KAILASA Library/வாழும் அவதார புருஷர்/பீனிசம் வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

பீனிசம் வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Sinusitis

நோய் பற்றிய விபரம்

பீனிசம் என்பது மூக்கருகில் வடிகுழலில் (Paranasal sinuses) ஏற்படும் வீக்கம். இது, நோய்க் கிருமிகளாலும் ஒவ்வாமையினாலும் தன்னுடல் தாங்கும் திறனில் (Autoimmune issues) ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புகள் வைரஸ்கிருமித் தொற்றால் வரக்கூடியவை. இவை 10 நாட்களில் சரியாகிவிடும்.

இது காலவரிசைப் படி பல கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

  1. திடீரென ஏற்படும் பீனிசம்-இது புதிதாக ஏற்பட்ட நோய்த் தொற்று. இது 4 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. மேலும் இதன் அறிகுறியைப் பொறுத்து கடுமையானது மற்றும் கடுமையற்றது என பிரித்தறியப்படுகிறது.
  1. திரும்பத் திரும்ப ஏற்படுகின்ற கடும் பீனிசம்-ஒரு வருடத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேலும் தனித்தனியாக சமயங்களில் ஏற்படுகின்ற கடுமையான பீனிசம்.
  1. குறுகிய கால பீனிசம்-12 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. இது, திடீர் பீனிசம் நாட்பட்ட நோயாக மாறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.
  1. நாட்பட்ட பீனிசம்-12 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் பீனிசம்.
  1. தீவிரமான நாட்பட்ட பீனிசம்- நோய் அறிகுறியின் தீவிரம் அதிகரித்து, ஆனால் சிகிச்சைக்குப் பின்னர் இயல்புநிலைக்கு திரும்பும் பீனிசம்.

மேற்கண்ட அனைத்து வகை பீனிசங்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை உடையவை. மேலும் இவற்றைப் பகுப்பது கடினமானது. திடீரென ஏற்படும் பீனிசம் என்பது பொதுவானது. 90% சதவீத பெரியவர்கள் அவர்களின் வாழ்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பீனிசத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 29, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. வஜ்ராஸனம்
  1. ப்ரக்ரு'திகும்பகம்
  1. அக்னீஷோமாத்யகும்பகம்
  1. உஜ்ஜாயீகும்பகம்
  1. கும்பராஜாகும்பகம்
  1. ஸீத்காரீகும்பகம்

1. வஜ்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

அத வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்தீதாயகம் // 12

மொழிபெயர்ப்பு

தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

செய்நுட்பம்

  1. முழுங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  1. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
வஜ்ராஸனம்

வஜ்ராஸனம்

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

அத ப்ரக்ரு'தி:கும்பக:

வாங்விதேனாஸு'கம் கர்ஷன் குர்வந்துச்சதரம் ஸ்வநம்/
தரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

மொழிபெயர்ப்பு

ஒருவர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ர்க்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
  1. பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

அக்னீஷோமாத்யகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87

அத அக்னீஷோமாத்யகும்பக:

ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாத்யகும்பக: // 87

மொழிபெயர்ப்பு

பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளியிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாத்யகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
  1. இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். 8. இதை 21 முறை செய்யுங்கள்.

4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜாயீகும்பக:,

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132

அத உஜ்ஜாயீகும்பக:

முக்லம் நியம்ய நாட்ய்யாமாக்ரு’ஷ்யாஸு'ம் நியோஜயேத் /
குண்டலீ-பார்ச்'வயோ: பச்'சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131//

ரேசயேதியா வாயும் கச்சன்-திஷ்ட்ன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி'வேநாகில-வேதினா //132//

மொழிபெயர்ப்பு

வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசி யையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.

இதனை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.

5. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134

அத கும்பராஜகும்பக:

பலாதாகர்ஷ்யேத்வாயும் யாவத் த்ராணஸுமுத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோऽயமீரித: // 134

மொழிபெயர்ப்பு

வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
  1. நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

ஸீத்காரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138

அத ஸீத்காரீகும்பக:

ரஸனாமூன்முதீ-க்ரு'த்ய ஸீத்காரம் குர்வதா மருத் /
பீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137

ரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீட்யமானாம் விசிந்தயேத் /
ஸீத்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திதர: ஸதாம் // 138

மொழிபெயர்ப்பு

நாக்கை மேல்நோக்கி மடக்கி, 'ஸீத்' என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய ஸித்திகளை அளிக்க வல்லது.

செய்நுட்பம்

  1. நாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.
  1. 'ஸீத்' என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
  1. சுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.