மூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Asthma
நோய் பற்றிய விபரம்.
மூச்சிரைப்பு நோய், காற்றுப்பாதையில் ஏற்படும் ஒரு நாட்பட்ட வீக்க நோய். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாக இருக்கிறது. பின்னோக்கிச் செல்லும் காற்று ஓட்டத்தில் ஏற்படும் தடை, மூச்சு நுண் குழாய்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் மீண்டும் மீண்டும் தோன்றும் அறிகுறிகளைப் பொறுத்து இவை பல வகைபடுகின்றன. மிகுந்த முயற்சியுடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப் பகுதியில் இறுக்கம், குறுகிய மூச்சு போன்ற அறிகுறிகளும் இந்நோய்க்கு உண்டு.
அடுத்தடுத்து ஏற்படும் அறிகுறிகளுக்கு இடையிலான இடைவெளி, 1 வினாடியில் வெளியேற்றும் வெளிமூச்சுத் தேக்கக் கொள்திறனின் அளவு (Fevi 1), மிக அதிக வேகமாக சுவாசத்தை வெளியேற்றும் போது வெளியேற்றும் வெளிமூச்சுத் தேக்கக் கொள்திறனின் அளவு ஆகியவற்றைக் கொண்டு மூச்சிரைப்பு நோயை மருத்துவரீதியாகக் கண்டறிகிறார்கள். மூச்சிரைப்பு நோயை வெளியிலிருந்து (Atopic) தோன்றுபவை, உள்இருந்து (Non-atopic) தோன்றுபவை என்று 2 வகைப்படுத்தலாம். பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணி- இவை இரண்டின் இணைப்பின் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
கடுமையான அறிகுறிகளுக்கு சார்ட்-ஆக்டிங் பீடா-2 (Short- acting beta-2 ) சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோயை அதிகப்படுத்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களையும், எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களையும் தவிர்ப்பதன் மூலமும், கார்ட்டிகோ ஸ்டீராய்ட்களை (Corticosteroids) உள்ளிழுப்பதன் மூலமும் இதன் அறிகுறிகளைத் தவிர்க்கலாம். Leukotriene antagonists, இவை கார்ட்டிகோ ஸ்டீராய்ட்களைவிட ஆற்றல் குறைந்ததாக உள்ளன. அதனால் அவை குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. அறிகுறிகளின் தன்மை அல்லது சிகிச்சைக்குப் பயனளிக்கும் தன்மை, கால அளவு ஆகியவற்றைக் கொண்டு இந்த நோயை வகைப்படுத்துகிறார்கள்.
1990 ம் ஆண்டிலிருந்து மூச்சிரைப்பு நோய் அதிகமாகி வருகிறது. 2010 ஆம் ஆண்டு கணக்குப் படி 300 மில்லியன் மக்கள் உலகளவிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2009 இல் மூச்சிரைப்பு நோயின் மூலம் 2,50,000 மக்கள் உலகளவில் மரணமடைந்தனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 13, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- ஸித்தாஸனம்
- நாககும்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
- த்ரிகு'லகும்பகம்
5. ஸமகும்பகம்
1. ஸித்தாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7
அத ஸித்தாஸனம்
யோனிஸ்தானகமங்க்ரிமூல கடிதம் ஸம்பீட்ய குல்பேதரம்
மேட்ரோபார்பத ஸந்நிதாய சிபுகம் க்ரு'த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /
ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோSசல-த்'ருசா'-பச்'யன்-ப்'ருவோரந்தரம்
ஏதந்மோக்ஷகபாட_பேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சி களை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது ஸித்தாஸன என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.
செய்நுட்பம்
- ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைக்கவும்.
- முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
- முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
- புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
- இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.

ஸித்தாஸனம்
2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
நாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாகும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
3. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.
4.ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிசூ'லரும்பக:
கோணாப்ப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலக்கும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அத கூர்மகும்பக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மமும்ப꞉ ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்மும்பகம் கூர்மமும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
- இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
6. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
ஸமக்ரும்பக꞉, கும்பக-பத்ததி꞉, ஸ்லோகம் 99
அथ ஸமக்ரும்பக꞉
ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸ'கம் த்'ரு'தி꞉ /
ஸம꞉ கும்போ பகவதா ப்ரோக்த꞉ ஸ்ரீசந்த்ரமௌலினா // 99
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமக்ரும்பகம்.
செய்நுட்பம்
- சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
- உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
- அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
- இனியும் சுவாசத்தை அடக்க முடியாது என்னும்போது தளர்வாகுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.