புற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய
Cure for Post- traumatic stress disorder
நோய் பற்றிய விபரம்
வாழ்க்கைக்குச் சவாலாக அமையும் சூழ்நிலைகளான நெருங்கியவர்களுடைய மரணம், விபத்து, தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் பதட்டத்தினாலும் கவலையினாலும் 'புற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் அழுத்த கோளாறு (Post-traumatic stress disorder (PSTD) நோய் ஏற்படுகின்றது.
மன அழுத்தமான சூழ்நிலையிலிருந்து நம்மை மீள வைக்கும் நமது உடலின் இயல்பான ஆற்றல் மூழ்கடிக்கப்படுவதனால் இந்த ககூகுசு நிகழ்கின்றது. இந்நிலை காயம் ஏற்பட்ட பல மாதங்கள் வரை கூட தெளிவாகத் தெரியலாம்.
மிகவும் அபாயகரமான அல்லது அழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, உடல், மன அழுத்த சம்பந்தபட்ட பதில்செயலை ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக அட்ரீனலின் சுரப்பி சுரக்கிறது. அழுத்த நிலை அகற்றப்பட்ட பின் உடல் மீண்டும் சமநிலைக்கு வருகிறது. உடல், மன அழுத்த நிலையைச் சமாளிக்கமுடியாத போது, அழுத்த நிலை அகற்றப்பட்ட பின்பும்கூட, உடல் மீண்டும் சமநிலைக்கு வருவது இல்லை.
மன அழுத்த சூழ்நிலைகளுக்கு இப்படி அதீத எதிர்செயல்புரியும் தன்மை மூளையில் நரம்பு சம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தும். இது, எதிர்காலத்தில் அவர்கள் சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் விதத்தையும் பாதிக்கின்றது.
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 9, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- துர்வாஸ ஆஸனம்
- வ்யானகும்பகம்
- நாககும்பகம்
- அக்னீஷோமாத்யகும்பகம்
1. துர்வாஸ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அத துர்வாஸ ஆஸனம்
டாஈ ஜாங்த பரிகரி ஜீமணைள பக டாஈ பாஷீதீ ஆணீ /
புணா தோஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரலீ கானீ லாகாவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தீ ஸ்யூ /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர லாகாவை /
ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர ஊர்த்த லாகாவை /
த்ரிஷ்டி த்ரிகுட ஆஸண கெளகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமர்ந்து கொள்ளவும்.
- வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- வலது கையின் விரல்நூனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
- கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
- புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும். 7. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
வியானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அத வியானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சனேன கும்பீதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வியான கும்பகமாகும்.
செய்நுட்பம்
- ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பக:
ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: /
க்ஷுதம் ஜெயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாஸத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாத்யகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87
அத அக்னீஷோமாத்யகும்பக:
ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அந்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாத்யகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாத்யகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். 8. இதை 21 முறை செய்யுங்கள்.