அடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Addiction
நோய் பற்றிய விபரம்
பழக்கத்திற்கு அடிமையாதல் (Addiction) என்ற சொல் உடலளவிலும், உள்ளத்தளவிலும் மனத்தைத் தூண்டும் ஏதாவது ஒரு பழக்கத்தைச் சார்ந்திருத்தலைக் குறிக்கிறது.
உதாரணத்திற்கு... போதைப்பொருள் உட்கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், புகைத்தல் அல்லது புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களைச் சொல்லலாம்.
மூளைக்குச் செல்லும் இரத்த இயக்கத்தையே தடை செய்துவிடும் இவற்றை ஒருமுறை ஒருவர் பயன்படுத்திவிட்டாலே போதும், மூளையில் சுரக்கும் இரசாயணத்தில் தற்காலிக மாற்றத்தை இவை ஏற்படுத்திவிடும்.
பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது ஒன்று, இப்படிப்பட்ட மனத்தைத் தூண்டும் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, இரண்டு, அதன் பின்விளைவாக ஏற்படக்கூடிய பிற தீயபழக்கங்களையும் குறிக்கும்.
சில மனவியல் ஆராய்ச்சியாளர்கள், வீடியோ கேம்ஸ், பாலியல் படங்கள், கணினி, வலைதளம், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்த்தலும், உணவு, வேலை, உடற்பயிற்சி, பாலியல் உறவு, சூதாட்டம் போன்ற செயல்களில் அதிகளவில் ஈடுபடுவதும்கூட பழக்கத்திற்கு அடிமையாதலே (Addiction) என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, மன ரீதியாக அவற்றை அதிக அளவு சார்ந்திருத்தலும்கூட பழக்கத்திற்கு அடிமையாதலே (Addiction) என்கின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகள், மூளையில் பீட்டா-என்டோர்ஃபின்ஸை (beta-endorphins) சுரக்கச் செய்கின்றன. இந்த இரசாயணம் ஒரு மனிதனை தன்னை ஒரு மேம்பட்ட மனிதனாக எண்ணத் தூண்டுகிறது. இப்படிப்பட்ட எண்ணம் நாளடைவில் அம்மனிதனை அடிமைச் சுற்றுக்குள் சிக்கவைத்துவிடுகின்றது.
அதன்பிறகு அம்மனிதன் தன்னுடைய மூளையில் சுரக்கும் இரசாயணத்திற்கு அடிமையாகி, அப்பழக்கங்களினால் தனக்கு உடலளவிலும், சமுதாய அளவிலும் தீமையே விளையும் என்று தெரிந்தாலும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் குறிப்பிட்ட செயலையே தொடர்ந்து செய்வார்.
போதைப் பொருட்களால் மட்டுமன்றி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 11, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- பத்ராஸனம்
- கேவலீகும்பகம்
- கபாலபாதி ப்ராணாயாமம்
- ஜோனீ ஆஸனம்
- லஹரி ப்ராணாயாமம்
- ப்ராமரீ கும்பகம்
- ப்லாவினீகும்பகம்
1. பத்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 9-10
அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டௌ கராப்யாஞ்ச த்ரு'த்வா ச ப்ரு'ஷ்ட-தேச'த: // 2-9
ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டகோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

பத்ராஸனம்
- (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
- கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
- மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
- ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது 'ஸஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'ஸம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். 4. சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'ஸோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
5. சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 21 முறை செய்யுங்கள்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100
செய்நுட்பம்
- வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. ஜோனீ ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 215-219
அத ஜோனீ ஆஸனம்
தோட பகதலீ ஸம்புட கரை ஏட மேட்ர கே டிங்க தரே /
அர்த ஹாத கோ அந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தாகேம் // 215
தஸே ஆங்குரீ அக்ர நிலாவை புணா அக்ர பர லே பஹராவைம் /
கஹூணீ லோம் பூபரி கர தாகை நலீ அர கஹூணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாத்ரிஷ்டி லகாவே தீர /
முத மாரக ஸோ வாச કહஹை அஸக்த ஹோய தஹாம் லௌ ரஹே // 217
இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜுகதி விசாரை /
சட்தௌ சட்தௌ கும்பக ஸாதை வார ஸாத யா ஜுகதி அராதை // 218
பந்த ஹோய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய /
யா ஆஸன கை கரதஹீ த்ரவீபூத ஸோ ஹோய // 219
செய்நுட்பம்
- கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
- இரண்டு குதிங்கால்களை ஒன்று சேர்க்கவும்.
- முன்பக்கமாகக் குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக்கொள்ளவும்.
- இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.

ஜோனீ ஆஸனம்
6. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
5. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
லஹரி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100
செய்நுட்பம்
- ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
6. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ராமரீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82
அத ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதீ யோகீ ஜந்தூனாம் ச்'ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79
மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு'தங்காதிநிநாதநக-துந்துபி:// 5.80
ஏவம் நாநாவிதொ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹதத்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, 'ம்' என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
- இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.
இந்தக்கும்பகத்தை செய்து முடித்த 10-15நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
7. யோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்லாவினீகும்பகḥ, கும்பக-பத்ததிḥ, ஸ்லோகம் 171
அத ப்லாவினீகும்பகḥ
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்த்வா ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.