பீனிசத்தில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Sinusitis
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 30, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- வ்ரு'ச்'சிகாஸனம்
- ப்ர்க்ரு'தி:கும்பகம்
- அக்னீஷோமாத்யகும்பகம்
- உஜ்ஜாயீகும்பகம்
- கும்பராஜாகும்பகம்
- ஸீத்காரீகும்பகம்
1. வ்ரு'ச்'சிகாஸனம்,
ஹட ஸங்கேத சந்த்ரிகா, ஸ்லோகம் 123
அத வ்ரு'ச்'சிகாஸனம்
வ்ரு'ச்'சீவ-புச்ச-ப்ரதிமாங்க்ரி-பார்ச்'ணீ-
த்ரு'த்வா ஸ்வசீர்ஷே சிபுகம் விதார்ய கெள/
யத்ரேதி ஸந்திஷ்டதி ஸாதகஸ்-த்வவிஷாவஹம்
வ்ரு'ச்'சிக-ஸம்ஜ்ஞமாஸனம் // 23
வ்ருச்சிகாஸனம்

நிலை 1 நிலை 2
செய்நுட்பம்
- தரையில் முழங்காலி்ட்ட நிலைக்கு வரவும்.
- முன்னால் சாய்ந்து முழங்கைகளைத் தரையில் ஊன்றவும்.
- இரு கால்களையும் பின்னால் மடக்கி, மேலே உயர்த்தவும்
- உங்கள் பாதங்களால் தலையைத் தொடவும்.
- தாடையை மேலே உயர்த்தவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.(இந்த ஆஸனத்தை யோகாவில் நன்கு தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஆகவே ஆரம்பநிலை பயிற்சியாளர்கள் நிலை-2 ல் உள்ளபடி அர்த வ்ருச்சிகாஸனம் மட்டும் செய்தால் போதுமானது.)

நிலை 3
2. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அத ப்ரக்ரு'தி:கும்பக:
வாங்விதேனாஸு'கம் கர்ஷ்ந் குர்வந்துர்ச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
- பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
3. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாத்யகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87
அத அக்னீஷோமாத்யகும்பக:
ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாத்யகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளியிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இதற்கு பெயர் அக்னீஷோமாத்யகும்பகம்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
4. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே
உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132
அத உஜ்ஜாயீகும்பக:
முக்ம் நியம்ய நாடீப்யாமாக்ரு'ஷ்யாஸு'ம் நியோஜயேத் /
குண்டலீ-பார்ச்'வயா: பச்'சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131//
ரேசயேதிடயா வாயு்ம் கச்சன்-திஷ்ட்ன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி'வேநாகில-வேதிநா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
- மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
5. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே
கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134
அத கும்பராஜகும்பக:
பலாதாகர்ஷ்யேத்வாயும் யாவத் த்ராணஸுமூத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோSயமீரித: // 134
மொழிபெயர்ப்பு
வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
- நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
6. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீகும்ப॒க:, கும்ப॒க-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138
அத ஸீத்காரீகும்ப॒க:
ரஸனாமுன்முதீ-க்ரு'த்ய ஸீத்காரம் குர்வதா மருத் /
பீயந்தே கும்ப॒கே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137
ரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீத்யமானாம் விசிந்தயேத் /
ஸீத்காரீ-கும்ப॒க: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸதாம் // 138
மொழிபெயர்ப்பு
நாக்கை மேல்நோக்கி மடக்கி, 'ஸீத்' என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக் கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய ஸித்திகளை அளிக்கவல்லது.
செய்நுட்பம்
- நாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.
- 'ஸீத்' என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
- சுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
- இதனை 21 முறை செய்யுங்கள்.