உணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Food Allergies
நோய் பற்றிய விபரம்
உணவு ஒவ்வாமை என்பது புரத உணவிற்கு எதிராக நம்முடைய நோய்த் தடுப்பாற்றலே புரியும் ஒரு பதில்செயலே. இன்னும் சொல்லப்போனால் நம் உடலுக்கு எதிராக நம்முடைய நோய்த் தடுப்பாற்றலே புரிகின்ற ஒரு பிரதிகூலமான செயல். பிற முரண்பாடான உணவின் மூலம் ஏற்படுகின்ற பின்விளைவுகள், மருந்துகளினால் ஏற்படுகின்ற பின்விளைவுகள், நச்சுகளினால் ஏற்படுகின்ற விளைவுகள் போன்றவற்றைக் காட்டிலும் ‘உணவு ஒவ்வாமை’ தனித்தன்மை வாய்ந்தது.
பொதுவாக, உணவில் உள்ள புரதம் ஒரு ஒவ்வாமை கூறாகவே இருக்கிறது. நம் உடலில் உள்ள தற்காப்பு வலிமை அமைப்பு (Immune system), புரதத்தை, ‘தீங்கு விளைவிக்கக் கூடியது’ என தவறுதலாக அடையாளம் கொள்வதால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. புரதத்தின் சில கூறுகள் ஜீரணிப்பை எதிர்க்கின்றன. அப்படி ஜீரணிக்கப்படாத புரதத்தின் கூறுகள் Immunoglobulin (IgE) உடன் இணைக்கப்பட்டு விடுகின்றன. இந்த இணைப்புகள்தான், புரதம் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று தற்காப்பு மண்டலத்திற்குத் தவறான தகவலைக் கொடுத்து, தற்காப்பு மண்டலத்தை முட்டாளாக்கிவிடுகிறது. உடனே நோய்த் தடுப்பு மண்டலமும் உடலின் ஒரு உறுப்பு தாக்கப்படுகிறது என்று எண்ணி, ஒவ்வாமை என்னும் எதிர்விளைவை தூண்டிவிட்டு விடுகிறது.
இந்த விளைவுகள் சுமாரானது முதல் மிகவும் கடுமையானதுவரை இருக்கலாம். வாழ்வையே அச்சுறுத்தும் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளான மூச்சுவிடுதலில் இடையூறு (Respiratory distress), நாளவிரிவு (Vasodilation) தோல்வியாதி, வயிறு சரியாக இருப்பது போல் இருக்கும், ஆனால் சரியான முறையில் இயங்கா தன்மை (Gastrointestinal) போன்றவையும் இதில் அடங்கும். இவற்றிற்கு அவசரகால கவனிப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது.
சில மருத்துவ சிகிச்சை இந்தப் புரத ஒவ்வாமையினால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கிறது, குறைக்கிறது அல்லது குணப்படுத்துகிறது.
இதற்கான சிகிச்சை என்பது, ஒன்று, தற்காப்பு ஆற்றலை அதிகரிப்பதாக இருக்கிறது அல்லது புரத உணவையே தவிர்க்கும் முறையை உள்ளடக்கியதாக இருக்கிறது. உணவைத் தவிர்க்கும் முறையில், ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வகையான உணவை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்தப் பிரச்சினை, முக்கியமாக இளைஞர்களுக்கு ஒரு சவாலான பிரச்சினையாக இருக்கிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 15, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- வஜ்ராஸனம்
- சீதலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- ஸமானகும்பகம்
- பஸ்Foundations/பஸ்த்ரிகாகும்பகம்
1. வஜ்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12
அத வஜ்ராஸனம்
ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்

- முழுங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
- வலது குதிகாலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிகாலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
- நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்நிலையில் 30 நொடிகள் அமரவும்.
வஜ்ராஸனம்
2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ’தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதே தவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
ஸமானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
அத ஸமானகும்பக:
நாபாயாபூர்ய வாயுச்’சேத் தேஹே வ்யாப்ய விதாரித: /
கும்பீதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யுங்கள்.
- பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
- உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும் பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
அத பஸ்த்ரிகாகும் பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரெள ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனயோருர்த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164
ஜாலந்தரம் த்ரு'ட 'ம் பத்வா கும்பீதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும் ப: ச'ரீராக்னிவிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்யகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்
- ஶ்ரீரெ»ய்B Eø»z x¸zV போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
- உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
- உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.