வயோதிகத் தன்மையில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Ageing
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 4, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- அர்த பத்மாஸனம்
- சூ'ன்யககும்பகம்
- அப்யந்தரகும்பகம்
- பாஹ்யகும்பகம்
- கேவலீகும்பகம்
- போரோலிகாகும்பகம்
- கும்பராஜகும்பகம்
- ஸூர்ய-பேதனகும்பகம்
1. அர்த பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33
(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது அர்த பத்மாஸனம் எனப்படுகிறது.)
அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'ஸௌ' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதாம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடையின் மேல் வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மேல் வைக்கவும்.
- இந்த ஆஸனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.
2. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 23,24 வது ஸ்லோகம்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
அந்தஃகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
ஸுஷ்ம்ணாந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா /
தாரயேன்மாருதம் யோகீ ஸோஉந்த:கும்ப: சி'வோதித: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ செல்லும் பாதையான சுழுமனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹகும்பகம்.
செய்நுட்பம்
- எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்ஃக்ளட்ச் செய்தவாறே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
4. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக்:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது 'ஸஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலியை எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'ஸம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'ஸோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
- சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 21 முறை செய்யுங்கள்.
6. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
போரோலிகாகும்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
7. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134
அத கும்பராஜகும்பக:
பலாதாகர்ஷ்யேத்வாயும் யாவத் க்ராணஸுமுத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோSயமீரித: // 134
மொழிபெயர்ப்பு
வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
- நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
8. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஸூர்யபேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-127
அத ஸூர்ய-பேதனகும்பக:
தினேச’வர்த்மனாஆக்ரு’ஷ்ய பாஹ்யவாயும் ஸச’ப்தகம் /
யாவத் ஹ்ரு’த்கண்ட_யோக: ஸ்யாதானகா்ரசி’காக்ரகம் // 126
பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பீதம் சேடயா த்யஜேத் /
ஸூர்யபேதாக்ஷ-கும்பேSயம் புன: புனரிமம் சரேத் // 127
மொழிபெயர்ப்பு
ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தைச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஸூர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.
செய்நுட்பம்
1. தொண்டைக்குழி நிரம்பும்வரை வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
- பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.