நீரிழிவு நோய்(சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care for Diabetes
நோய் பற்றிய விபரம்
நீரிழிவு என்பது வளர்சிதை மாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். உடல், தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யா விட்டாலோ அல்லது செல்கள், உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த விட்டாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.
ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோய் அல்ல; இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படும் ஒரு நிலையாகும். சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற உடலுக்கு இன்சுலின் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில், நாளடைவில், உயர் இரத்த அழுத்தம், நாடி சுவர்களில் கொழுப்பு படிந்து அடைபடுதல், இருதய தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.
நீரிழிவு, கருவுற்ற பெண்களுக்கும் ஏற்படும். இதனை, கர்ப்பகால நீரிழிவு மற்றும் பிறவி நீரிழிவு என்று கூறுகிறார்கள். இது இன்சுலின் சுரப்பதில் உள்ள மரபியல் குறைபாடுகளால் ஏற்படுகின்றது.
இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதற்கான அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria), அதிகமாக தாகம் எடுத்தல் (Polydipsia), அளப்பரிய பசி (Polyphagia) போன்றவை.
2010 ஆம் ஆண்டில் உலகளவில் 285 மில்லியன் மக்கள் நீரிழிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் இது இன்னும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நீரிழிவு உலகம் முழுதும் ஏற்பட்டாலும் பொதுவாக வளர்ந்த நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இது, நகரமயமாக்குதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் ஏற்பட்டவையே.
சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் அவசியம் தேவை. இக்கிரியா அப்பணியைச் செவ்வனே செய்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்து, இந்நோய் வராமல் காத்துக்கொள்ளுங்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 5, 2011.
செய்யவேண்டிய படிநிலைகள்
- அனீலாஸனம்
- உட்டயான பந்தம்
- பஸ்த்ரிகாகும்பகம்
- மூர்ச்சநாகும்பகம்
- ப்ராமரீகும்பகம்
1. அனீல-ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 346-347
அத அனீல-ஆஸனம்
தோூ ஹாத பூம்பர டானோ கஹூணீ ஜாடி நாபிலக ஆனை /
புணா தோூ ஐஸை விதி கரை பிஷ்டி ஹதேல்யாகீ பரி தரை // 346
ஐஸை ரஹை கராகை பாணி த்ரிஷ்டி தரை நாஸாமத்ய ஆணி /
யாஸௌ தபத மிடே தன கேரீ நைதராம ப்ரகட கதை டேரீ // 347

அனீல-ஆஸனம்
செய்நுட்பம்
- குத்துக்காலி்ட்டு உட்கார்ந்து கொள்ளவும்.
- உள்ளங்கைகளைத் தரையில் படுமாறு வைத்து, கைகளைப் பாதத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். 3. கைகளை நேராக வைத்து முழங்கைகளைத் தொப்புள் பகுதியில் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (உங்களால் குத்துக்காலிட்டு உட்கார முடியாவிட்டால் தரையில் அமர்ந்து கொள்ளலாம்)
4. மூக்கின் நுனிப்பகுதியைப் பார்க்கவும்.
2. அனீலாஸனத்தில் இருந்து கொண்டு உட்டயான பந்த:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10
அத உட்டயான பந்த:
உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: /
உட்டயானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். உட்டயான பந்தத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் ஒருவர் மரணத்தை வெல்கிறார். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டயான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில்ள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
- முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
- இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றུக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. அஸீலாஸனத்தில் இருந்து கொண்டே
பஸ்்ரிகாகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம்கள் 75-77
அத பஸ்்ரிகாகும்பக:
பஸ்்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்்ரிகா-கும்பகம் ஸுதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
7. இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.
4. அனீலாஸனத்தில் இருந்து கொண்டு
மூர்ச்சாகும்பக:,
ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 60
அத மூர்ச்சாகும்பக:
பூரகாந்தே காடதரம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா ஸுக-ப்ரதா // 4-60
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.
செய்நுட்பம்
- அதே நிலையில் இருக்கவும்.
- உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
- இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
5. அனீலாஸனத்தில் இருந்து கொண்டு
ப்ராமரீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82
அத ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதீ யோகீ ஜந்தூனாம் ச'ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79
மேக ஜர்ஜர-ப்ராமரீ தண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு’தங்காதிநிநாதாக-துந்துபி: // 5.80
ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச’ப்தஸ்ய தஸ்ய ச’ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தன்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும். (5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல ஊளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
- இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.