இருமனக்குழப்பம் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care for Bipolar Disorder
நோய் பற்றிய விபரம்
இருமனக் குழப்பம் என்னும் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் மன ரீதியாகக் களிப்பு, சோர்வு என்னும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மாறிமாறி உண்டுபண்ணும் பித்தக் கோளாறினால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக இந்நோய் நீண்டநாள் மனச்சோர்வினால் ஏற்படுகிறது. இதை மருத்துவ ரீதியாகச் சொல்லும்போது ‘பைத்தியம்’ எனச் சொல்லால் குறிக்கின்றனர். பொதுவாக இவர்கள் பார்ப்பதற்கு மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் போல்தான் காணப்படுவார்கள். சில பேர் மட்டுமே பைத்தியமும் மனச்சோர்வும் கலந்த நிலையை வெளிப்படுத்துவார்கள்.
தீவிர பைத்திய நிலை, சில சமயங்களில் மாயத்தோற்றங்கள் காணும் நிலைக்கும், மருட்சி நிலைக்கும் வழிவகுக்கும். எல்லோருக்கும் ஒரே போன்ற அறிகுறிகள் தென்படுவதில்லை. உடலைப் பரிசோதிப்பதன் மூலம் இந்நோயைக் கண்டறிய முடியாது.
ஒருவர் இருமனக் கோளாறால் பாதிக்கப்பட்டவரா அல்லது வெறுமனே ஒரு முனைக் கோளாறான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவரா என்பதை எப்படிக் கண்டறிவது? மனச்சோர்வும், பைத்திய நிலையும் மாறி மாறி இருந்தால் அவர் இருமனக் கோளாறு உள்ளவர் என்றும், மனச்சோர்வினால் மட்டும் அதிகமாகப் பாதிக்கப்படும் மனிதர் ஒரு முனைக்கோளாறினால் (Unipolor Depression) பாதிக்கப்பட்டவர் என்றும் அறிந்து கொள்ளலாம்.
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 11, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- கல்யாண-ஆஸனம்
- புஜங்கி கர்ணகும்பகம்
- குரகட ஆஸனம்
- புயங்கமகும்பகம்
- கூர்ம ஆஸனம்
- த்ராடககும்பகம்
1. கல்யாண-ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 337-339
அथ கல்யாண-ஆஸனம்
தோூ ஹாத பகாம் விசி ஆனே தினகோ கோடா நீசை டானை /
பஹுரி பாதத்யா பாஹரி ல்யாவை புனஹ யுகதி ஐஸை டஹராவை // 337
பஹுரி மோடி பாடா நே ஆனே கரி பரில்யாஇ காகஸீ டானை /
தோூ பாத அதர கரி ராகை நாஸா அக்ர த்ரிஷ்ட கோ தாகை // 338
பவன தாரணா ஸஹித ஜோ ஆஸன ஸாதை தீர /
திவஸ ஸாத ஸாதன கியா ந்ரு'மல ஹோய ஸரீர // 339

கல்யாண-ஆஸனம்
செய்நுட்பம்
- குத்துக்காலி்ட்டு அமருங்கள்.
- இரு கைகளையும் முழங்கால்களுக்குக் கீழே கொண்டு வரவும்.
- பாதங்களை இரு கைகளாலும் பூட்டுப் போட்டதுபோல் பிடித்துக்கொள்ளவும்.
- பாதங்களை முடிந்த அளவிற்கு உயர்த்தவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் சமன்படுத்திக் கொண்டு சில வினாடிகள் இருக்கவும்.
2. கல்யாண-ஆஸனத்தில் இருந்தபடியே
புஜங்கி கர்ணகும்பஃ,
ஹட ரத்னாவலீ அத்யாயம் 2, ஸ்லோகம் 32
செய்நுட்பம்
1. தொண்டைப் பகுதியில் உங்கள் விழிப்புணர்வை வைத்து, சுவாசத்தைத் தொண்டை வழியாக விழுங்கவும்.
- முடிந்தளவு சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
- பின்பு தொண்டை வழியாகவே சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. குரகட ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 325-327
அத குரகட ஆஸனம்
தோஉ ஹாத பக பாஹர ல்யாவை கோடா நீசை லே டஹராவை /
ஆம்ஹாம் ஸாம்ஹாம் ஐஸை கரை ஆபஸ மேம் கோஹணீ பகரைம
//325
உபை ஹாத கீ உபை கலாஈ கோடாStandard காதாம் தே ஆஈ /
ஐஸை தாவி உகட பைஸை நாஸாஅக்ர த்ரிஷ்டி ரஹை நைஸை //326
ஜோ கதாசி கஹு பாந்திகீ ஹோய பாஸல்யாம் வாய் /
யா ஆஸனஸௌ நைத கஹி தீவஸ தீன மை ஜாய // 327

குரகட ஆஸனம்
செய்நுட்பம்
- குத்துக்காலி்ட்டு அமருங்கள்.
- தொடை மற்றும் கணுக்கால் தசைகளுக்கு இடையில் கைகளை நுழைக்கவும்.
- முழங்கைகளை இடது மற்றும் வலது கைகளால் மாற்றிப் பிடித்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
4. குரகட ஆசனத்தில் இருந்தபடியே புயங்கமரும்புக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 487-490
செய்நுட்பம்
- நாக்கை சற்று மேலே உயர்த்தி கொஞ்சம் முன்னால் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- நாக்கை உள்ளிழுத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை முடிந்தளவிற்கு உள்ளே நிறுத்துங்கள்.
- எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5. கூர்ம ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 348-350
அத கூர்ம ஆஸனம்
ப்ரதம பதம ஆஸன கோ கரை கோடாஸந்தி மாஹி கரி தரை /
தரபு தூஸரீ கர தோஊ ஆனே கோஹண்யா உபர ஸந்தி லே டானே // 348
குதீ பசீ தோஊ கர ல்யாவை தஹாம் ஆனி காம்கஸீ கராவை /
புன லலாட பூஉபர தரை நாஸா அக்ர த்ரு'ஷ்டி திர கரை // 349
ரோக நாஸ ஸப ஹோத ஹை பாதாலி தலீ ஸோய /
ஜயதராம குர்ம ஸ்புரகும நிஹசை ஜாணௌ ஜோய // 350
கூர்ம ஆஸனம்
[Figure: நிலை 1]
நிலை 1
நிலை 2
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடையும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- தொடை மற்றும் கணுக்கால் தசைகளுக்கு இடையில் இரு கை களையும் நுழைக்கவும்.
- கைகளை மேல் நோக்கித் தூக்கி, பிடரியில் கை விரல்களைக் கோர்த்துக்கொள்ளவும்.
- இப்போது முன்னால் குனிந்து, முன் தலையால் தரையைத் தொடவும்.
- மூக்கு நுனியில் பார்வையைப் பதிக்கவும்.

நிலை 3
6. கூர்ம ஆஸனத்தில் இருந்தபடியே த்ராடககும்பஃ,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.