வழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிரியா
Care for Baldness
நோய் பற்றிய விபரம்
முழுவதுமாகவோ அல்லது கொஞ்சமாகவோ முடி உதிர்ந்து போவதுதான் வழுக்கைத் தன்மை என குறிப்பிடப்படுகிறது. இது பல காரணங்களால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. மேலும் இது பொதுவாக வயது முதிர்வதால் ஏற்படக்கூடியது. மரபியல் காரணங்களாலும் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படலாம். எப்படியிருப்பினும், கரையாத கொழுப்பு, மன அழுத்தம், அதிர்ச்சிக் கோளாறு, போதிய ஊட்டச்சத்து இல்லாமை, தைராய்டு பிரச்சினைகள் போன்றவை முடி மெலிந்து சத்தில்லாமல் போவதற்கும், முடி இழப்பிற்கும் காரணமாக அமைகின்றன. இது பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கே ஏற்படுகிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 7, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- துர்வாஸ ஆஸனம்
- சீ'தலீ காகசஞ்சுக்ககும்புகம்.
1.துர்வாஸ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அத துர்வாஸ ஆஸனம்
டீச ஜாங்த பரிகரி ஜீமணைள பக டீச பாஷீதீ ஆணி /
புணா தோஉ தரதி டேகீ பாரலா குலபு குலா கீ பாரிலீ காநீ ல்காவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யு /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர ல்காவை /
ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர ர்த்த
ல்காவை /
த்ர்ஷ்டி த்ரிகுட ஆஸண கெலகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
[Figure: துர்வாஸ ஆஸனம் front view]
செய்யும் முறை:
- தண்டி போல் அமரவும்.
- வலது முழங்காலை வளைத்து, வலது பாதத்தின் மேல் பகுதியை இடது தொடையின் கீழ் வைக்கவும்.
- இடது முழங்காலை வளைத்து, இடது பாதத்தின் மேல் பகுதியை வலது தொடையின் கீழ் வைக்கவும்.
- வலது தொடையின் மேல் இடது தொடையை வைக்கவும் மற்றும் இடது முழங்கால் வலது முழங்காலைத் தொட வேண்டும்.
- கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
- புருவ மத்தியைக் கூர்ந்து பார்க்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
துர்வாஸ ஆஸனம்
2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகாசஞ்சுசகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-143
அத சீ'தலீ-காகசஞ்சுசகும்பக:
காக-சஞ்சு-வதாஸ்யேனாபூர்ய வாயுMedium நிரோதயேத் /
ஊர்த்வ-ஜிஹ்வாம் ஸமானீய பிபேத்தாராம்ரு'தம் ஸுதீ: //
ரேசயேத் க்ராணரந்த்ராப்யாம் சீ'தலீகாக-சஞ்சுக்க: // 143
மொழிபெயர்ப்பு
காக்கையின் அலகைப் போன்று வாயைக் குவித்து, அதன் மூலம் உள்ளிழுக்கப்பட்ட சுவாசம், புத்திசாலி மனிதனால் அடக்கப்பட வேண்டும். பின்னர் நாக்கை உயர்த்தி, வழியும் அமிர்த்தத்தை அவன் பருக வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளியிட வேண்டும். இதுதான் சீதலீ காகசஞ்சசகும்பகம்.
செய்நுட்பம்
- வாயை காக்கையின் அலகைப் போன்று வைக்கவும்.
- சுவாசத்தை வாயின் வழியாக உள்ளிழுத்து சுவாசத்தை நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தும்ேபாது, அமிர்தம் வழிவதாகவும், நாக்கை உயர்த்தி வழியும் அமிர்த்தத்தைப் பருகுவதாகவும் பாவனை செய்யுங்கள்.
- இனி சுவாசத்தை உள் நிறுத்த முடியாதெனும்போது இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியிடவும். இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.