KAILASA Library/வாழும் அவதார புருஷர்/மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Arthritis

நோய் பற்றிய விபரம்

மூட்டுவாதம் என்பது மூட்டுக்களில் ஏற்படுகின்ற சீர்குலைவு. நாட்பட்ட நோய், மூட்டில் ஏற்படுகின்ற நோய்த்தொற்று அல்லது வயது போன்றவை மூட்டுவாதத்திற்குக் காரணங்களாக அமைகின்றன. வாதமூட்டழற்சி, கீழ்வாதம், செதில்மூட்டுவாதம் மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதனால் ஏற்படும் மூட்டுவாதம் என நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டுவாதங்கள் இருக்கின்றன. பொதுவாக அதிகளவில் காணப்படும் மூட்டுவாதமானது முதுமை மூட்டுவாதமாகும்.

புரை மூட்டுவாதம், மூட்டுக்களில் ஏற்படும் நோய்த்தொற்றால் ஏற்படுகின்றது. மூட்டுவாதம் உள்ளவர்களுள் பெரும்பாலானவர்களின் குறையீடாக இருப்பது மூட்டுவலியாகும். அந்த வலியானது முதலில் அடிக்கடி ஏற்பட்டு, பிறகு தொடர்ந்து மூட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் நிலைத்துநின்றுவிடுகிறது. சில சமயம் இந்த வலியானது மூட்டைச் சுற்றி எரிச்சலை ஏற்படுத்தும்.

மூட்டைச் சுற்றி ஏற்படும் வீக்கம், வியாதியால் மூட்டிற்கு ஏற்படுகின்ற சிதைவு, நாள்தோறும் ஏற்படுகின்ற தேய்மானம். இறுக்கமாக இருக்கும்போது இயக்கப்படுவதால் ஏற்படுகின்ற தசைப்பிடிப்பு, மூட்டுக்களில் ஏற்படுகின்ற வலி மற்றும் சோர்வு போன்றவையே மூட்டுவாதத்தால் ஏற்படும் வலிக்குக் காரணங்களாக அமைகின்றன. மூட்டுச் சிதைவுகளான தோல் நோய் மற்றும் மூட்டுவாத அழற்சி போன்றவை கையைப் பயன்படுத்த இயலாமை அல்லது நடக்க இயலாமை, சோர்வு, காய்ச்சல் எடையிழப்பு, தசைவலிகள் மற்றும் தலை மென்மையாதல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் உடலின் மற்ற உறுப்புக்களையும் பாதிக்கும். மூட்டுவாதமானது ஒருவர் உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பதே மிகவும் கடினமானது என்ற நிலைக்கு கொண்டுவந்துவிடும். மேலும் உடல்பருமன், உயர்கொழுப்பு அல்லது இதய நோய் போன்றவற்றையும் உண்டாக்கிவிடும். நோய் அறிகுறிகள் மோசமாக இருப்பதினால் ஏற்படும் பயத்தினால் மூட்டுவாதம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வும் உண்டாகும்.

க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 1, 2011.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பத்ராஸனம்
  1. சூ'ன்யகும்பகம்
  1. கேவலகும்பகம்
  1. போரோலிகாகும்பகம்
  1. த்ராடககும்பகம்
  1. வாமகதிகும்பகம்
  1. குமுதகும்பகம்
  1. க்ரமநேத்ரகும்பகம்

1. பத்ராஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37

அத பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷ்ணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்'வயொ: க்ஷிபேத் /
பார்ச்'வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு'டம் பத்த்வா து நிச்'சலம் // 37

மொழிபெயர்ப்பு

பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.

செய்நுட்பம்

  1. தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
  1. ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
  1. இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
  1. இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.
பத்ராஸனம்

பத்ராஸனம்

2. பத்ராஸனத்தில் இருந்தபடியே

சூ'ன்யகும்பக:, ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
  1. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத் தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. பத்ராஸனத்தில் இருந்தபடியே

கேவலகும்பக:, ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 64 அத கேவலகும்பக:

ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுதம் யத்வாயுதாரணம் /
ப்ராணாயாமோSயமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடியாதபோது தளர்வாகவும்.
  1. மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. பத்ராஸனத்தில் இருந்தபடியே

போரோலிகாகும்பக:,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  1. கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5 பத்ராஸனத்தில் இருந்தபடியே த்ராடககும்பஃ,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
  1. சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
  1. முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

6. பத்ராஸனத்தில் இருந்தபடியே வாமகதிகும்பகஃ

ஹட ஸங்கேத சந்த்ரிகா 10வது அத்யாயம், 28வது வரி

செய்நுட்பம்

  1. இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சரியான முறையில் சுவாசத்தை நிறுத்துங்கள்
  1. சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

7. பத்ராஸனத்தில் இருந்தபடியே குமுதகும்பகஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190

அத குமுதகும்பக:

பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

8. பத்ராஸனத்தில் இருந்தபடியே க்ரமநேத்ரகும்பகஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

அத க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

மொழிபெயர்ப்பு

வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.

செய்நுட்பம்

  1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.

இதனை 21 முறை செய்யுங்கள்.