முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Stiff Knees & Knee Pain
நோய் பற்றிய விபரம்
முழங்கால் மூட்டு வலி என்பது அநேக மக்களுக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டுவலிக்கான காரணங்கள் பல உள்ளன. முழங்கால் மூட்டு வலிக்கான காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வும், அறிவும், அந்த நோயை விரைவில் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை எடுப்பதற்கும் உதவுகிறது. முழங்கால் வலி, முழங்கால்மூட்டு இணைப்பிலேயோ அல்லது முழங்காலைச் சுற்றியோ இருக்கலாம். முழங்காலை அதிகமாக பயன்படுத்துவதனாலோ அல்லது திடீர் என்று அங்கு காயம் ஏற்பட்டாலோ முழங்கால் வலி ஏற்படுகிறது
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 11, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- துர்வாஸ ஆஸனம்
- நாககும்பகம்
- ப்ராமரீகும்பகம்
- குமுதகும்பகம்
1. துர்வாஸ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அித துர்வாஸ ஆஸனம்
டாஈ ஜாங்க் பரிகரி ஜீமணைள பக டாஈ பாஷதீ ஆணீ /
புணா தோஉ தரதி டேகீ பாரலா குலபு குலா கீ பாரலீ காநீ லகாவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யு /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர லகாவை /
ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த
லகாவை /
த்ரிஷ்டி த்ரிகுட ஆஸண கெளகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல
ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமர்ந்து கொள்ளவும்.
- வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
- கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
- புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
நாக்கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாக்கும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டே_னாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77
கண்டே_ன ரேசனம் குர்யாத் நாக்கும்ப: சி’வோதித: /
க்ஷு தாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட் ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ராமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169
அத ப்ராமரீகும்பக:
அலிச’ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /
ஸாலிச’ப்தாச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- “ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமுதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.