KAILASA Library/வாழும் அவதார புருஷர்/பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதிவராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதிவராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Ulcerative Colitis And Crohn's Disease

நோய் பற்றிய விபரம்

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 24, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. துர்வாஸ ஆஸனம்
  1. பஸ்ஸ்த்திரிகாகும்்பகம்
  1. திரிகு'லாகும்்பகம்
  1. த்ரிநேத்ரக்கும்்பகம்

1. துர்வாஸ ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87

அஅத துர்வாஸ ஆஸனம்

டாஸ ஜாங்கு பரிசரி ஜீமணைள பக டாஸ பாஷதீ ஆணி /
புணா தோஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரலீ கானீ லகாவை /

டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தீ ஸ்யு /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர லகாவை /

ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை/
த்ரிஷ்டி த்ரிகுட ஆஸண கௌகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்

செய்பாங்கு:

  1. தரை மீது நிமிர்ந்து அமரவும்.
  1. வலது முழங்காலை மடித்து தொடையின் பக்கவாட்டில் தரை மீது வைக்கவும். வலது பாதத்தின் மேல் பகுதித் தரையை தொட்டுக் கொண்டிருக்குமாறு வைக்கவும்.
  1. இடது முழங்காலை மடித்து வலது தொடைக் கீழ் வைக்கவும். இடது பாதத்தின் மேல் பகுதித் தரையை தொட்டுக் கொண்டிருக்குமாறு வைக்கவும்.
  1. வலது தொடையானது இடது தொடை மீது அமைய வேண்டும். வலது தொடையானது இடது முழங்காலையும், இடது தொடையானது வலது முழங்காலையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
  1. கைகளை நமஸ்கார முத்திரையில் நெஞ்சிற்கு நேரே வைக்கவும்.

துர்வாஸ ஆஸனம்

  1. புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும் பக:,

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

அத பஸ்த்ரிகாகும் பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்’ரமாவதி/
வேகேன ஸ்தனையோருார்த்வம் தத: பூரோஸர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு’டம் பத்வா கும்பீதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்பு: ச’ரீராக்னிவிவர்த்தன: // 165

மொழிபெயர்ப்பு

ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

செய்நுட்பம்

  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
  1. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  1. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிகு’லாகும் பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லக்ும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் லதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்‌ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தைள்ளிழுக்கும் இத் த்ரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று த்ரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.

4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரக்ும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரக்ும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய சூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரக்ும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 5. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.

7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).

8. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.

9 இதை 21 முறை செய்யுங்கள்.

பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதிவராமல் பாதுகாக்க — வாழும் அவதார புருஷர்