அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Addiction
அடிமைப்பழக்கங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்ல,அவற்றைத் திடீரென நிறுத் தும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகளும் பின்விளைவுகளும்கூட தோன்றுகின்றன. அவற்றிலிருந்து விடுபடவும் இக் கிரியாவைப் பயிற்சிசெய்யுங்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 12, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- ஸித்தாஸனம்
- வ்யானகும்பகம்
- கூர்மகும்பகம்
- நாககும்பகம்
- ஜோனீ ஆஸனம்
- ப்ரக்ரு'தி:கும்பகம்
- அக்னீஷோமாத்யகும்பகம்
1. ஸித்தாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 7
அத ஸித்தாஸனம்
யோனிஸ்தானகமங்க்ரிமூலபடிதம் ஸம்பீட்ய குல்பேதரம்
மேட்ரோபாயத ஸந்நிதாய சிபுகம் க்ரு'த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /
ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோsசல-த்ரு'சா'-பச்யன்-ப்ரு'வோரந்தரம்
ஏதன்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7.
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது ஸித்தாஸனம் என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.

ஸித்தாஸனம்
செய்நுட்பம்
- பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
- முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
- முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
- புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
- இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அத வ்யானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்க வேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி தம் அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்
- ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டுத் தளர்வாகுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
- இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
3. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அத கூர்மகும்பக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்ட_மிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
4. ஸித்தஸனத்தில் இருந்தபடியே
நாககும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பஃ
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதா காலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பஃ சி'வோதித: /
க்ஷு தாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
5. ஜோனீ ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 215-219
அத ஜோனீ ஆஸனம்
தோஉ பகதலீ ஸம்புட கரை ஏட மேட்ர கே டிங்க தரே /
அர்த ஹாத கோ அந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தாகேம் // 215
தஸே ஆங்குரீ அக்ர மிலாவை பூணா அக்ர பர லே பஹராவைம் /
கஹூணீ லோம் பூபரி கர தாகை நலீ அர கஹூணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாத்ரிஷ்டி ல காவே தீர /
முத மாரக ஸோ வாச கஹை அஸக்த ஹோய தஹாம் லௌ ரஹே // 217
இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜுகதி விசாரை /
சட்தௌ சட்தௌ கும்பக ஸாதை வார ஸாத யா ஜுகதி அராதை // 218
பந்த ஹோய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய /
யா ஆஸன கை கரதஹீ த்ரவீபூத ஸோ ஹோய // 219

ஜோனீ ஆஸனம்
செய்நுட்பம்
- கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
- இரண்டு குதிகால்களை ஒன்று சேர்க்கவும்.
- முன்பக்கமாகக் குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக் கொள்ளவும்.
- இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
6. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அத ப்ரக்ரு'தி:கும்பக:
வாம்விதேனாக'கம் கர்ஷன் குர்வந்துரச்சதரம் ஸ்வநம் /
தாரயேச்சை-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
- பிறகு மெதுவாகச் சாதா ரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
7. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாத்யகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87
அத அக்னீஷோமாத்யகும்பக:
ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யென த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாத்யகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாக்யகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.