KAILASA Library/வாழும் அவதார புருஷர்/கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Anxiety

நோய் பற்றிய விபரம்

கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு என்பது இயற்கைக்கு மாறான மன நோய்களையும், பதட்டம் மற்றும் பயம் சம்மந்தப்பட்ட நோய்களையும் குறிப்பதாக இருக்கிறது. இந்தப் பதட்டம் என்பது நான்கு கோணங்களில் அனுபவமாக உணரப்படுகின்றது. அவை, மனபயம், உடல் இறுக்கம், உடல் அறிகுறிகள் மற்றும் காரணமற்ற பதட்டம். கவலை மற்றும் பதட்டமான மன நிலையில், சாதாரண நடுக்கம் முதல் கடுமையான அச்சத் தாக் குதல் வரை உணர்ச்சிகள் வெளிப்படும்.

பணத்தைப்பற்றிய கவலை அல்லது நாட்பட்ட உடல்நோயால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் இருக்கும் நிலை போன்ற நெருக்கடி சூழ்நிலைகளை வாழ்வில் சந்திக்கும்போது இந்தப் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவுகள் வரலாம்.

உணர்வு கடத்தியின் தாழ் நிலைகள், மத்திய நரம்பு மண்டலத்தில் நடைபெறும் செயல்பாடுகளைக் குறைத்துவிடுவதுகூட பதட்டத்தை அதிகப்படுத்துகிறது.

கவலை மற்றும் பதட்டமானது, இரத்த அழுத்தத்தையும் இதயத்துடிப்பையும் அதிகரித்துவிடும். இதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, குடல்புண், சீதபேதி, உடல்சிலிர்ப்பு, பலஹீனம் மற்றும் குறைந்த சுவாசம் போன்றவை ஏற்படும். அடிக்கடி சுயசந்தேகம் மற்றும் சுயவிமர்சனம், எரிச்சலடைதல், தூக்கப் பிரச்சினை போன்ற சில அறிகுறிகளும் இருக்கும். சில அசாதாரணமான நிலைகளில் ‘வாழவேண்டாம்’ என்ற எண்ணங்கள்கூட எழும்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 15, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. மத்ஸ்யேந்த்ர-ஆஸனம்
  1. த்ரிகு'லக்கும்பகம்
  1. ஸீத்காரீ ப்ராணாயாமம்
  1. சீதலீ கும்பகம்
  1. த்ரிநேத்ரளும்பகம்

1. மத்ச்யேந்த்ர-ஆஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா-உபதேசம் 2,ஸ்லோகங்கள் 22-23

அத மத்ச்யேந்த்ராஸனம்

உதரம் பச்'சிமாப்ராஸம் க்ரு'த்வா திஷ்டதி யத்னத: /
நம்ராங்கம் வாமபாதம் ஹி தக்ஷஜானுரபரி ந்யஸேத் //2.22

தத்ர யாம்யம் கூர்பரம் ச யாம்யே கரே ச வக்த்ரகம் /
ப்ரு'வோர்மத்யே கதாம் த்ரு'ஷ்டிம் பீடம் மத்ச்யேந்த்ரமுச்யதே // 2.23

மொழிபெயர்ப்பு

உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்கி, கால்களை நீட்டி, இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து, வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைத்து, வலது உள்ளங்கையின்மேல் உங்கள் முகத்தை வைத்த நிலையில் இருந்தபடியே உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கும் இந்நிலை மத்ச்யேந்த்ராஸனம் என்றழைக்கப்படுகிறது.

மத்ச்யேந்த்ராஸனம்

மத்ச்யேந்த்ராஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமருங்கள்.
  1. இடது காலை மடக்கி வலதுதொடையின் மேல் வைக்கவும்.
  1. வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைக்கவும்.
  1. முதுகெலும்பை இடது புறமாகத் திருப்பி, உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்குங்கள். 5. உங்கள் முகத்தை வலது உள்ளங்கையின்மேல் வைக்கவும்.

6. உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.

2. மத்ஸ்யேந்த்ர-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லகும்புக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லகும்புக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப_ உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. மத்ஸ்யேந்த்ர-ஆஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43

அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.

இதைக 21 முறை செய்யுங்கள்.

4. மத்ச்யேந்த்ர-ஆஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74

அத சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாத்யேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

மொழிபெயர்ப்பு

வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.

தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.

செய்நுட்பம்

  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழுங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
  1. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  1. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  1. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  1. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.

7. இதை 21 முறை செய்யுங்கள்.

5. மத்ஸ்யேந்த்ர-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பஃ, கும்பக-பத்ததிஃ, ஸ்லோகம் 192

அக த்ரிநேத்ரகும்பகஃ

ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பகஃ ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திகஃ //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.