KAILASA Library/வாழும் அவதார புருஷர்/மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Schizophrenia

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 30, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. குபாணாஸனம்
  1. வ்யானகும்பகம்
  1. நாககும்பகம்
  1. ஸஹிதகும்பகம்
  1. சூ 'ன்யகும்பகம்
  1. கோசகஆஸனம்
  1. போரோலிகாகும்பகம்
  1. கேவலகும்பகம்

1. குபாணாஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 92

அத குபாணாஸனம்

ஆஸண கெள குண ஜோலோ ஜாயை / 92

செய்நுட்பம்

  1. தரையில் அமர்ந்து கொள்ளவும்.
  1. இடது பாதத்தை வலது தொடைப்பகுதி துவங்கும் இடத்தில் இடுப்பு இணைப்பில் வைக்கவும்.
  1. வலது முழங்காலை வளைத்து, வலது பாதத்தை இடது முழங்காலுக்கு அருகில் வைக்கவும்.
  1. இடது முழங்கை வலது முழங்காலுக்கு வெளியில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  1. இப்போது இடது கையால் வலது பாதத்தைப் பிடித்துக் கொள்ளவும்.
  1. வலது காதில் வலது கை பெருவிரலை வைத்து, மற்ற விரல்களை வெளியே நீட்டியவாறு வைத்துக் கொள்ளவும்.
குபாணாஸனம்

குபாணாஸனம்

(இந்த ஆஸன நிலை உங்கள் மூளை விழிப்படைவதற்கான மின்சுற்றை ஏற்படுத்தும்)

2. குபாணாஸனத்தில் இருந்தபடியே

வியானகும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 66

அத வியானகும்பக:

பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சனேன கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/

மொழிபெயர்ப்பு

இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வியான கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.
  1. இயல்பான சுவாசத்திற்கு வரவும்.

3. குபாணாஸனத்தில் இருந்தபடியே

நாககும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாககும்பக:

ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சிவோதித: /
க்ஷு தாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

4. குபாணாஸனத்தில் இருந்தபடியே

ஸஹிதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 85

அத ஸஹிதகும்பக:

பூர-ரேசயுத: கும்பொ வாயோர்-யத்ர விதீயதே /
ஸஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸஹித: ஸர்வஸி்த்தயே // 85

மொழிபெயர்ப்பு

பூரக ரேசகத்துடன் மூச்சு நிறுத்தப்படும்போது ஸஹிதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

5. குபாணாஸனத்தில் இருந்தபடியே

சூ'ன்யகும்பக:, ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும். சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
  1. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். 3. உச்சந்தலையில் நிலா இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
  1. அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

6. கோசக ஆஸனம்

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 175-178

அத கோசக ஆஸனம்

தோவு ஹாத சீதாஸா கரே தினஸோ உபை ஈஸ பகரை /
பக உசாய ஆகா னே ஆனே பஹுரி ஜுகதி ஐஸீக விதி டானேம் // 175

தோவு ஹாத விசி பகரு ஸரீர பாடக பிசே லடகாவே தீர /
முகீ தீஸா தூஸரீ ராகே திஷ்ட ஆனி த்ரிகுடமத்ய ராகை // 176

யஹ ஆஸன சடதோ ஸதை தீன பந்தராதக ஸோய /
யாஸோம் நாஸே ந்ஹாகோ ஜே கதாசித ந ஹோய // 177

பஹுரி தூத ஜாதீ தமே திவஸ தீன கே மாஹி /
புன டைரு நாஸே துரத யேதே ரோக நஸாய // 178

செய்நுட்பம்

  1. பின்புறமாகப் படுத்துக் கொள்ளவும்.
  1. இரு கைகளையும் அகற்றி விரித்துக் கொள்ளவும்.
  1. முழங்கால்களை மடக்கி, தொடைப்பகுதியை மார்பின் மீது வைத்துக் கொள்ளவும்.
  1. கால்களைச் செங்குத்தாக வைக்கவும்.
  1. புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
கோசக ஆஸனம்

கோசக ஆஸனம்

7.கோசக ஆஸனத்தில் இருந்தபடியே போரோலிகாகும்பக:,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  1. கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

8. கோசக ஆஸனத்தில் இருந்தபடியே கேவலகும்பக:,

ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 64

அத கேவலகும்பக:

ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுதம் யத்வாயுதாரணம் /
ப்ராணாயாமோSயமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்..
  1. உங்களால் முடியாதபோது தளர்வாகவும்.
  1. மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.