KAILASA Library/வாழும் அவதார புருஷர்/மனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

மனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Depression

நோய் பற்றிய விபரம்

சாதாரணமாக மகிழ்ந்து அனுபவிக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளிலும் பொருட்களிலும்கூட ஆர்வமின்மை, தம்மைத் தாமே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளுதல் போன்ற உற்சாகமற்ற தாழ்நிலை மனநிலையையே (Low Mood) மனச்சோர்வு (Depression) என்கிறோம்.

இந்த நோய், ஒரு மனிதனின் சமுதாயம் சார்ந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், உணவுமுறை என எல்லாப் பரிமாணங்களையும் பெரும்பாலும் அழித்துவிடுகிறது என்றே சொல்லலாம்.

மனச்சோர்விற்குள்ளான மக்கள் பழைய விஷயங்களையே அசை போட்டுக் கொண்டிருப்பவர்களாகவும், எதற்கும் உதவாத எண்ணங்களைக் கொண்டவர்களாகவும், நம்பிக்கை இழந்தவர்களாகவும், தங்களுக்கு உதவயாருமே இல்லை என்ற எண்ணம் கொண்டவர்களாகவும், தங்களைத் தாங்களே வெறுப்பவர்களாகவும் இருப்பார்கள். பல சமயங்களில், மனரீதியான பிரச்சினைகளுக்கான அறிகுறிகளும் அவர்களிடம் காணப்படும்.

எளிதில் நோய்வாய்ப்படுகின்ற தன்மை கொண்டவர்களாகவும் மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைகொண்டவர்களாகவும் இருப்பதால், இவர்களின் வாழ்நாள் என்பது குறுகிய காலமாகவே இருக்கிறது. அமெரிக்காவில், தற்கொலை செய்துகொள்ளும் மக்களுள் 3.4 சதவீத மக்கள் கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களே! மேலும் தற்கொலை செய்துகொள்ளும் மக்களுள் 60 சதவீத்தினரும்கூட வேறு ஏதோ மனரீதியான சீர்குலைவுகளுக்கு உள்ளானவர்களாகவே இருக்கிறார்கள்!

இப்படிப்பட்ட கொடுமைவாய்ந்த கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து மீட்டெடுத்து, அவர்களை உடல், மன நலம் மிக்கவர்களாகவும், ஆனந்த ஆரோக்ய வாழ்வு வாழ்பவர்களாகவும் ஆக்குவதற்கு இக்கிரியாவினைப் பரமஹம்ஸர் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

இக்கிரியாவினை சிரத்தையுடனும், அதில் சொல்லப்பட்டுள்ள

விதிமுறைகளின்படியும் செய்து, குருவின் வழிகாட்டுதலும் ஆசியும் பெற்று, இந்நோயிலிருந்து வெளிவந்து உங்களுக்கும், சமுதாயத்திற்கும் உதவும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: அக்டோபர் 30, 2011

செய்யவேண்டிய படி

1.ப்ராண முத்ரா

செய்நுட்பம்

  1. பத்மாஸனத்தில் அமரவும்.
  1. கண்களை மூடி, முழு கவனத்தையும் உங்கள் மூச்சின்மீது செலுத்தவும்.
  1. கைகளைத் தொடையில் வைத்துக் கொள்ளவும்.
  1. மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களின் நுனிப்பகுதியைப் பெருவிரலால் தொடுவும்.சுட்டு விரலும் நடு விரலும் நேராகவும் ஒட்டியும் இருக்க வேண்டும்.
  1. உடல் முழுவதும் சக்தி பாய்வதாக பாவனை செய்யுங்கள்.
  1. இதே நிலையில் 3 நிமிடங்கள் இருக்கவும்.

நிலை : 1

கண்களை மூடவும். எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றவும். இதை 3 முறை செய்யுங்கள்.

நிலை : 2

  1. பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் உறுதியாக வைத்து அதன்மீது அமர்ந்துகொள்ள வேண்டும்.
  1. பிறகு வயிற்றுத்தசைப்பகுதியை இறுக்கமாக்கி நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றி, உங்களால் எவ்வளவு நேரம் வெளியே நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்தும்போதே, மூலாதார சக்ரத்தில் முழுக் கவனத்தையும் வைத்து மூல பந்த முத்ராவைச் செய்யுங்கள். பிறகு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. இதை 11 முறை செய்யுங்கள். இந்த முத்ரா மனச்சோர்வினைத் தவிர்க்கிறது.

நிலை : 3

1. மூலபந்த முத்ராவை விடுவிக்கவும். (இடது குதிகாலை எடுத்துவிடலாம்.)

  1. சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
  1. உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவும்.
  1. இதை 11 முறை செய்யுங்கள்.

நிலை : 4

இரண்டாவது, மூன்றாவது நிலைகளை இணைத்துச் செய்யுங்கள்.

  1. வயிற்றுத்தசைப்பகுதியை இறுக்கமாக்கவும்.
  1. நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றவும்.
  1. உங்களால் எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. பிறகு சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
  1. உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.