KAILASA Library/வாழும் அவதார புருஷர்/நுரையீரல் சார்ந்த நோய் குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

நுரையீரல் சார்ந்த நோய் குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure for Pulmonary

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

கிரியா கொடுக்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பத்ராஸனம்
  1. ப்ளாவினீகும்பகம்
  1. கமலரும்பகம்
  1. குமுதகும்பகம்
  1. க்ரமநேத்ரகும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்

1. பத்ராஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37

அத பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு’ஷ்ணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயொ: க்ஷிபேத் /
பார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்வா து நிச்’சலம் // 37

மொழிபெயர்ப்பு

பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.

பத்ராஸனம்

பத்ராஸனம்

செய்நுட்பம்

  1. தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
  1. ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
  1. இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
  1. இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.

2. பத்ராஸனத்தில் இருந்தபடியே

ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171

அத ப்லாவினீகும்பக:

யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸாப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171

மொழிபெயர்ப்பு

தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
  1. சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
  1. முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.

3. பத்ராஸனத்தில் இருந்தபடியே

கமலகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189

அத கமலகும்பஃ

பூரயோதர்கநாட்யாஸு கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பஃ கமலாபித: // 189

மொழிபெயர்ப்பு

வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
  1. இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. பத்ராஸனத்தில் இருந்தபடியே

குமுதகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190

அத குமுதகும்பஃ

பூரயேச்சந்த்ரமார்கேண தூரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190

மொழிபெயர்ப்பு

இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, உள்ளே நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

5. பத்ராஸனத்தில் இருந்தபடியே

க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

அத க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

மொழிபெயர்ப்பு

வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.

செய்நுட்பம்

  1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.

6. பத்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

1. அதே ஆஸனத்தில் அமரவும்.

  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.