KAILASA Library/வாழும் அவதார புருஷர்/முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Stiff Knees & Knee Pain

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 12, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

1.பத்மாஸனம்

  1. நாககும்பகம்
  1. ப்ராமரீகும்பகம்
  1. குமுதகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
ஊருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'ஸௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம்த் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாஸ'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

பத்மாஸனம்

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

பத்மாஸனம்

2. பத்ம ஆஸனத்தில் இருந்தபடியே

நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாககும்பக:

ஓதன-க்ராஸவத்வாயும் கண்டே_னாபூரயேச்சனை: /

தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பு: சி'வோத்தி: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. பத்ம ஆஸனத்தில் இருந்தபடியே

ப்ராமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169

அத ப்ராமரீகும்பக:

அலிச'ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /
ஸாலிச'ப்தாச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169

மொழிபெயர்ப்பு

ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

1. 'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.

  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.

4. பத்ம ஆஸனத்தில் இருந்தபடியே

குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190

அத குமுதகும்பக:

பூரயேச்சந்த்ரமார்கேண த்ரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள். சுவாசத்தை வெளிவிடும்போது வலி உங்கள் உடலைவிட்டுச் செல்வதாக பாவனை செய்யுங்கள்.
  1. இதை 7 முறை செய்யுங்கள்.