நீரிழிவு (சர்க்கரை) நோய் குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Diabetes
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 6, 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- கோமுக ஆஸனம்
- உட்டியான பந்தம்
- பஸ்த்ரிகாகும்பகம்
- மூர்ச்சனாகும்பகம்
- ப்ராமரீகும்பகம்
1. கோமுக-ஆஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 16
அத கோமுகாஸனம்
பாதௌ ச பூமௌ ஸம்ஸ்தாப்ய ப்ருஷ்டபார்ச்'வே நிவேச'யேத் /
ஸ்திரகாயம் ஸமாஸாத்ய கோமுகம் கோமுகாக்ரு'தி: //
மொழிபெயர்ப்பு
இரண்டு பாதங்களும் தரையில்படும்படி நின்று, கணுக்கால்களை புட்டங்களின் பக்கவாட்டில் வைத்து அமரவும். உடலை நிலையாக வைத்து, பசுவைப்போல் தலையை உயர்த்தவும். இது கோமுகாஸனம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்

- கால்களை நீட்டி அமரவும்.
- வலது முழுங்காலை மடக்கி, வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டத்தின் பக்க வாட்டில் வைக்கவும்.
- இடது முழுங்காலை மடக்கி, இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டத்தின் பக்க வாட்டில் வைக்கவும்.
- இப்போது கைகளைப் பாதங்களின் மேல் வைக்கவும் அல்லது கணுக்கால்களின் மேல் வைக்கவும்.
- தலையைச் சற்று உயர்த்தவும்.
கோமுக-ஆஸனம்
2. கோமுக-ஆஸனத்தில் இருந்தபடியே உட்டியான பந்த:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10
அத உட்டியான பந்த:
உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: /
உட்டியானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். உட்டியான பந்தத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் ஒருவர் மரணத்தை வெல்கிறார். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கதைத் தொடவேண்டும்.
- முடிந்தவரை சுவாசத்தை வெளியேேயே நிறுத்தி வைக்கவும்.
- இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. கோமுக-ஆஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும் பக:
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77
அத பஸ்த்ரிகாகும் பக:
பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாலயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.
4. கோமுக-ஆசனத்தில் இருந்தபடியே மூர்ச்சாகும்பக:,
ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 60
அத மூர்ச்சாகும்பக:
பூரகாந்தே கடதரம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா ஸுக-ப்ரதா // 4-60
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.
செய்நுட்பம்
- அதே நிலையில் இருக்கவும்.
- உள்ளங்கைகளை முழுங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
- இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.
- முடிந்தவரைசுவாசத்தைஉள்ளேயேநிறுத்திவைக்கவும்.இனிமுடியாது எனும்போது ஜாலந்தரபந்த முத்ராவில் இருந்தபடியேசுவாசத்தைமெதுவாகவெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
5. கோமுக-ஆசனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82
அத ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதே யோகீ ஜந்துனாம் ச'ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79
மேக ஜர்ஜர-ப்ராமரீ தண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு'தங்காதிநிநாதாக-துந்துபி: // 5.80
ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வனேரந்தர்கதம் ஜ்ஜ்யோதிர்ஜ்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்யவேண்டும்.(5.78)
பிறகு அவர், தடுத்து வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
- இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் அவசியம் தேவை. இக்கிரியா அப்பணியைச் செவ்வனே செய்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி செய்து, இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் ஏராளம்.