KAILASA Library/வாழும் அவதார புருஷர்/இருதய நோய்களில் இருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

இருதய நோய்களில் இருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Heart Diseases

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 4, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பிச்'ரக ஆஸனம்
  1. கேவலீகும்பகம்
  1. மூர்ச்சாகும்பகம்
  1. ஸஹிதகும்பகம்

1. பிச்'ரக ஆஸனம்,

யோக ப்ரதீபிகா, ஸ்லோகம் 198

அத பிச்'ரக ஆஸனம்

தோஉ பகாங்கி ஏட ஜோஈ கோடபுணோம் வாணோம் புனி ஹோஈ /
கோடா ஜங்க அதர கரி ராகை ஆடேவாஹ இஸீ விதி தாகே //

பிச்ரக ஆஸனம்

பிச்ரக ஆஸனம்

செய்நுட்பம்

  1. பாத விரல்கள் மட்டும் தரையில் படுமாறு, முட்டிபோட்டு, குதிங்கால்களின் மீது அமருங்கள்.
  1. முழங்கால்களைப் பக்கவாட்டில் தரையில் விரித்துக் கொள்ளவும்.
  1. உள்ளங்கைகளைக் கூம்பு வடிவமாக்கி வாய்மேல் வைத்துக் கொள்ளவும். பெருவிரல்களைப் பற்களுக்கு அடியில் வைத்து உதடுகளை மூடிக்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியில் பார்வையை நிலையாக வைக்கவும்.
  1. வலது நாசி வழியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. வாய் வழியாக, சுவாசத்தை எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக வெளியிடவும். 7.இதை 21 முறை செய்யுங்கள்.

2. பீச்'ரக ஆஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பஃ,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84

அத கேவலீகும்பஃ:

ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /

மொழிபெயர்ப்பு

ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலி எழுப்புகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், ‘ஸம்’ என்ற ஒலியை மனத் திற்குள் எழுப்புங்கள்.
  1. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள் நிறுத்தும்டீபாது, ‘ஸோஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
  1. சுவாசத்தை வெளிவிடும்போது, ‘ஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 21 முறை செய்யுங்கள்.

3. பீச்'ரக ஆஸனத்தில் இருந்தபடியே மூர்ச்சாகும்பஃ,

ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 60

அத மூர்ச்சாகும்பஃ:

பூரகாந்தே காடதரம் பத்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா ஸுத-ப்ரதா // 4-60

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்ப்ராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.

செய்நுட்பம்

  1. அதே நிலையில் இருக்கவும்.
  1. உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
  1. இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.
  1. முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.

4. பீச்'ரக ஆஸனத்தில் இருந்தபடியே

ஸஹிதகும்ப_க்_ (நிகர்ப்_)

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகம் 55

அஅத ஸஹிதகும்ப_க்_

உத்தம விம்ச'திர்மாத்ரா ஷோடஸீ மாத்ரா மத்யமா /
அதம த்வாதசீ' மாத்ரா ப்ராணாயாமாஸ்த்ரிதா ஸ்ம்ரு'தா: // 55

மொழிபெயர்ப்பு

சிறந்த பிராணாயாமம் 20 மாத்திரைகளைக் கொண்டதாகவும், மத்திம பிராணாயாமம் 16 மாத்திரைகளைக் கொண்டதாகவும், கடைவகை பிராணாயாமம் 12 மாத்திரைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசிகள் வழியாகவும் 20 நொடிகள்வரை சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. 80 நொடிகள்வரை சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இரண்டு நாசிகள் வழியாகவும் 40 நொடிகள்வரை சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.