KAILASA Library/வாழும் அவதார புருஷர்/பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Ulcerative Colitis And Crohn's Disease

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 25, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. வஜ்ராஸனம்
  1. பஸ்த்ரிகாகும்நகம்
  1. த்ரிசூலாகும்நகம்
  1. த்ரிநேத்ராகும்நகம்

1. வஜ்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

அத வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12

மொழிபெயர்ப்பு

தொடைகளைஇரும்பைப்போலஇறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்குஇருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

செய்நுட்பம்

  1. முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  1. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின் மீது வைக்கவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
வஜ்ராஸனம்

வஜ்ராஸனம்

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும் பக:

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

அத பஸ்த்ரிகாகும் பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனையோரூர்த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு'டம் பத்த்வா தும்பிதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும் ப: ச்'ரீராக்னிவிவர்த்தன: // 165

மொழிபெயர்ப்பு

ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

செய்நுட்பம்

  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
  1. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  1. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிகு'லகும்பக:

கோணாய்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /

த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்‌ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.

4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அcredits த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய சூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.