KAILASA Library/வாழும் அவதார புருஷர்/மூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

மூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Asthma

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 14, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. துர்வாஸ ஆஸனம்
  1. நாககும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்
  1. த்ரிசூலகும்பகம்
  1. கூர்மகும்பகம்
  1. ஸமகும்பகம்

1. துர்வாஸ ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87

அத துர்வாஸ ஆஸனம்

டாச ஜாங்ந பரிகரி ஜீமணௌ பக டாச பாஷதீ ஆணி /
புணா தோஉ தரதி டேகீ பாரலா குலபு குலா கீ பாரிலீ கானீ ல காவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யு /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர ல காவை /
ஊபரா தலீ ஸாதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த
லகாவை /
த்ரிஷ்டி த்ரிகுட ஆஸண கௌகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்

துர்வாஸ ஆஸனம்

செய்நுட்பம்

  1. தரையில் அமர்ந்து கொள்ளவும்.
  1. வலது முழுங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  1. இடது முழுங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  1. வலது கையின் விரல்நுமிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
  1. கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
  1. புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே

நாககும்ப௄க:, கும்ப௄க-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

ATHA NĀGAKUMBHAḤ

ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பு: சி'வோதித: /
க்ஷு தாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தூரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.

4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லகும்பக:

கோணாப்ப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

5. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே கூர்மகும்பகḥ, கும்பக-பத்ததிḥ, ஸ்லோகம் 79

அத கூர்மகும்பகḥ

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதிḥ /
நேத்ரயோச்’வ ச’ரீரஸ்ய கூர்மகும்பḥ ஸ உச்யதே // 79

மொழிபெயர்ப்பு

கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
  1. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  1. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
  1. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  1. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

6. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே ஸமகும்பகḥ, கும்பக-பத்ததிḥ, ஸ்லோகம் 99

அத ஸமகும்பகḥ

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு’கம் த்’ரு’தி: /
ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
  1. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
  1. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.