மனக்கோளாறு வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Schizophrenia
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
நோய் பற்றிய விபரம்
எண்ணம் மற்றும் உணர்ச்சீரீதியான பதிற்செயல்களில் காணப்படும் குளறுபடிகளும் அதாவது மாறிக் கொண்டே இருக்கும் சிந்தனை மற்றும் செயற்பாடுகளும்தான் ஸ்கிஸோஃப்ரினியா நோயின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. மாயத்தோற்றங்கள் தெரிவது போன்றும், மாயக்குரல் கேட்பது போன்றும் இருத்தல், பிறரைக்கண்டு அஞ்சு தல், மற்றவர்களை நம்பாமை, தெளிவற்ற பேச்சு மற்றும் சிந்தனை, சமுதாய ரீதியான மற்றும் தொழிற்ரீதியான செயற்பாடுகளிலும் ஏற்படும் பிறழ்ச்சி-இவை எல்லாமும் கூட ஸ்கிஸோஃப்ரினியா நோயின் அறிகுறிகளே.
பரம்பரைக்கூறு, முன்பு வாழ்ந்த சூழ்நிலை, நரம்புக் கோளாறுகள், மற்றும் மனரீதியான சமூகரீதியான தாக்கங்கள் இவையே இந்நோய் ஏற்படுவதற்குப் காரணங்களாகின்றன. உல்லாச களியாட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளும் இந்நோய் மேலும் முற்றுவதற்கு காரணங்களாகின்றன.
உணர்வளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய் நடவடிக்கைகளிலும் உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்கள் மனச் சோர்விற்கும் கவலைக்கும் ஆட்படுகின்றனர். சமுதாயத்திலிருந்து விலகி இருத்தல், உடையிலும் சுத்தத்திலும் அக்கறையற்றதன்மை, நோக்கமும் உத்வேகமும் அற்ற வாழ்க்கை முறை, அமைதியாக அசைவற்ற சிலைபோல் அமர்ந்து கொள்ளுதல் அல்லது தேவையற்ற ஆர்ப்பாட்டம் என்று எல்லாவகையான உணர்விழப்பின் கோளாறுகளும் காணப்படும்.
விடலைப் பருவத்தின் இறுதிக்காலமும், முதுமையின் ஆரம்பக்காலமும் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் காலங்களாகின்றன. இளம்வயதினரின் கற்கும் காலமும் சமூக வாழ்வும் இதனால் பாதிப்படைகின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 29, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- நேதி ஆஸனம்
- வ்யானகும்பகம்
- நாககும்பகம்
- ஸஹிதகும்பகம்
- சூ'ன்யகும்பகம்
- பஞ்ஜோத்திததனாஸனம்
- போரோலிகாகும்பகம்
- கேவலகும்பகம்
1. நேதி ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகம் 54-57
அத நேதி ஆஸனம்
கோடா பாவா பாதகீ ஆத மாஹிலீ ஸோய /
தச சரண கோ வாரலௌ தாபரி குலப ஸமோய // 54
வாம பாதகோ மாஹிலௌ பஹுரௌ குலப ஜு ஜான /
தாபரி கோடா தசிகீ ஆங்க சாஹ பாஹர லீவான // 55
பஹுரி பூஜா தோஉ கரகீ ஜோஹ கஹூண்யா ல கதீ பகரை ஸோஹ /
புஜௌ பஸாரி அதர கரி ராகை / நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 56
தோஹா ஹாதஸோ ஆடை வாஸ / மதை பூஜா மதாண கீ நாஸ //
ஸகல பவன மத்யோ யூம் ஜாவை / ஸோ புனி நேதி நாம કહாவை // 57
நேதி ஆஸனம் நிலை 1

செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள்.
- வலது பாதத்தை இடது முழங்காலின் கீழும், இடது பாதத்தை வலது முழங்காலின் மீதும் வைக்கவும்.
- வலது கையால் இடது முழங்கையையும் இடது கையால், வலது முழங்கையையும் பிடித்துக் கொள்ளவும்.
- முன்னே நீட்டி, மத்து கடைவதுபோல் எதிரெதிர்த் திசையில் அசைக்கவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
- இதனை மெதுவாகச் செய்யுங்கள்.
- இதனை 30 வினாடிகள் செய்யுங்கள்.


நிலை 2
நிலை 3
2. நேதி ஆஸனத்தில் இருந்தபடியே
வியானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அத வ்யானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாங்கஸ்ய-ஆகுஞ்சனேன கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: // 66 /
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்
- ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக்காட்சியில் கொண்டுவரவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
- இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
3. நேதி ஆஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பு: சி'வோதித: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
4. நேதி ஆஸனத்தில் இருந்தபடியே
ஸஹிதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 85
அி ஸஹிதகும்பக:
பூர-ரேசயுத: கும்போ வாயோர்-யத்ர விதீயதே /
ஸஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸஹித: ஸர்வஸிித்ைதே // 85
மொழிபெயர்ப்பு
பூரக ரேசகத்துடன் மூச்சு நிறுத்தப்படும்போது ஸஹிதகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- உங்களால் முடிந்த அளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- மெதுவாக இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5. நேதி ஆஸனத்தில் இருந்தபடியே
சூ'ன்யகும்பக:, ஸெளர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது, உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப்பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. பஞ்ஜோத்திததனாஸனம்,
யோகாஸனம், ஸ்லோகங்கள் 9,10
அத பஞ்ஜோத்திததனாஸனம்
சரணஸ்யாக்ரபாகேனோத்திஷ்டேத் பூவல்தலே முனி: /
க்ரு’த்வா ஹஸ்தபரியஸ்தீம் ஸித்தம் ஸேவேத ஸித்தயே // 9
வாதசு’த்திஸ்தீவ்ர-வஹ்னி: கார்ய-ஸித்திரனேன ச /
யத்ர தத்ர ஸ்திதிரேவம் பஞ்ஜோத்திததனாஸனம் // 10

பஞ்ஜோத்திதகனாஸனம்
செய்நுட்பம்
- முன்னங்கால்களில் நிற்கவும்.
- கைகளைக் குறுக்கே கட்டிக் கொள்ளவும்.
- மார்புக்கு நெருக்கமாகக் கைகளை வைத்துக் கொள்ளவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
7. பஞ்சோத்திததனாஸனத்தில் இருந்தபடியே
போரோலிகாகும்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
8. பஞ்சோத்திததனாஸனத்தில் இருந்தபடியே
கேவலகும்பக:, ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 64
அத கேவலகும்பக:
ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுதம் யத்வாயுதாரணம் /
ப்ராணாயாமோஸயமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
- உங்களால் முடியாதபோது தளர்வாகவும். 4 மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும். இதனை 21 முறை செய்யுங்கள்.