மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Hot Flashes in Menopause
நோய் பற்றிய விபரம்
அதிக வியர்வை என்றும், இரவு வியர்வை என்றும் கூறப்படும் Hot Flashes in Menopause ஏற்படும் கடுமையான வியர்வையானது இரவில் தூக்கத்தை முற்றிலுமாகத் தொந்தரவு செய்வதாக இருக்கும். இதனால் தூக்கமின்மை வியாதி கூட ஏற்படலாம். இதன் மூலம் மன நிலை மாறுபடுதல், கவனக் குறைவு, மற்றும் இதர உடல் பிரச்சினைகள் ஏற்படும். இதுவே இரவு வியர்வை என்று சொல்லப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் எனும் சுரப்பி இரவில் குறைவாக இருக்கும். இது போன்ற ஹார்மோன்களின் அளவு குறைதல் என்னும் அறிகுறிகள் மாதவிடாய் நிற்பதை தெரியப்படுத்தும். பொதுவாக மாதவிடாய் நிற்கப்போகும் காலத்தில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்படும். வெப்பம் முதலில் முகம் அல்லது மார்புப் பகுதியில் உணரப்படும், பின்பு கழுத்தின் பின்புறம் தொடங்கி உடல் முழுவதும் பரவும்; வெளியே உள்ள தோல்பகுதிகளிலும் ஏற்படும். மேல்புறத் தோல், குறிப்பாக முகம் தொடுவதற்குக் கூட அதிக வெப்பமாக இருக்கும் இதனால் முகம் சிவந்து காணப்படும். அதிகப்படியான வெப்பத்தினால் நுண் குருதிப் புடைப்பு ஏற்படலாம்.
இந்த அதிக வியர்வை என்பது ஒவ்வொரு வாரத்திலும் பல தடவைகள் ஏற்படலாம் அல்லது தொடர்ந்து நாள்முழுவதும் இருக்கலாம். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி மாதவிடாய் நின்ற பின்பு சில ஆண்டுகள்வரை நீடிக்கலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது அதிக வியர்வை என்பது ஏற்படுவதேயில்லை. சில பெண்களுக்கு மிதமாக அல்லது எப்போதாவது அதிக வியர்வை ஏற்படும். சில பெண்களுக்கு பகலில் அதிக வியர்வை ஏற்படாமல் இரவில் ஏற்படும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 13, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பகாஸனம்
- ஸமகும்பகம்
- சாந்தகும்பகம்
- கதாகும்பகம்
- உஜ்ஜாயீகும்பகம்
- ஸீத்காரீகும்பகம்
1. பக ஆஸனம்,
அத பக ஆஸனம்
வாமபார்ஷ்ணௌ-குதம்-ஸ்தாப்ப்ய தக்ஷாங்க்ரிம் வாமஜாதனே /
மத்யமாதர்-ஜன்யங்குஷ்டை நாஸாத்ரு'ஷ்டி ச்'ருதீ: க்ரமை: // 23
ச்சாத்யஜ-பேஜ்ஜினம் ப்ருவி மனோலாத்வா-ஸ்திரம் மன: /
ஏவம்-விதாஸனம் யத்ர தத்ர ஸாதோ பகாஸனம் // 24

செய்நுட்பம்
- இடது குதிகாலை ஆசனவாயிலில் படுமாறும், வலது பாதத்தை இடது தொடையிலும் வைத்து அமரவும்.
- கண்களை ஆள்காட்டி விரலாலும், நாசிகளை நடுவிரலாலும், காது களைக் கட்டை விரலாலும் மூடவும்.
- உணர்வைப் புருவ மத்தியில் ஒன்றாக்கவும்.
- ஸத்குருநாதர் அல்லது இஷ்ட தெய்வத்தைத் தியானிக்கவும்.
- இதே நிலையில் 1 நிமிடம் இருக்கவும்.
பக ஆஸனம்
2. பகாஸனத்தில் இருந்தபடியே
ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
அத ஸமகும்பக:
ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு'கம் த்'ரு'தி: /
ஸம: கும்பொ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நுட்பம்
- சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
- உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொண்டையில் நிறுத்துங்கள்.
- இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்ப்போது தளர்வாகுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. பகாஸனத்தில் இருந்தபடியே
சா'ந்தகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 90
அத சா'ந்தகும்பக:
காயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா'ந்த கும்பக உதாஹ்ரு'த: /
ஸ்தான்யோராந்தரே రుத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.
செய்நுட்பம்
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உள்ளே நிறுத்தும்போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு உள்ளே நிறுத்த முடியாதபோது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
4. பகாஸனத்தில் இருந்தபடியே
கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
அத கதாகும்பக:
உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி'வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே
சுவாசத்தை வெளிவிடுவது கதாாும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
- இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5. பகாஸனத்தில் இருந்தபடியே
உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132
அத உஜ்ஜாயீகும்பக:
முக்2ம் நியம்ய நாடீப்யாமாக்ரு’ஷ்யாஸு2ம் நியோஜயேத் /
குண்ட³லீ-பார்ச்’வயோர்: பச்’சாத் கும்ப³யேது³தர-ஸ்தி2தம் //131//
ரேசயேதி³யா வாயும் கச்ச்2ன்-திஷ்ட்2ன்-யதா² சரேத் /
உஜ்ஜாயீ-கும்ப³க: ப்ரோக்த: சி’வேநாகில-வேதி²னா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
- மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.

6. பகாஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138
அத ஸீத்காரீகும்பக:
ரஸனாமுன்முகீ-க்ரு’த்ய ஸீத்காரம் குர்வதா மருத் /
பீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137
ரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீத்யமானாம் விசிந்தயேத் /
ஸீத்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திதர: ஸதாம் // 138
மொழிபெயர்ப்பு
நாக்கை மேல்நோக்கி மடக்கி, 'ஸீத்' என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய சித்திகளை அளிக்க வல்லது.
செய்நுட்பம்
- நாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.
- 'ஸீத்' என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
- சுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
- இதனை 21 முறை செய்யுங்கள்.