KAILASA Library/வாழும் அவதார புருஷர்/நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care for Infection

நோய் பற்றிய விபரம்

ஒரு நுண்ணுயிர் உடலில் புகுந்து, பல்கிப்பெருகும்போது நோய்த்தொற்றானது ஏற்படுகிறது. பெரும்பாலான மனிதர்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாவதில்லை. பலவீனமானவர்கள், நோயுற்றவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், புற்றுநோய் அல்லது நீரிழிவு உடையவர்கள்தான் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, அடக்கப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை உடையவர்கள் (Suppressed Immune System) நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

இந்தக் கிருமித் தொகுப்பானது பொதுவாக உடம்பில் உள்ள துவாரங்களில் உள்ள மென்சவ்வுகள், வாய், மூக்கு, கண்கள், பிறப்புறுப்பு, ஆசனவாய் அல்லது வெட்டுக் காயங்கள் வழியாக உடம்பிற்குள் நுழைகின்றன. சில உயிரிகள் உள்ளே நுழைந்து, நுழைந்த இடத்திலேயே வளரக்கூடியவை. சில உயிரிகள் இடம்பெயர்ந்து சென்று பல உறுப்புகளில் நோய்த்தொற்றினை ஏற்படுத்துகிறது. சில நுண்ணுயிரிகள் தொகுப்பு அணுக்களுக்குள்ளேயே வளர்கின்றன. மற்ற நுண்ணுயிரிகள்ாதாரணமாக உடல் திரவங்களில் வளர்கின்றன. நோய்த்தொற்று பொதுவாக நுண் ஒட்டுண்ணிகளான, நச்சுக் கிருமிகள், நுண்கிருமிகள் (Viruses, Prions, Bacteria, and Viroids) போன்றவற்றால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பெரிய ஒட்டுண்ணிகள் மற்றும் பூஞ்சானும்கூட நோய்த்தொற்றை உண்டாக்கும்.

நோயின் வகையைச் சார்ந்து தொற்றின் அறிகுறிகள் தென்படும். சில அறிகுறிகள் உடல் முழுதுமாக சோர்வு, பசியின்மை, எடைகுறைவு, காய்ச்சல், இரவில் வியர்த்தல், சில்லிட்டுப்போதல், வலி மற்றும் வேதனை என்று காணப்படும். சில அறிகுறிகள், உடலின் தனிப்பட்ட பகுதிகளில் தோல் தடிப்பு, இருமல் அல்லது மூக்கில் நீர் வடிதலாகவும் வெளிப்படும்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 25, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. மத்ஸ்யேந்த்ராஸனம்
  1. ப்லாவினீகும்பகம்
  1. மூர்ச்சனாகும்பகம்
  1. மாகடாஸனம்
  1. கமலகும்பகம்
  1. குமுதகும்பகம்
  1. க்ரமநேத்ரக்ும்பகம்

1. மத்ஸ்யேந்த்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா-உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 22-23

அத மத்ஸ்யேந்த்ராஸனம்

உதரம் பச்'சிமாபாஸம் க்ரு'த்வா திஷ்டதி யத்னத: /
நம்ராங்கம் வாமபாதம் ஹி தக்ஷஜானுபரி ந்யஸேத் // 2.22

தத்ர யாம்யம் கூர்பரம் ச யாம்யே கரே ச வக்த்ரகம் /
ப்ரு'வோர்மத்யே கதாம் த்ரு'ஷ்டிம் பீடம் மத்ஸ்யேந்த்ரமுச்யதே // 2.23

மொழிபெயர்ப்பு

உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்கி, கால்களை நீட்டி, இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து, வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைத்து, வலது உள்ளங்கையின்மேல் உங்கள் முகத்தை வைத்த நிலையில் இருந்தபடியே உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கும் இந்நிலை மத்ஸ்யேந்த்ராஸனம் என்றழைக்கப்படுகிறது.

மத்ஸ்யேந்த்ராஸனம்

மத்ஸ்யேந்த்ராஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமருங்கள்.
  1. இடது காலை மடக்கி வலதுதொடையின் வலதுதொடையின் பக்கவாட்டில் வைக்கவும்.
  1. வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைக்கவும்.
  1. முதுகெலும்பை இடது புறமாகத் திருப்பி, உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்குங்கள்.
  1. உங்கள் முகத்தை வலது உள்ளங்கையின்மேல் வைக்கவும். 6. உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.

2. மத்ஸ்யேந்த்ராஸனத்தில் இருந்தபடியே ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171

அத ப்லாவினீகும்பக:

யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171

மொழிபெயர்ப்பு

தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
  1. சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
  1. முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.

3. மத்ஸ்யேந்த்ராஸனத்தில் இருந்தபடியே மூர்ச்சனாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170

அத மூர்ச்சனாகும்பக:

ஆபூர்ய கும்பிகம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்போ மனோமூர்ச்சா ஸுகப்ரதா // 170

மொழிபெயர்ப்பு

உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது. செய்நுட்பம்

  1. சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

4. மாகட ஆஸனம்,

ஜோத ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 125-127

அத மாகடாஸனம்

தோஹ பகதலீ ஸம்புட ஆனே தினகீ பிஷ்டி பூமிபரி டானை /
மூலத்வார ஏடயாம்பரி ல்யாவே மூட ஹாத உசா டஹராவை // 125

தோஹ கரகீ அங்குரீ ஜோஹ வததம் ஆனி லகாவை ஸோஹ /
காஜி குஜாவன் கீ ஜ்ையும் கரை த்ரிகுட த்ரிஷ்டி அசல கரி தரை // 126

துரனஸு கபஹு நா சிகை அக்னிவ்ரு'த்தி அதி ஹோய /
வேக தமை அரு உதரஸுஸு மாகட கே குன ஸோய // 127

மாகட ஆஸனம்

மாகட ஆஸனம்

செய்நுட்பம்

  1. முட்டிக்கால் போடவும்.
  1. பாதங்களைச் சேர்த்து வைத்து,குதிங்கால்களில் ப்ருஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழுங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
  1. கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
  1. உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.

5. மாகடாஸனத்தில் இருந்தபடியே

கமலரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189

அை கமலரும்பக:

பூரயேதாகனாட்யாஸு கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189

மொழிபெயர்ப்பு

வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலரும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
  1. இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. மாகடாஸனத்தில் இருந்தபடியே

குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190

அை குமுதகும்பக:

பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: // 190

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.

  1. சுவாசத்தை நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

7. மாகடாஸனத்தில் இருந்தபடியே

க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

அcredits க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தூர்யேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

மொழிபெயர்ப்பு

வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.

செய்நுட்பம்

  1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.