நுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care for Pulmonary
நோய் பற்றிய விபரம்
சுவாச நோய் என்பது மருத்துவக் குறியீட்டுச் சொல்லாகும். உடலின் இயக்கத்திற்கு உதவும் முக்கிய உறுப்புகளுக்கு சுவாச ஓட்டத்தை கிடைக்கச்செய்ய செயல்படும் உறுப்புகளிலும், திசுக்களிலும் மிகமோசமான பாதிப்புகள் ஏற்படும்போதும், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கிளை மூச்சுக் குழாய்கள், மூச்சு நுண்குழாய்கள், மூச்சு சிற்றறைகள், நுரையீரல் கவசம், நுரையீரல் கவச அறை மற்றும் நரம்புகள் சுவாச தசைகள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்போதும் இந்நோய்க்கு மனிதன் இலக்காகிறான். இந்த நோய், நம்மால் கட்டுப்படுத்த முடிந்த மிதமான சளித்தொல்லை முதல் உயிர்க் கொல்லி வியாதிகளான நுரையீரல் குருதி குழாய் அடைப்பு, கபவாத கிருமிகளின் தாக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 10, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பத்மாஸனம்
- லஹரி ப்ராணாயாமம்
- கபாலபதி ப்ராணாயாமம்
- சூன்யகும்பகம்
- கேவலகும்பகம்
- வாமகதிகும்பகம்
1. பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரூ-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'ஸௌ' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதம பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யென கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்க் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத் தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

பத்மாஸனம்
2. பத்மாஸனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100
செய்நுட்பம்
- ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள். 3. இதை 5 நிமிடங்கள் செய்யுங்கள்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே
கபாலபதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100
செய்நுட்பம்
- வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 51 முறை செய்யுங்கள்.
4. பத்மாஸனத்தில் இருந்தபடியே
சூ'ன்யகும்பக:, ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5. பத்மாஸனத்தில் இருந்தபடியே
கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், ‘ஸம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தும்போது, ‘ஸோஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
- சுவாசத்தை வெளிவிடும்போது, ‘ஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. பத்மாஸனத்தில் இருந்தபடியே வாமகதிகும்பக:,
ஹட ஸங்கேத சந்த்ரிகா 10வது அத்யாயம், 28வது வரி
செய்நுட்பம்
- இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சரியான முறையில் சுவாசத்தை நிறுத்துங்கள்
- சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.