KAILASA Library/வாழும் அவதார புருஷர்/நினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

நினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Memory Problems

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 14, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. வீராஸனம்
  1. நாதகும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்
  1. த்ரிசூ'லகும்பகம்

1. வீராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 17

அத வீராஸனம்

ஏகபாதமதைகஸ்மின் வின்யஸேதூருஸம்ஸ்திதம்/
இதரஸ்மிம்ஸ்ததா பச்'சாத்-வீராஸனமிதீரிதம் // 17

மொழிபெயர்ப்பு

ஒரு காலை மடித்து அதன்மேல் அமர்ந்து கொண்டு, மடித்தகாலின் தொடையின் மேல் மறுகாலை மடித்து உட்காருவது வீராஸனம் எனப்படுகிறது.

வீராஸனம்

செய்நுட்பம்

  1. இடது காலை மடித்து, அதன் மேல் இடது பிருஷ்டம்படும்படி உட்கார்ந்து கொள்ளவும்.
  1. வலது பாதத்தை இடது தொடையின்மீது வைக்கவும்.
  1. கைகளைச் சின் முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைத்துக்கொள்ளவும்.

வீராஸனம்

2. வீராஸனத்தில் இருந்தபடியே

நா தகும் பக:, ஹ ட ஸங்கேத சந்த்ரிகா

மொழிபெயர்ப்பு

பத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தைள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்ம ரந்திரத்தை அடையும்.

செய்நுட்பம்

  1. வீராஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம்செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. வீராஸனத்தில் இருந்தபடியே

த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அ த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய சூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. வீராசனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அcredits த்ரிசூ'லகும்பக:

கோணாப்ப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்‌ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.