இருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Heart Diseases
நோய் பற்றிய விபரம்
கார்டியோவாஸ்குலர் (Cardiovascular) என்பது இருதயத்தைப் பாதிக்கும் நோய்களைக் குறிக்கும் சொல். இருதயத்திலேயே ஏற்படும் பாதிப்புகள் முதற்கொண்டு இருதயத்திலிருந்து தொடங்கும் அல்லது இருதயத்தில் வந்து முடியும் இரத்த நாளங்கள், நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு வரை உள்ள எல்லா நோய்களும் 'இருதய நோய்கள்' என்றே வகைப்படுத்தப்படுகின்றன.
சிலருக்கு பிறவியிலேயே இருதயக் கோளாறுகள் இருக்கலாம். இதைத்தவிர இடையில் பெறப்பட்ட அல்லது ஏற்படும் இருதயக் கோளாறுகள் மூன்று வகைப்படும்.
1. புகைப்பிடித்தல், அதிககொழுப்புச்சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களினால் இருதய இரத்த சம்பந்தப்பட்ட நாடி நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் வரும் இருதயக் கோளாறு (Coronary Artery Disease)
2. Congestive Heart Failure (CHF) இரத்த ஏற்றத்தின் (Pumping) சராசரி வேகம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்படும் இருதயக் கோளாறு
3. Bad Heart Rhythms இருதயத் துடிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இருதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஒரு மனிதன் இருதய நோயோடு இருந்தாலும் நோயைப் பற்றிய உணர்வில்லாமல் அதாவது அந்த நோயினால் துன்பப்படாமல் இருக்க முடியும். சிலர் இருதயக் கோளாறின் அறிகுறிகளை உணர முடியும். இருதய தசைகள் தேவையான அளவுக்கு சுருங்கி விரியாததால் இருதயத்தில் வலி, நுரையீரலுக்குள் இரத்தம் பின்னேறுவதால் மூச்சுத்திணறல், அதிக இருதய துடிப்பு (Palpitations), கை கால் வீக்கம், சத்தற்று உணர்தல், தோல் நீல நிறமாக மாறிவிடுதல் (Cyanosis), அதாவது உடல் அணுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது உடல் நீல நிறமாக மாறிவிடுதல் போன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படுகின்றன.
கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 3, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- புஜங்காஸனம்
- உட்டீயான பந்தம்
- ஜாலந்தர பந்தம்
- பத்ராஸனம்
- சீதலீகும்பகம்
- ஸீதகாரீ ப்ராணாயாமம்
1. புஜங்காஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 41-42
அத புஜங்காஸனம்
அங்குஷ்ட-நாபி-பர்யந்தமதோ- பூமெள விநின்யஸேத்/
கரதலாப்யாஞ்ச தராம் த்'ரு'த்வா ஊர்த்வ-சீ'ர்ஷ: பணீவ ஹி // 2.41
தேஹாக்னிர்-வர்த்ததே நித்யம் ஸர்வ-ரோக-விநாச'னம் /
ஜாகர்தி புஜகீ தேவீ புஜங்காஸன-ஸாதநாத் // 2.42
மொழிபெயர்ப்பு
தரையில் கவிழ்ந்துபடுத்து, இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, தொப்புள் பகுதியிலிருந்து பாதங்கள்வரை உள்ள உடற்பகுதி தரையில் படுமாறு வைத்து, உடலின் மேற்பகுதியையும், தலையையும் பாம்புபோல் உயரத் தூக்கவும். இது, 'புஜங்காஸனம்' எனப்படுகிறது. இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, அனைத்து வியாதிகளையும் நீக்குகிறது. மேலும் இது, குண்டலினி சக்தியை விழிப்புற்றச் செய்கிறது.

புஜங்காஸனம்
செய்நுட்பம்
- நெற்றியும் மார்பும் வயிறும் கால்களும் தரையில் படும்படி நேராகப் படுக்கவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால்களைச் சேர்த்துவைத்து, பாதங்களை நிமிர்த்தி வைக்கவும்.
- தோள்பட்டைகளுக்கு அருகில் உங்கள் உள்ளங்கைகளைத் தரையில் படும்படி ஊன்றவும். கைவிரல்கள் ஒன்று சேர்ந்தும், நேராகவும் இருக்க வேண்டும்.
- உங்கள் முழங்கைகள் பின்புறமாகவும், உடலோடு ஒட்டியும் இருக்க வேண்டும்.
- கண்களை மூடி, மொத்த உடலையும் தளர்வாக்குங்கள், முக்கியமாக, முதுகுப் புறத்தின் கீழ்ப்பகுதியைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
- தலை, கழுத்து மற்றும் தோள் பட்டைகளை மெதுவாக உயர்த்துங்கள். உடலை மேலே உயர்த்துவதற்கு, உள்ளங்கைகளை உபயோகப்படுத்துவதை விட, முதலில் உடலின் பின்புறகுதி தசைகளைப் பயன்படுத்துங்கள். பிறகு உள்ளங்கைகளைப் பயன்படுத்தி உடற்பகுதியை இன்னும் மேலே உயர்த்தி, பின் பகுதியை வளைக்கவும்.
- தொப்புள் பகுதிக்குக் கீழ் உள்ள உடல்பகுதி தரையோடு ஒட்டி இருக்கட்டும்.
- தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்க்கவும். அப்படியானால்தான், உங்கள் முகவாய்க்கட்டை சிறிது உயர்த்தப்பட்டு கழுத்தின் பின்புறகுதி சுருக்கப்பட்டு அழுத்தப்படும்.
- உங்கள் கைகள் நேராகவோ அல்லது சிறிது வளைந்தோ இருக்கலாம்.
- இந்த இறுதி நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.
- பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும். அதற்கு முதலில் தலையை முன்புறம் நேராகக் கொண்டுவந்து, தொப்புள் பகுதியைத் தரையில் படும்படி வைத்து, நெற்றியையும், தோள்பட்டைகளையும் தரையில்படும்படி தளர்வாக வைக்கவும்.
- முழங்கைகளைப் பின்புறமாக மடக்கி, உடலோடு ஒட்டி இருக்க வைத்து, முதுகுப்புறத்தின் மேல்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் தளர்வாக்குங்கள்.
- இந்த நிலையில் 60 நொடிகள் இருக்கவும்.
2. புஜங்காஸனத்தில் இருந்தபடியே
உட்டியான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அத உட்டியான பந்த:
உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: /
உட்டியானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து புஜங்காஸனத்தில் இருங்கள். கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச்சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்உறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
- இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், தலையைத் தரையில் வைத்து தளர்வாக்கி, ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. புஜங்காஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12
அாத ஜாலந்தரபந்த:
கண்ட_-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபகம் ஹ்ரு'தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசா'ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும். செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
- தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
4. பத்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 9-10
அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு'ஷ்ணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டௌ கராப்யாஞ்ச த்ரு'த்வா ச ப்ரு'ஷ்ட_தேச'த: // 2-9
ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பூவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டகோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

பத்ராஸனம்
செய்நுட்பம்
- (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
- கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
- மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.
- ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
5. பத்ராஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74
அथ சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாத்யேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ஸு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள். சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
6. பத்ராஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீ ப்ராணாயாமம் , ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் குர்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.