புற்றுநோய் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care for Cancer
நோயைப் பற்றிய குறிப்பு
புற்று நோய் மருத்துவ ரீதியாகக் கேடு விளைவிக்கின்ற மிகக் கடுமையான நோயாகக் (Malignant neoplasm) கருதப்படுகிறது. உயிரணுக்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியினால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களும் புற்றுநோய் என்று வகைப்படுத்தப்படுகிறது.
புற்று நோயில், உயிரணுக்கள் பிரிந்து கட்டுப்படுத்த முடியாத வகையில் வளர்த்து, மாலிக்னன்ட் கட்டிகளை ஏற்படுத்துகின்றன, மேலும் அருகில் உள்ள உடலுறுப்புகள்ளுள்ளும் ஊடுருவுகின்றன.
இரத்த ஓட்டத்தின் மூலமாகவோ, நிணநீர் மூலமாகவோ உடலின் தூரத்திலிருக்கின்ற பாகங்களுக்கும் புற்றுநோய் பரவக்கூடும். எல்லாக் கட்டிகளும் புற்றுநோய் அல்ல. வலியற்ற கட்டிகள் கட்டுக்கடங்காமல் வளர்வதில்லை, அருகிலிருக்கின்ற திசுக்களுக்குள் ஊடுருவுவதில்லை, உடல்முழுக்கப் பரவுவதுமில்லை.
ஆனால் புற்றுநோய்க்கான காரணத்தை உறுதிசெய்வது சிக்கலானது. புகையிலை உபயோகிப்பது, குறிப்பிட்ட நோய்த் தொற்றுகள், கதிர்வீச்சு, உடலுழைப்பு இல்லாமை, சத்தற்ற உணவு, உடல்பருமன் மற்றும் சுற்றுச் சூழல் சுகாதாரக்கேடுகள் போன்ற பல விஷயங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவை நேரடியாக மரபணுக்களைச் சேதப்படுத்தலாம் அல்லது உயிரணுக்களில் ஏற்கெனவே இருக்கின்ற மரபணுப் பிரச்சினைகளுடன் சேர்ந்து நோயை உருவாக்கலாம். 5% முதல் 10% வரையான புற்றுநோய்கள் பரம்பரையாக வருபவை.
புற்றுநோய் இருப்பதை பல வகைகளில் கண்டுபிடிக்கலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் தெரிவதன் மூலமாகவும், திரைப்பரிசோதனைகள் (Screen- ing) மூலமாகவும் மற்றும் மருத்துவப் பதிவுகள் மூலமாகவும் அதைக்கண்டுபிடிக்கலாம். புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படும்போது, திசு மாதிரியை நுண்ணீ ணாக்கி கருவி மூலமாக (Microscopic) பரிசோதனை செய்து நோயின் தன்மையைக் கண்டுபிடிப்பார்கள்.பொதுவாக கீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி, அறுவை சிகிச்சைகள் மூலமாகப் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்யப்படுகின்றது.
நோயிலிருந்து பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பொறுத்தமட்டில் எந்த வகையான மற்றும் எந்த இடத்தில் புற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தும், நோய் ஆரம்பித்து எவ்வளவு காலம் கடந்து வைத்தியம் துவங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தும்தான் அவர்கள் நோயிலிருந்து பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றிச்சொல்ல முடியும். பொதுவாக வயது ஏறும்போது புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பும் அதிகரிக்கின்றது. 2007 ல் உலகமுழுவதிலும் மரணமடைந்தவர்களுள் 13% பேர் (7.9 மில்லியன்) புற்று நோயால் மரணமடைந்திருக்கிறார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்-நவம்பர் 17, 2011.
பின்பற்றப்பட வேண்டிய படிகள்:
- உஷ்ட்ராஸனம்
- ப்லாவினீகும்பகம்
- மூர்ச்சனாகும்பகம்
- உத்கடாஸனம்
- கமலகும்பகம்
- குமுதகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்
1. உஷ்ட்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 40
அத்யாஸ்ய: சே'தே பத-யுக்ம-வ்யஸ்தம்
ப்ரு'ஷ்டே நிதாயாபி த்ரு'தம் கராப்யாம் /
ஆகுஞ்சயேத் ஸம்யகுதராஸ்ய-காடமௌஷ்ட்ரஞ்ச
பீடம் யோகினோ வதந்தி // 2.40
மொழிபெயர்ப்பு
தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு, கால்களை நீட்டிக்கொள்ளவும், இரு கால்களையும் ப்ருஷ்டத்தின் மேல்படும்படி மடக்கவும், இரு கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு, வாய் மற்றும் வயிற்றுப் பகுதியை இறுக்கிக் கொள்ளவும். இதுவே யோகிகளால் கூறப்படும் உஷ்ட்ராஸனம்.

உஷ்ட்ராஸனம்
செய்நுட்பம்
- தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
- முழங்கால்களை மடக்கவும்.
- உங்கள் கைகளைக் கொண்டு இரண்டு கால்களையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளவும்.
- உங்கள் வாய் மற்றும் வயிற்றுப் பகுதியை இறுக்கவும்.
- இதே நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
2. உஷ்ட்ராஸனத்தில் இருந்தபடியே
ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171
அத ப்லாவினீகும்பக:
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
3. உஷ்ட்ராஸனத்தில் இருந்தபடியே
மூர்ச்சநாகும் பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170
அத மூர்ச்சநாகும்பக:
ஆபூர்ய கும்பீதம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்பொ மனோமூர்ச்சா ஸுதப்ரதா // 170
மொழிபெயர்ப்பு
உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்ற வேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
செய்நுட்பம்
- சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
4. உத்கடாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 27
அத உத்கடாஸனம்
அங்குஷ்டாப்யாமவஷ்டப்ய தராம் குல்பௌ ச கே கதௌ /
தத்ரோபரி குதம் ந்யஸ்ய விஜ்ஞேயமுத்கடாஸனம் //
மொழிபெயர்ப்பு
கால்விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிங்கால்களைத் தூக்கி, குதிங்கால்களின் மேல் ஆசனவாய் படும்படி அமரவும். இது உத்கடாஸனம் என்று அறியப்படுகின்றது.

உத்கடாஸனம் செய்நுட்பம்
- முட்டிக்காலிடு அமரவும்.
- கால்விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிங்கால்களின் மேல் ஆசனவாய் படும்படி அமரவும்.
- முழங்கால்களைத் தரையிலிருந்து தூக்கி, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். (வேண்டுமானால் முழங்கால்களைத் தரையில் ஊன்றிக்கொள்ளவும்.)
5. உட்கடாஸனத்தில் இருந்தபடியே
கமலகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189
அத கமலகும்பக:
பூரயே தர்கனாட்யாஸு கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலரும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
- இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. உட்கடாஸனத்தில் இருந்தபடியே
குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமுதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது. செய்நுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
7. உட்கடாஸனத்தில் இருந்தபடியே
க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
அத க்ரமநேத்ரகும்பக:
ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.