KAILASA Library/வாழும் அவதார புருஷர்/உடல்பருமன் நோய் குணமாகSign in
வாழும் அவதார புருஷர்

உடல்பருமன் நோய் குணமாக

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Obesity

கிரியா கொடுக்கப்பட்ட நாள்-நவம்பர் 8, 2011.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. அஞ்ஜனீ ஆஸனம்
  1. உட்டீயான பந்தம்
  1. அக்னீஷோமாத்யகும்பகம்
  1. வ்யானகும்பகம்
  1. தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம்
  1. கோமுகாஸனம்
  1. கதாகும்பகம்
  1. கும்ப ராஜாகும்பகம்
  1. உஜ்ஜாயீகும்பகம்

1. அஞ்ஜனீ ஆஸனம்,

ஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286

அத அஞ்ஜனீ ஆஸனம்

தோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/
ஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை அங்குலீ மிலி ராகை // 283

அங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜூ ஜோஈ /
தாபரி மூலத்வாரி டிக பைஸே பஹுஜ்ஜ்யௌ ஜாகதி கரை ஏக பைஸே // 284

குஹ்ரண்யா மஹிலீ ஆதி મிலாவை ஹாத உத்ரஸௌ லக்யா ரஹாவை /
பஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏட பூ தாரை // 285

அங்குஷ்ட அவர குலபு மாஹிலா ராகை ஜூடயா கரை நஹீ குலா /
ஸாதை நாஸா த்ரிஷ்டி ல காயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286

அஞ்ஜனீ ஆஸனம்

அஞ்ஜனீ ஆஸனம்

செய்நுட்பம்

  1. குதிங்கால்கள் பூமியில் படுமாறும், விரல் நுனிகள் மேல் நோக்கியவாறும் இருக்கும்படி வைத்து கால்களை நீட்டி அமரவும்.
  1. கைவிரல்களைக் கோர்த்தவாறும் உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறும் வைத்து, கைகளைப் பிருஷ்டத்திற்கு அடியில் வைக்கவும்.
  1. முழங்கைகளை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவர முடியுமோ அவ்வளவு நெருக்கமாகக் கொண்டுவரவும்.
  1. பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
  1. இந்த நிலையில் 60 நொடிகள் அமரவும்.

2. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே

உட்டீயான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

அத உட்டீயான பந்த:

உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: /
உட்டீயானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

மொழிபெயர்ப்பு

தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆசனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
  1. சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
  1. வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
  1. அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
  1. முடிந்தவரை சுவாசத்தை வெளியேறே நிறுத்தி வைக்கவும்.
  1. இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
  1. அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
  1. பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே

அக்னீஷோமாத்யகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87

அத அக்னீஷோமாத்யகும்பக:

ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யென த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாத்யகும்பக: // 87

மொழிபெயர்ப்பு

ப்ராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாத்யகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
  1. இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66

அத வ்யானகும்பக:

பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேந கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/

மொழிபெயர்ப்பு

இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தே தவி பார்வதி தம் அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.
  1. இயல்பான சுவாசத்திற்கு வரவும்.

5. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே தக்ஷிணாவர்த்த சக்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 107-108

அத தக்ஷிணாவர்த்த சக்ரகும்பக:

ஸூர்யேணாபூர்ய மருதம் கும்பயேதுதராஸ்திதம் /
ரேசயேதிந்துனா பூய:ததா தக்ஷேண பூரயேத் // 107
கும்பயேதியா ரிச்யாத்தக்ஷிணாவர்த்தசக்ரக: /

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். பின்பு மீண்டும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இது தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம்.

செய்நுட்பம்

  1. ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. கோமுதா-ஆஸனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 6

அத கோமுதாஸனம்

ஸவ்யே தக்ஷிண-குல்பம் து ப்ரு'ஷ்ட_பார்ச்'வே நியோஜயேத் /
தக்ஷிணேண்பி ததா ஸவ்யம் கோமுகம் கோமுதாக்ரு'தி: //

மொழிபெயர்ப்பு

வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டத்தின் பக்கவாட்டிலும், இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டத்தின் பக்கவாட்டிலும் வைத்தால் இது பசுவின் தலையைப் போல் இருக்கும். இதுவே கோமுகாஸனம் என்றழைக்கப்படுகிறது.

கோமுக-ஆஸனம்

கோமுக-ஆஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமரவும்.
  1. வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டத்தின் பக்கவாட்டிலும், இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டத்தின் பக்கவாட்டிலும் வைக்கவும்.
  1. இப்போது கைகளை முழங்காலின் மேல் வைக்கவும்.
  1. இந்த நிலையில் 60 நொடிகள் நீடிக்கவும்.

7. கோமுக-ஆஸனத்தில் இருந்தபடியே

கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112

அித கதாகும்பக:

உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி'வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112

மொழிபெயர்ப்பு

இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாபும் பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்ேபாது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

8. கோமுகாஸனத்தில் இருந்தபடியே கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134

அத கும்பராஜகும்பக:

பலாதாகர்ஷ்யேத்வாயும் யாவத் த்ராணஸுமுத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோऽயமீரித: // 134

மொழிபெயர்ப்பு

வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
  1. நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

9. கோமுகாஸனத்தில் இருந்தபடியே

உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132

அத உஜ்ஜாயீகும்பக:

முக்2ம் நியக்ய நாடீப்4யாமாக்ரு'ஷ்யாஸு'ம் நியோஜயேத் /
குண்ட3லீ-பார்ச்'வயோ: பச்'சாத் கும்ப3யேது3ர-ஸ்தி2தம் //131//

ரேசயேதி3யா வாயும் கச்ச2ன்-திஷ்ட2ன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்ப3க: ப்ரோக்த: சி'வேநாகில-வேதி2னா //132//

மொழிபெயர்ப்பு

வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.