புற்றுநோயிலிருந்து குணமடைவதற்கான கிரியா - Cure for Cancer
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம் பர் 18, 2011.
பின்பற்றப்பட வேண்டிய படிகள்:
- மத்ஸ்யேந்த்ராஸனம்
- ப்ளாவினீகும்பகம்
- மூர்ச்சனாகும்பகம்
- மாகடாஸனம்
- கமலரும்பகம்
- குமுதகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்
1. மத்ஸ்யேந்த்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா-உபதேசம் 2, ஸ்லோகங்கள் 22-23
அத மத்ஸ்யேந்த்ராஸனம்
உதரம் பச்'சிமாநாஸம் க்ரு'த்வா திஷ்ட்தி யத்னத: /
நம்ராங்கம் வாமபாதம் ஹி தக்ஷஜாணுபரி ந்யஸேத் // 2.22
தத்ர யாம்யம் கூர்பரம் ச யாம்யே கரே ச வக்த்ரகம் /
ப்ரு'வோர்மத்யே கதாம்ப த்ரு'ஷ்டிம் பீடம் மத்ஸ்யேந்த்ரமுச்யதே // 2.23
மொழிபெயர்ப்பு
உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்கி, கால்களை நீட்டி, இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து, வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைத்து, வலது உள்ளங்கையின்மேல் உங்கள் முகத்தை வைத்த நிலையில் இருந்தபடியே உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கும் இந்நிலை மத்ஸ்யேந்த்ராஸனம் என்றழைக்கப்படுகிறது.

மத்ஸ்யேந்த்ராஸனம்
செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள்.
- இடது காலை மடக்கி வலதுதொடையின் மேல் வைக்கவும்.
- வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைக்கவும்.
- முதுகெலும்பை இடது புறமாகத் திருப்பி, உங்கள் வயிற்றுப்பகுதியைத் தளர்வாக்குங்கள்.
- உங்கள் முகத்தை வலது உள்ளங்கையின்மேல் வைக்கவும்.
- உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
2. மத்ஸ்யேந்த்ராஸனத்தில் இருந்தபடியே
ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171
அத ப்லாவினீகும்பக:
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸாப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள். 3. தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
3. மத்ஸ்யேந்த்ராஸனத்தில் இருந்தபடியே மூர்ச்சனாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170
அத மூர்ச்சனாகும்பக:
ஆபூர்ய கும்பீதம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்பொ மனோமூர்ச்சா ஸுகப்ரதா // 170
மொழிபெயர்ப்பு
உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
செய்நுட்பம்
- சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது என்னும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
4. மாகட ஆஸனம், ஜோத ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 125-127
அத மாகடாஸனம்
தோஹ பகதலீ ஸம்புட ஆனே தினகீ பிஷ்டி பூமிபரி டானை /
மூலத்வார ஏடயாம்பரி ல்யாவே மூட ஹாத உசா டஹராவை // 125
தோஹ கரகீ அங்குரீ ஜோஹை வததும் ஆனி லாகாவை ஸோஹை /
காஜி குஜாவன் கீ ஜ்யும் கரை த்ரிகுட த்ரிஷ்டி அசல கரி தரை // 126
தரனஸு கபஹு நா சிகை அக்னிவ்ரு'த்தி அதி ஹோய /
வேக தமை அரு உதரஸுஸு மாகட கே குன ஸோய // 127

மாகட ஆஸனம்
செய்நுட்பம்
- முட்டிக்கால் போடவும்.
- பாதங்களைச் சேர்த்து வைத்து, குதிகால்களில் ப்ருஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
- கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
- உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
5. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே கமலரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189
அத கமலரும்பக:
பூரயேதர்கநாட்யாஸு கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்ச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலரும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
- இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
6. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே குமுதரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமுதரும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவாழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதரும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
7. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே
க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
அத க்ரமநேத்ரகும்பக:
ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தூர்யேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.