KAILASA Library/வாழும் அவதார புருஷர்/பூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

பூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Fungal Infection

நோய் பற்றிய விபரம்

மைக்கோஸிஸ் (Mycosis) என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளில் உருவாகும் ஒரு பூஞ்சான் தொற்றாகும். இது பொதுவாக ஏற்படக்கூடியதாக இருந்தாலும் பல்வேறு சூழல்களும், உடல்நிலைகளும் இந்த பூஞ்சான் நோய் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. சிறு பூஞ்சான்களைக் கொண்ட காற்றைச் சுவாசிப்பதன் மூலமும், சில நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகள் மூலமும் அடுத்தடுத்து பரவுகிறது. ஆகையால் பூஞ்சக் காளான்கள் நுரையீரல் அல்லது தோல்களில்தான் முதலில் தொடங்கின்றது.

மக்கள், கடுமையான நுண்ணுயிர் எதிரிகள் மருந்துகளை (anti-biotics) நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சான் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏனென்றால் ஆண்டி பயாடிக் மருந்து, சிதைக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதில்லை. ஆனால் உடலுக்குத் தேவையான நல்ல கிருமிகளையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இந்தச் செயல்பாடு வாய், பெண் பிறப்புறுப்பு, குடல்பகுதி மேலும் உடலில் மற்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் சமன்பாட்டை மாற்றிவிடுகிறது. இதனால் பூஞ்சான்கள் அதிகளவில் வளர்ந்து விடுகின்றன.

நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படும். ஹெச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்க மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் வேதியியல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நிலைதான் நேர்கிறது. மேலும் நீரிழிவு உடையவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படலாம். மிக சிறிய வயது மற்றும் அதிக வயதானவர்கள் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 18, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பத்மாஸனம்
  1. லஹரி ப்ராணாயாமம்
  1. கபாலபதி ப்ராணாயாமம்
  1. அந்தேலி ப்ராணாயாமம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
ஊருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’ஸௌ' // 2.31

த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷ்யுத்துதாப்ய பவனம்ப'னை: // 2.32

இதம பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாஸ'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
பத்மாஸனம்

பத்மாஸனம்

  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100

செய்நுட்பம்

  1. ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
  1. பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100

செய்நுட்பம்

  1. வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
  1. உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
  1. இதை 2 நிமிடங்கள் செய்யுங்கள்.

பத்மாஸனத்தில் இருந்தபடியே அந்தோலி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்-100

செய்நுட்பம்

  1. சுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
  1. வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.
  1. முழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்கவும்.
  1. உங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும். இதை 21 முறை செய்யுங்கள்.