KAILASA Library/வாழும் அவதார புருஷர்/நித்ய கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

நித்ய கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான பொக்கிஷம்

குணமளிக்கும் யோக முறைகளை இந்த நித்ய கிரியாவின் மூலம்... வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர், தற்கால மனித சமுதாயத்திற்கு ஏற்ப புதுபித்துள்ளார்.தற்காலத்தில் இருக்கும் நடைமுறை வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வளித்து பயனளிக்கும் வகையில் எளிமையான நுட்பங்களாக வடிவமைத்துள்ளார்.அவ்வாறு பரமஹம்ஸரால் வெளிப்படுத்தப்பட்ட யோகநுட்பமுறைகளையே ‘நித்யகிரியா’ என்கிறோம்.

நித்ய கிரியாவின் தனித்துவமே, அது மேன்மையும் புனிதமும் வாய்ந்த யோக வேத நூல்களின் ஆதாரத்திலிருந்து பெறப்பட்டு, காலத்தால் நிரூபிக்கப்பட்ட அனுபவ அறிவையும், செயல்முறை நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே! அதோடு மட்டுமல்லாமல் பரமஹம்ஸர் தம் சொந்த அனுபவங்களிலிருந்து பெற்ற நுட்பமுறைகளையும் அதனோடு ஒருங்கிணைத்துக் கொடுத்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.

பரமஹம்ஸ நித்யானந்தர் ஒரு சிறந்த யோகி. காலத்தால் மறைந்துபோன, இன்றைய நவீன யுகயோக புத்தகங்களில், காணப்பட முடியாத பல யோக நுட்பமுறைகளை பயின்றவர். அவர், தம்முடைய சிறுவதிலிருந்தே யோக ஆற்றல்களில் கரைகண்ட சிறந்த யோககுருமார்களினால், அசாதாரணமுறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்.

ஏன் நித்ய கிரியா?

இன்றைய இந்தியா தன்னுடைய பொக்கிஷமாக விளங்கும் யோகப் பாரம்பரியத்தையே இழந்துவிடும் அபாயகரமான கட்டத்தில் நிற்கிறது. ஏனென்றால், ஒரே இரவில் யோகத்தைக் கற்றுக் கொண்டு, அதை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிவிடும் யோக ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கீழை நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மேலை நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ‘யோகா’ என்ற பெயரில், சில உடற் பயிற்சிகளையும் மூச்சுப்பயிற்சிகளையும் இணைந்த ஒரு கலவையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு, யோகத்தை பற்றிய போதிய அறிவு இல்லாததால், அவர்களும் இந்த ஆசிரியர்களின் நம்பகத்தன்மையப் பற்றி எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து யோகத்தை மீட்டெடுத்து, அதை எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாத்து வைக்கும் நோக்கத்தோடுதான் நித்ய கிரியா அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் எண்ணற்ற ஞானிகள், தங்களுடைய வாழ்வையே இந்த யோக விஞ்ஞானத்தை மேம்படுத்த அர்ப்பணித்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த உள்ளுணர்வு விஞ்ஞானத்தை, ஆராய்ச்சிகள் செய்து, அடுத்தடுத்து நிலைக்கு மேம்படுத்திய ஞானிகளின் பங்களிப்பை நம்மால் கணக்கிடமுடியாது, அளவிடமுடியாது. எத்தனையோ ஞானிகள் தங்கள் உடல், மனம், ஆன்மா மூன்றையும் அர்ப்பணித்து கண்டெடுத்த இந்த விலைமதிக்கமுடியாத வைரத்தைத் தவறவிடவோ அல்லது உருத்தெரியாமல் சீர்குலைக்கவே வா விடப்போவதில்லை என வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸர் நித்யானந்தர் உறுதிமேற்கொண்டிருக்கிறார்.

யோகமும் கிரியையும் - இன்றைய நவீனயுக மனிதனுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். ஆனால் அதே சமயத்தில், யோக ஞானிகளான கோரக்நாதர், மத்ஸ்யேந்திரநாதர் போன்றவர்கள் கற்றுக்கொடுத்த யோக சாஸ்திரத்தின் சாரம் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் எனும் இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறும் வகையில், பரமஹம்ஸ நித்யானந்தர் நித்ய கிரியாவை வடிவமைத்துள்ளார்.

பரமஹம்ஸர், யோக வல்லுனர்களான கோரக்நாதர், மத்ஸ்யேந்திரநாதர் போன்றவர்களின் யோகப் பயிற்சி முறைகளை அடிப்படையாக வைத்து, இன்றைய நவீனயுகமனிதனுக்கும் பயன் அளிக்கும் வகையிலும் தம்முடைய குருமார்களிடமிருந்து கற்ற நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வழங்கியிருக்கிறார்.

நமது யோக குருமார்கள், தம்முடைய சொந்த விழிப்புணர்வினாலும் பெற்ற பயிற்சிகளாலும் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து தொடர்ந்து நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மேம்படுத்துவதற்கான சாத்தியங்களையும், அதற்கான வாய்ப்புக் கதவுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றுமே எதையுமே இதுதான் இறுதி நுட்பம், இதற்குமேல் இதில் முயற்சி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி, அடுத்தடுத்த சாத்தியக்கூறுகளை அடைப்பதில்லை.

நித்ய யோகாவின் ஆன்மீக வேர் :

நித்யயோகா, தெய்வீகமான வேத நூல்களையே தன்னுடைய உறுதியான நங்கூரமாகக் கொண்டிருக்கிறது. நித்ய யோக ...பதஞ்சலி யோக சூத்திரங்களையும், யோகத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹடயோக பிரதீபிகா, கெரந்தஸம்ஹிதை மற்றும் சிவ ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப் பயிற்சிகளின் சாரமாகும்.

பதஞ்சலி யோக சூத்திரங்கள்

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டாலும், இந்நூல் அதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பதஞ்சலி முனிவரால் எழுதப்பெற்ற இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத் திகழ்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன. அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக முறைகளை, நம் வாழ்க்கை முறையாக மாற்றும்படி வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா : ஹடயோகப்ரதீபிகா, கோரக்நாதரின்சீடரானஸ்வாமிஸ்வாத்மாராமாவினால்எழுதப்பட்டது. இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப் பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார். யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து வந்து இந்த யோக நுட்பங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுகே அர்பணித்துள்ளார் இந் நூலாசிரியர்.

ஹட யோக ப்ரதீபிகா, நான்கு முக்கியமான உபதேசங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது, ஆஸனங்கள், பிராணாயாமங்கள், சக்கரங்கள், கிரியாக்கள், பந்தனங்கள், சக்தி, நாடிகள், முத்ராக்கள், குண்டலினி சக்தி போன்ற 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக, நூல்கள் எழுதப்பட்டபோது, மனித இயல்புகள் எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே இப்போதும் இருக்கின்றன. இருந்தாலும் நவீன யுக மனிதர்கள், வேறு சில முக்கியமான பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும், மூளையின் செயல்முறையிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை, சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற நினைத்தல் போன்ற சங்கடங்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது.

நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், யோக முறை... இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு, அவை எந்த அளவிற்குப் பயனளிக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம் மக்களுக்கு நிரூபிக்கப்பட்ட பிறகு அளிக்கப்பட்டுள்ளது.

நித்ய கிரியா மூன்று அடுக்குகளைக் கொண்ட பரிசோதனை முறையால் மலர்ந்த ஒரு நுட்பம்.

1. நித்யகிரியாவின் ஒவ்வொரு நுட்பமும், பரமஹம்ஸ நித்யானந்தர் தாமே பயிற்சி செய்து, தொகுத்துக்கொடுக்கப்பட்டதுட்பம்.பரமஹம்ஸநித்யானந்தர்,இன்றையநவீனயுகமனிதனின் சிக்கலான உடல், மன மற்றும் மூச்சு விகிதாசாரங்களுக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துள்ளார். இந்த ஆன்மீக நுட்பங்களுடன் தம்முடைய சொந்த புரிதலையும் சேர்த்துக் கொடுத்து, யோக விஞ்ஞானத்தை மெருகேற்றியிருக்கிறார்.

2. இந்த நுட்பம் முழுமையானவுடன், குறிப்பிட்ட சீடர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 21 நாட்களுக்கு அவர்களை சிரத்தையுடன் பயிற்சி செய்ய வைத்து, அதனால் பெறப்படும் பதில் விளைவுகளையும் பார்த்து, அதற்கு ஏற்ற நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதே போன்ற வெவ்வேறு கிரியாக்கள், அந்தந்த நோயாளிகளிடமும், விதிமுறைகளுக்குட்பட்ட ஒரு குழுவினரிடமும் பரிசோதிக்கப்படுகின்றன.

3. இந்த முறையில், போதிய அளவிற்குப் பரிசோதிக்கப்பட்ட பிறகு, இந்த கிரியாக்கள், வெவ்வேறு கலாச்சாரத்தையும், வயதினரையும், நாட்டையும் சேர்ந்த, உலகம் முழுவதிலுள்ள 1000 - 2000 தன்னார்வ தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. அவர்கள் பயிற்சி செய்தபின், அதை அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படுகிறது. இவர்கள் பரமஹம்சரின் நேரடியான கண்காணிப்பின் கீழோ அல்லது இருவழிக் காணொளி காட்சியின் மூலமாகவோ பயிற்சி செய்கிறார்கள்.

எந்த சீடர் தன் மனக்கதவுகளை குருவிடம் திறந்து வைக்கிறாரோ, அவருக்குள் இந்த கிரியைகள் மிகப்பெரிய உணர்வுமாற்றத்தை நிகழ்த்துகிறது என எல்லா யோக சாஸ்திரங்களும் பகர்கின்றன.

யார் வேண்டுமானாலும், இந்த யோக நுட்பங்களை, வெவ்வேறு யோக நூல்களிலிருந்து எடுத்து வெட்டி, ஒட்டி ஏதோ செய்து யோகாவைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதே கிரியாக்களை ஒரு ஞானகுருவின்முன் பயிற்சி செய்யும் போது கிடைக்கும் பலன்களை அளவிடமுடியாது. குறிப்பாக தம் உணர்வை முழுமையாகத் திறந்துவைக்கும், எதையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனப்பாங்கோடு இருக்கும்போது, நேரடியாக குருவிடம் தீக்ஷைபெறும் பங்கேற்பாளர்கள் அனைவரும், இந்த கிரியாக்களினால் அடையும் பலன்களை சொல்லிமாளாது.

உயர்ந்த விஞ்ஞானமாக, அதே சமயத்தில் ஒரு புதிர் அனுபவமாக இருக்கும் 'தீக்ஷை'யைப் பற்றி 'பிரதிபலிப்பு'தத்துவத்தை விளக்குவதன் மூலம் உங்களுக்கு ஓரளவாவது புரிய வைக்கமுடியும். ஒரு கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை, ஒரு இரும்புக்கம்பியால் சரியான அலைவரிசை முறைப்படி அடிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது. அதுபோல ஞானகுருவால் பாய்ச்சப்பட்ட சூட்சம சக்தியின் ஆற்றல், பங்கேற்பாளரின் சக்தியை உயர் ஆன்மீக நிலைகளுக்கு, அலைவரிசைகளுக்கு எடுத்துச் சென்றுவிடும்.

அந்த நேரங்களில், மனமும் உடலும் தங்களுடைய எதிர்ப்புத் தன்மைகளை இழந்துவிடுகின்றன. உடல் நலத்திலும், மனவளத்திலும் தங்களுக்கென்று இருக்கும் உயர்பட்ச சாத்தியக்கூறுகளை எட்டுகின்றன.

நம்மைநாமே குணப்படுத்திக் கொள்வதற்கு குண்டலினி சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்:

நித்ய கிரியாவின் தனித்துவமே, அது, பங்கேற்பாளருக்குள் எந்தவித பக்கவிளைவுகளையோ, எதிர் விளைவுகளையோ ஏற்படுத்தாத குண்டலினிசக்தியை விழிப்பிக்கச் செய்யும் ஒரு நுட்பமாகத் திகழ்வதுதான். குண்டலினிசக்தி என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும் அளப்பரிய சக்தியாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், குண்டலினி சக்தி ஒவ்வொரு தனி மனிதரும் அந்தப் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்வதற்கான Hot Line என்போம். சரியான யோகப்பயிற்சிகளாலும், குருவின் வழிகாட்டுதலாலும் கருணையாலும், ஒருமுறை குண்டலினி சக்தி விழிப்படைந்தால் போதும், அது அம் மனிதரின் மீது அளவற்ற ஆசீர்வாதங்களைப் பொழிகிறது. சக்தி நிலைகளில் உயர்வு, உடல்நலம், எதிர்மறை மனப்பாங்களிலிருந்து விடுபடுதல், உண்மையான உள்திருப்தி மற்றும் பிரபஞ்ச மூலத்துடன் ஒரு ஆழமான தொடர்பு போன்ற அனைத்து மங்களகரமான நிகழ்வுகளும், ஒருவருக்குள் குண்டலினி விழிப்படைவதால் நிகழ்கிறது.

Nithyananda teaching with a whiteboard

பரமஹம்ஸர் அருளிய நித்ய கிரியை விஞ்ஞானம்:

அறிமுகம்:

இரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், காற்று ஓட்டம், எண்ண ஓட்டம் என்று இருப்பது போன்று சக்தி ஓட்டம் என்கின்ற மற்றொரு ஓட்டமும் உங்களுக்குள் நிகழ்கின்றது.

இந்த சக்தி சுழற்சியின் சக்தி ஓட்டத்தில் ஒருவேளை சில பகுதியில் ஏதாவது தடை ஏற்பட்டால், உதாரணத்திற்கு கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயம், குடல் அல்லது சில பகுதியில் சக்தி ஓட்டத்தில் இடையூறு இருக்கும்போதுதான் நீங்கள் நோய்கள், ே காளாறுகள் மற்றும் தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். அப்பொழுது நோய்கள், கோளாறுகள், தொந்தரவுகள், போன்றவை தங்கள் பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடலில் இருக்கும் 7 சுற்றுகள் :

இரத்தச் சுற்று - சுழற்சி அமைப்பு
நரம்புச் சுற்று - நரம்பு மண்டலம்
பிராணச் சுற்று - சுவாச மண்டலம்
ஜீரணச் சுற்று (செரிமானச் சுற்று)
கழிவுச் சுற்று
இனப்பெருக்கச் சுற்று மற்றும்
சக்திச் சுற்று

இவற்றுள், சக்திச் சுற்றானது குண்டலினி சக்தியால் ஆளப்படுகிறது. இதைப்பற்றி மருத்துவ விஞ்ஞானம் அதிகம் பேசவில்லை. ஆனால் வேத பாரம்பரியத்தில் குண்டலினி சக்தியைப் பற்றிய குறிப்புகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

இயற்கையான அளப்பரிய ஆற்றல் மிக்க சக்தியாக ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் இருக்கும் குண்டலினி சக்தியானது இந்தச் சக்திச் சுற்று முழுமையடைவதற்கு உதவி செய்கிறது.

குண்டலினி சக்தி எவ்வாறு உடலின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றடைகிறது?

ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். தண்ணீர்த் தொட்டியை நாம் எடுத்துக் கொள்வோம்.

தண்ணீர்த் தொட்டி என்பது நீரைச் சேகரித்து வைக்கும் ஒரு கட்டமைப்பு. நீரானது பல இடங்களுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு ஒரு சுற்றை ஏற்படுத்துகிறது. தண்ணீர் இந்தக் குழாய்களின் மூலம், அதைப் பயன்படுத்துபவர்களுக்குச் சென்றடைவதைப்போல, குண்டலினி சக்தியும் 72,000 நாடிகள் எனப்படும் சக்திக் கால்வாய் வழியாக உடலில் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது.

தண்ணீர் குழாய்ப் பாதையில் எங்காவது அடைப்பு இருந்தால் பின்பு என்ன நிகழும்? தண்ணீர் அதற்குப் பிறகு செல்லாது. அங்கேயே நின்றுவிடும். பின்பு நீங்கள் அடைப்பைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். மேலும், அடைப்பு நீக்கப்பட்டாலும், தண்ணீர் திரும்பவும் ஓடுவதற்கு உந்தித் தள்ளப்படவேண்டும்.

தண்ணீர் ஓட்டத்தில் ஏற்படும் தடையைப் போல, உடம்பின் சக்திச் சுற்றில் அடைப்பு ஏற்படும் போதெல்லாம், சக்தி ஓட்டம் முன்னேற முடியாமல் அதற்குத் தடை ஏற்படுகிறது. அதன் விளைவாக அந்தக் குறிப்பிட்ட உறுப்பில் நோய் உருவாகின்றது.

தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருப்பதைப் போலத்தான் நம் உடலில் குண்டலினி சக்தி இருப்பதும் கிரியாக்கள், சக்தி அடைப்புக்களை நீக்குவதற்கும், மீண்டும் சக்தி ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் உதவும் மிக சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றன.

கிரியாவின்போது குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து உடம்பை ஒழுங்குபடுத்தும்போது சக்தி அடைப்பு நீக்கப்படுகிறது.

தண்ணீர்க் குழாயில் அடைப்பு நீக்கப்பட்ட உடனே எப்படித் தண்ணீர் உந்தித் தள்ளப்படுகின்றதோ, அதனைப்போல் அடைப்பு நீக்கப்பட்ட உடனே கும்பகமானது குண்டலினி சக்தியை உந்தித் தள்ளுகிறது.

சக்தி ஓட்டம் மறுபடியும் நிலைநிறுத்தப்படும்பொழுது சக்தி ஓட்டம் ஓடத்துவங்கிவிடுகிறது. பின்பு நோய் குணமடைகிறது.

கிரியாவின் போது, உங்களுடைய உடல் குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைக்கப்படும்போது, சக்தி அடைப்புகள் நீங்குகின்றன. சக்தி சுழற்சி சீராக்கப்படுகிறது. நரம்பு அமைப்பும் சீராக்கப்படுகிறது. அதன்பிறகு கும்பகம், சக்தி சுற்றுக்குள் சக்தியை உந்தித் தள்ளத் துவங்குறது. தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய உடலை ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் வைக்கும்போது, ‘சக்திசுழற்சி அடைப்பு நீங்குகின்றது. சுழற்சிமிகச்சரியாகநடைபெறுகின்றது. ஆனால் கும்பகத்தின் மூலம்தான் சக்தியைச் சுழற்சிக்குள் உந்தித் தள்ள முடியும். சரியாக இந்த அடிப்படையில்தான் கிரியா செயல்படுகின்றது. ஆசனங்கள், பிராணாயாமங்கள் மற்றும் கும்பகங்களின் ஒரு தனித்துவமான கலவையாகக் கிரியாக்கள் இருக்கின்றன. இவை தனிப்பட்ட ஆசனங்கள் மற்றும் பிராணாயாமங்களைவிட சக்தி வாய்ந்ததாகும்.

சக்தி சுழற்சிப் பாதை சீரமைக்கப்பட்டு, சில வினாடிகளாவது சக்தி உந்தித் தள்ளப்பட்டால்கூட நீங்கள் நோயில் இருந்து வெளிவந்துவிடுவீர்கள். நீங்கள் கோளாறுகளில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். நீங்கள் விடுதலை பெறுவீர்கள். இந்த கிரியைகள் வெறும் சாதாரண ஆசனங்களோ, சாதாரண யோகாவோ, சாதாரண கும்பகமோ, சாதாரண பிராணாயாமமோ அல்ல. இருவேறுபட்ட ரசாயணங்களை தனித் தனியாக எடுப்பது போன்றது. இவை மூலம் குணமளிப்பதற்கு 10 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் இவற்றைக் குறிப்பிட்ட ஒரு சரியான கலவையில் ஒன்று சேர்த்து ஒரே முறை எடுத்துக் கொண்டாலே போதும், இரண்டு நாட்களில் உங்கள் நோயை அகற்றிவிடும்.

கிரியாவிலிருக்கும் 7 விஷயங்கள்:

முதலாவது யோகா,

இரண்டாவது கும்பகம், பிராணாயாமம்,

மூன்றாவது பாவனை (காட்சியை உருவகித்துப் பார்த்தல்),

நான்காவது வார்த்தைப் படுத்துதல் அதாவது சில மந்திரங்களை உள்ளேயே உச்சரிப்பது. உள்ளேயே உருவாக்கப்படும் ஒலிக்கு மந்திரம் என்று பெயர். வெளியேயும் அதனைக் கேட்கும்போது உச்சாடனம் என்கிறோம். ஆகையால் மந்திரம் என்பது உள்ளுக்குள் உச்சரிக்கின்ற ஒலி.

ஐந்தாவது நீங்கள் கேட்கின்ற ஒலியை வெளியில் உச்சாடனம் செய்வது,

ஆறாவது கரணங்கள். இதில் புதிய கரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது; பலவித சிவத்தாண்டவ கரணங்கள்,

ஏழாவது சமீப காலத்தைய கண்டுபிடிப்பான நவீன உடற்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சிகள். இந்த ஏழு படிகளையும் ஒன்றாகச் சேர்த்து, உங்களுடைய உடலிலும், மனத்திலும் வேலை செய்து யோக உடம்பையும் வேத மனத்தையும் உருவாக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல், திண்மை, வளைந்துகொடுக்கும் தன்மை, கட்டுக்கோப்பான உடல் மற்றும் சக்தி இவையெல்லாமே இருந்தால்தான் அதை யோகசரீரம் என்று சொல்வோம். இந்த ஐந்தும் ஒன்றாக இணைவது யோக உடல்.

நித்ய கிரியை இந்த 7 விஷயங்களையும் உங்களுக்கு தருகிறது.

Photograph of Paramahamsa Nithyananda