KAILASA Library/வாழும் அவதார புருஷர்/மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Hot Flashes in Menopause

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 14, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. வஜ்ராஸனம்
  1. கர்ஷககும்பகம் 2.1 உத்கர்ஷகும்பகம், 2.2 அபகர்ஷகும்பகம்
  1. ஸமகும்பகம்

1. வஜ்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12

அஅத வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பூவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12

மொழிபெயர்ப்பு

தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

வஜ்ராஸனம்

செய்துாட்பம்

  1. முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  1. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.

வஜ்ராஸனம்

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

கர்ஷக கும்பக:,

கும்பக-பத்ததி: - ஸ்லோகங்கள் 101, 102

கர்ஷககும்பகம் 2 வகைப்படும்.

  1. உத்கர்ஷகும்பகம்,
  1. அபகர்ஷகும்பகம்.

உத்கர்ஷ கும்பகத்தில் மூக்கின் தொடக்கத்தைப் பிடித்துக் கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். அபகர்ஷக கும்பகத்தில் நாசிகளை ஓரளவு மூடி சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.

1) உத்கர்ஷகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 101

அத உத்கர்ஷகும்பக:

நாஸாமூலம் முத்ரயித்வா ததக்ரே ரேசபூரகௌ /
குர்யாதுத்கர்ஷகம் கும்ப: ஸ்வயமுக்த: ஸ்வயம்புவா // 101

மொழிபெயர்ப்பு

மூக்கின் தொடக்கத்தைப் பிடித்துக் கொண்ட பின்பு சுவாசத்தை உள்ளிழுங்கள், வெளிவிடுங்கள் வேண்டும். இதுவே ஸ்வயம்பு சிவா உரைத்த உத்கர்ஷகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. மூக்கின் தொடக்கத்தைப் பிடித்து நாசித்துவாரங்களை அடைக்கவும். (மூக்கு எலும்பு எங்கு ஆரம்பிக்கிறதோ அந்த இடத்தில் பிடிக்கவும்.)
  1. உள்ளுக்குள்ளேயே சுவாசத்தை உள்ளிழுங்கள், வெளிவிடுங்கள் வேண்டும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்யுங்கள்.
  1. பிறகு நாசித்துவாரங்களை விடுவித்துவிட்டு மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

2) அபகர்ஷகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 102

அத அபகர்ஷகும்பக:

த்ராணார்த்தம் முத்ரயித்வாதோபாகே யத்ரேசபூரகௌ /

குர்யாத்ஸ ப்ரம்ஹணா ப்ரோக்த: கும்பகோ ஹ்யபகர்ஷக: //102//

மொழிபெயர்ப்பு

நாசிகளை ஓரளவு மூடி, சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செய்யும் இதுவே பிரம்ம தேவனால் விளக்கப்பட்ட அபகர்ஷககும்பகம்.

செய்நுட்பம்

  1. நாசிகளை பாதியளவு மூடவும்.
  1. இப்பொழுது சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. நாசிகளை பாதியளவு மூடிக்கொண்டு, மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

அித ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸ'கம் த்'ரு'தி: /
ஸம: கும்பொ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொண்டையில் நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்ப்போது தளர்வாகுங்கள்.

5. இதை 11 நிமிடங்கள் செய்யுங்கள்.