KAILASA Library/வாழும் அவதார புருஷர்/வயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

வயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Ageing

நோய் பற்றிய விபரம்.

மனிதர்களின் முதுமை என்பது உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமுதாய மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

உயிரியல் கோட்பாட்டின்படி மூப்படைதல் என்பது முதிர்ச்சியடையும் வழிமுறையில் ஒரு நிலை. தனித்த உயிரணுக்களைப் பொறுத்தவரை மூப்படைதல் என்பது ஒரு தனி உயிரணு பிரிந்து வளரும் திறனில் ஏற்படும் குறைபாட்டைக் குறிக்கிறது. மன அழுத்தத்தைக் கையாள்கின்ற திறன் குறைந்துவருவது, உடலியக்கத்திற்கு உதவும் உறுப்புகள் மற்றும் செல்களின் செயல்பாட்டில் சமநிலையின்மை அதிகரிப்பது(homeostatic imbalance) நோய் உண்டாகக்கூடிய ஆபத்து அதிகரிப்பது ஆகிய வகைகளில் மூலமாக 'மூப்பு' வரையறுக்கப்படுகிறது.

சில ஆராய்ச்சியாளர்கள் (குறிப்பாக bio-gerontologists) விரைவில் முதுமையடைவதை ஒரு நோய் என்று சொல்கிறார்கள்.

முதுமையடைவதில் மரபணுக்களுக்குப் பங்கிருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்ததனால், முதுமையை காரணமாக்குகின்ற மற்ற மரபணு நோய்களைக் குணப்படுத்துவதைப் போன்றே இதையும் குணப்படுத்தும் வாய்ப்பிருக்கின்றது.

ஒவ்வொருநாளும் சுமாராக 1,00,000 பேர் உலகமுழுவதும் முதுமை/வயது சம்மந்தப்பட்ட காரணங்களில் மரணமடைகிறார்கள்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 3, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. அர்த பத்மாஸனம்
  1. க்ரு'த்திச்'ரேஷ்ட்_கும்பகம்
  1. ப்ரக்ரு'திகும்பகம்
  1. ஸமானகும்பகம்
  1. வ்யானகும்பகம்
  1. ஸமகும்பகம்
  1. சா'ந்தகும்பகம்

1. அர்த பத்மாஸனம், ஹடப்ரதீபிகா,

உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது அர்த பத்மாஸனம் எனப்படுகிறது.)

அத பத்மாஸனம்

உத்தாணௌ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தாணௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'சௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம்த பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)

Mூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
  1. இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவும்.
  1. இந்த ஆஸனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.
அர்த பத்மாஸனம்

அர்த பத்மாஸனம்

2. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69

அஅத க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:

நோப்யாம் சாகர்ஷயேத் வாயு்ம் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமானயேத் /
உத்க்ரு'ஷ்யோத்க்ரு'ஷ்ய ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட_தாலௌ ப்ரு' வோந்தரே //
மூர்த்நாந்தம் சேத்-கதாயாத-க்ரு'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69

மொழிபெயர்ப்பு

இரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்து ச்சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருத்திச்ரேஷ்டகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
  1. அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை முடிந்த அளவு உச்சந்தலையிலேயே நிறுத்தி வைக்கவும்.
  1. உங்களால் மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

அத ப்ரக்ரு'தி:கும்பக:

வான்விதேனாஸு'கம் கர்ஷிந் குர்வந்துரச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

மொழிபெயர்ப்பு

ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

1. அதே ஆஸனத்தில் அமரவும்.

  1. 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
  1. பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.

4. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே

ஸமானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62

அத ஸமானகும்பக:

நாபாவாபூர்ய வாயுச்’சேத் தேஹே વ்யாப்ய விதாரித: /
கும்பீதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62

மொழிபெயர்ப்பு

தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யுங்கள்.
  1. பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

5. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே

வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66

அத வ்யானகும்பக:

பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு’ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாங்கஸ்ய-ஆகுஞ்சநேந கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேநோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/

மொழிபெயர்ப்பு

இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதும்மாக இறுக்க வேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.
  1. இயல்பான சுவாசத்திற்கு வரவும்.

6. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே

ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

அத ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு'கம் த்'ரு'தி: /
ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
  1. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
  1. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

7. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே

சா'ந்தகும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 90

அத சா'ந்தகும்புக:

காயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா'ந்த கும்புக உதாஹ்ரு'த: /
ஸ்தானயோராந்தரே రుத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள்.
  1. முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உள்ளே நிறுத்தும்போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு உள்ளே நிறுத்த முடியாதபோது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.