KAILASA Library/வாழும் அவதார புருஷர்/கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீளSign in
வாழும் அவதார புருஷர்

கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Anxiety

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 16, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. வராஹ-ஆஸனம்
  1. த்ரிசூ'லநும்யகம்
  1. ஸீத்காரீ ப்ராணாயாமம்
  1. சீ'தலீ ப்ராணாயாமம்
  1. த்ரிநேத்ரகும்பகம்

1. வராஹ-ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 76

அத வராஹ-ஆஸனம்

பகதலீ கீ மாஹிலீ கோர மிலாயீ புணா பாணி ஊகடு பைஸே /
ஏட மூலத்வார நீசை ராஷை ஜாங்த சீத்ர அங்குல ச்யாரீ அந்த்ர /

ஹாத தோஉ காந்தாபரி ஆணி மெளரா ஹதேலி அங்குலீ காட லாகாவை/
ஹாத ஜோட லாகயீ ராஷை த்ரிஷ்டி நாஸாஅக்ர /
ஆஸண கெள குண அடிட பண ஆதிதே குபடா ஜாஈ //76

செய்நுட்பம்

வராஹ-ஆஸனம்
  1. தரையில் குத்துக்காலிட்டு அமருங்கள்.
  1. பாதங்களை ஒன்று சேர்த்து வைக்கவும். மேலும் பிருஷ்டத்தை ஒட்டி குதிங்கால்களை வைத்துக் கொள்ளவும்.
  1. முன்னங்கால்களை அகற்றி வைத்துக் கொள்ளவும்.
  1. அடிவயிற்றுப் பகுதியைத் தொடைகளால் அழுத்தவும்.
  1. இரு உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து, தலைக்குப் பின்னால் வைத்துக் கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

வராஹ-ஆஸனம்

2. வராஹ-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லரும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. வராஹ-ஆஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43

அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.

4. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.

இதை 21 முறை செய்யுங்கள்.

4. வராஹ-ஆஸனத்தில் இருந்தபடியே

சீ'தலீகும்பக: கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74

அத சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாஃக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

மொழிபெயர்ப்பு

வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.

தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.

செய்நுட்பம்

  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழுங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
  1. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  1. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  1. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  1. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

5. வராஹ-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பகḥ, கும்பக-பத்ததிḥ, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பகḥ:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யம் தா³ரயித்வா யதாாவிதிா //
த்ரிநேத்ரகும்பகḥ ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்³திாத்³திாḥ //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.