்ஹாஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 14, 15

அத ஸிம்ஹாஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேணோர்த்வதாம் கதௌ /
சிதியுக்மம் பூமிஸம்ஸ்தம் கரௌ ச ஜானுனோபரி // 14

வ்யாத்த-வக்த்ரோ ஜலந்த்ரேண நாஸாக்ரமவலோகயேத் /
ஸிம்ஹாஸனம் பவேதேதத்-ஸர்வவ்யாதி விநாச'கம் // 15

Simhasanam demonstration

ஸிம்ஹாஸனம்

மொழிபெயர்ப்பு

செங்குத்தாக வைக்கப்பட்ட குதிங்கால்களைப் பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குறுக்காக வைத்து, அவற்றின் மேல் அமரவும். முழங்கால்கள் தரையில் படும்படி வைத்து, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு ஜாலத்தரமுத்ராவை பயிற்சி செய்யுங்கள். மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும். இந்த ஸிம்ஹாஸனம் அனைத்து வியாதிகளையும் நாசம் செய்கிறது.

செய்நுட்பம்

  1. முட்டிக் காலிட்டு அமரவும். பாதங்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.
  1. பிறப்புறுப்பின் வலது பக்கமாக இடது குதிகாலையும், இடப்பக்கமாக வலது குதிகாலையும் வைக்கவும்.
  1. பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குதிங்கால்களைக் குறுக்காக வைத்து, அவற்றின் மேல் அமரவும்.
  1. முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்து, நாக்கை முடிந்தளவிற்கு வெளியே நீட்டவும்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து ஜாலத்தரமுத்ராவைப் பயிற்சி செய்யுங்கள்.
  1. மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
  1. இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.

2. ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே

பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹி:கும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாവനையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. ஸுஸமதி ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 333-336

அத ஸுஸமதி ஆஸனம்

மூலத்வாரி தரதீ பரி டானே டாவா பகபரி தஸ பத ஆனே /
டாயீ பாகதீ கோ லே ஆவை ஹாத ஏக அந்தர் டஹராவை // 333

தோவூ ஏட டேகே ஐஸை ஆடொ வாச ராகோ தைஸை /
பணா ஜுஃகம உபா கர ராகை கோடா தோவு உபா தாகை // 334

கோதாதரை ஹாத கரி ரஹை ஆம்ஹீ ஸாம்ஹீ கோஹணீ கஹை /
நாஸாத்ரிஷ்டி அசல பர ராகை ஆஸன ஸுஸமதி நாம ஸோ பாகை // 335

பவன தாரணா ஸஹித ஜோ ஆஸன ஸாதை ஏஹி /
விமல புதி ஹோய தாஸகீ ரோகரஹித புனி தேஹ // 336

செய்நுட்பம்

  1. இரண்டு முழங்கால்களையும் மார்பை ஒட்டியவாறு வைத்து அமருங்கள்.
  1. வலது பாதத்தை இடது பாதத்தின்மேல் வைத்து, இடதுபுறம் நோக்கித் திருப்பி வைக்கவும்.
  1. முன்னங்கால்களை உயர்த்தவும்.
  1. இரண்டு கைகளையும் முழங்கால்களுக்கு அடியில் குறுக்காக வைத்து வலது கையால் இடது முழங்கையையும், இடது கையால் வலது முழங்கையையும் பிடித்துக் கொள்ளவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஸாமதி ஆஸனம்

ஸாமதி ஆஸனம்

4. ஸாமதி ஆஸனத்தில் இருந்தபடியே

பஹிஃகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹிஃகும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாവനையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதைக 21 முறை செய்யுங்கள்.

5. ஸூர்ய ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகம் 82-83

அத ஸூர்ய ஆஸனம்

ஜட தோவூ குதாதரி ஆனை / பணா பாணி பைட_க புனி டானை //
கோடா ஜங்க அதர கரி ரஹை / ஆடே வாய இஸீ வித கஹை // 82

தோவூ பூஜா நப திஸா பஸாரை / கமல ஸ்வரூப அங்குரீ தாரை //
பௌஹசா மதி சித்ர புனி டானை / சித்ர விகை புனி த்ரிஷ்டி ஜூ ஆனை // 83

செய்நுட்பம்

  1. தரையில் முழங்காலி்ட்டு அமருங்கள்.
  1. இரு பாதங்களையும் இணையாக வைத்துக் கொண்டு குதிங்கால்களைக் குதத்திற்கு அடியில் வைக்கவும்.
  1. முழங்கால்களை அகலமாக விரித்துவைத்துக் கொண்டு நிமிர்ந்து அமருங்கள்.
  1. தலைக்கு மேல் இரு கைகளையும் உயர்த்தி, விரல்களை தாமரை மலரைப் போல் வைக்கவும்.
  1. விரல்களின் இடைவெளி வழியே மேலே பார்க்கவும்.
  1. வயிற்றை உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஸூர்ய ஆஸனம்

ஸூர்ய ஆஸனம்

6. ஸூர்ய ஆஸனத்தில் இருந்தபடியே

பஹிஃகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹிஃகும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த ே வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

7. ஸ்வஸ்திக் ஆஸனம்,

சி'வ ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 95

அத ஸ்வஸ்திக் ஆஸனம்

ஜானுர்வோரந்தரே ஸம்யக்-த்ரு'த்வா பாததலே உபே /
ஸமகாய: ஸுதாஸீன: ஸ்வஸ்திகம் தத்ப்ரசக்ஷதே // 3.95

மொழிபெயர்ப்பு

கால்களைச் சம்மணம் இட்டு உட்கார்ந்த நிலையில், இரண்டு முன்னங்கால் விரல்களையும், தொடை மற்றும் கணுக்கால் தசைப்பகுதிக்கு இடையில் நன்கு அழுத்தி வைத்துக் கொள்ளவும். உடலை நேராக வைத்து சௌகரியமாக அமருங்கள். இதுவே ஸ்வஸ்திக் ஆஸனம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. தரையில் சம்மணம் இட்டு அமருங்கள்.
  1. வலது கால் விரல்களை இடது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும், இடது கால் விரல்களை வலது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும் வைத்துக் கொள்ளவும்.
  1. தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஸ்வஸ்திக் ஆஸனம்

ஸ்வஸ்திக் ஆஸனம்

8. ஸ்வஸ்திக் ஆஸனத்தில் இருந்தபடியே

பஹி:கும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹி:கும்புக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்புஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்மும்பகம்.

செய்நுட்பம்

1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும். 2. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். 3. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 4. இதை 21 முறை செய்யுங்கள்.

9. உன்முக பீட ஆஸனம்,

யோக ரஹஸ்யம், உபதேசம் 6, ஸ்லோகம் 17

அத உன்முக பீடாஸனம்

பூந்யஸ்தௌ ஜானுனீ ஹஸ்தௌ சதுஷ்பதமவாங்முகம் /
உத்தாபிதாங்க்ரியுகலகடிஸ்தலமபிருகா // 6.17

உன்முக பீடாஸனம்

உன்முக பீடாஸனம்

செய்நுட்பம்

  1. தரையைப் பார்த்தவாறு படுக்கவும்.
  1. முழங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்மாறு வைத்துக் கொள்ளவும்..
  1. அதேபோல் முழங்கைகளைத் தரையில் ஊன்றி, முன்னங்கைகளை ஒன்றுக்கொன்று இணையாக இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்
  1. இப்போது கால் விரல் நுனிகளை மட்டும் ஊன்றிக் கொண்டு, முழங்கால்களை தரையிலிருந்து உயர்த்தி, உடம்பின் நடுப்பகுதியை மட்டும் மெதுவாக உயர்த்தவும். (முடியாதவர்கள் வேண்டுமானால் முழங்கால்களைத் தரையிலேயே வைத்துக் கொள்ளலாம்.)
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

10. உன்முக பீடாஸனத்தில் இருந்தபடியே பஹிஃகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹிஃகும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

11. உத்தான-சி'தி பீடக ஆஸனம், யோக ரஹஸ்யம், உபதேஸம் 5, ஸ்லோகம் 23

அத உத்தான-சி'தி பீடகாஸனம்

ஜங்கோரு-பலஹீனச்'சேத் உத்தான-சி'தி பீடகம் /
அப்ரமத்த: ப்ரகுர்வீத யுக்தே: ப்ராக்-விஜிதேந்த்ரிய: // 5.23

உத்தான-சிகி பீட ஆஸனம்

உத்தான-சிகி பீடக ஆஸனம்

செய்நுட்ப்பம்

  1. தரையில் பின்புறமாகப் படுத்துக்கொண்டு முழங்கால்களை மடக்கவும், பாதங்களை உறுதியாகத் தரையில் ஊன்றிக் கொள்ளவும்.
  1. தலையும் தோள்பட்டைப் பகுதியும் தரையிலேயே இருக்கட்டும்.
  1. முழங்கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு, இடுப்புப் பகுதியை உயர்த்தி, இரு உள்ளங் கைகளாலும் இடுப்பின் பின்புறம் பிடித்துக் கொள்ளவும்.
  1. உடலின் எடையை முழங்கைகள் தாங்கிப் பிடிக்கட்டும்.
  1. தாடையால் கழுத்து தொண்டைப் பகுதியை அழுத்திக் கொள்ளவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

12. உத்தான-சி'கி பீடகாஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அத பஹி:கும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்ப்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

13. வஜ்ரஸங்கார ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 79-81

அஅத வஜ்ரஸங்கார ஆஸனம்

ப்ரதம புணா பாணி ஹோய பைஸே / தோவு ஏடி கூதா நிவேஸை //
கோடா ஊபா ராகை தீர / ஆடே வாய பஸாரை தீர// 79

ப்ரு'ஷ்ட தீஸீ தோவு கர ஆனை / தினகீ ஜாகத ஐஸ்வித டானை //
கஹை பரஸபரி பூஜா ஜூ தோவு / கொஹன்யா ல கதீ பகரை ஸோவு //80

ஜாடோ கபஹு நா ல கே அவர பூடனீ ஜாய /
வஜ்ரஸங்கார ஆஸன யஹ ஜோ தின ராத ஸாதய // 81

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  1. பிறகு இரண்டு உள்ளங்கால்களையும் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, இருபக்கமும் முழுங்கால்களை அகற்றி வைத்து க்கொள்ளவும்.
  1. பாத விரல்களைத் தரையை நோக்கித் திருப்பவும்.
  1. குதப்பகுதியை குதிங்கால்களின் மீது வைத்து அமர்ந்து கொள்ளவும்.
  1. இரு கைகளையும் முதுகின் பின்புறம் எடுத்து வந்து இடது முழுங்கையை வலது உள்ளங்கையாலும், வலது முழுங்கையை இடது உள்ளங்கையாலும் பிடித்துக் கொள்ளவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
வஜ்ரஸங்கார ஆஸனம்

வஜ்ரஸங்கார ஆஸனம்

14. வஜ்ரஸங்கார ஆஸனத்தில் இருந்தபடியே

பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

அஅத பஹி:கும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31

மொழிபெயர்ப்பு

ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த ே வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

செய்நுட்பம்

  1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.

இதை 21 முறை செய்யுங்கள்.