KAILASA Library/வாழும் அவதார புருஷர்/பூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

பூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Fungal Infection

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 4, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. வஜ்ராஸனம்
  1. நாடி சோ'ாதனா
  1. த்ரிகு'லகும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்
  1. ஸமகும்பகம்

1. வஜ்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

அத வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12

மொழிபெயர்ப்பு

தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

செய்நுட்பம்

வஜ்ராஸனம்
  1. முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத் தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  1. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும் படுமாறு அமரவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின் மீது வைக்கவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.

வஜ்ராஸனம்

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

நாடி சோ'தனா, ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 11-13

அத நாடி சோ'தனா

பத்த-பத்மாஸனா யோகீ ப்ராணம் சந்த்ரேண பூரயேத் /
தாரயித்வா யதாஸ'க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11

யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேத்ததிரோதத்: /
ரேசயேச்ச ததோந்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13

மொழிபெயர்ப்பு

பத்த பத்மாசனத்தில் அமர்ந்து, இடது நாசித்து வாரம் வழியாகச் சுவாசித்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு வலது நாசித் துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.11)

எந்த நாசி வழியாக இப்போது சுவாசத்தை வெளியேற்றினீர்களோ, அதே நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மற்றொரு நாசிவழியாக மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.13)

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசித்து வாரம் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. வலது நாசித்து வாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. சுவாசத்தை வெளியேற்றிய அதே வலது நாசித்து வாரம் வழியாகச் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை சுவாசத்தால் நிரப்பவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. இடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இதனை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

த்ரிகு'லகும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிகு'லகும்புக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாத்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

த்ரிநேத்ரகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அcredits த்ரிநேத்ரகும்பஃ

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய சூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பஃ ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள். 7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).

  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

5. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

அத ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு'கம் த்'ரு'தி: /
ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
  1. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
  1. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது என்னும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.