நினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Memory Problems
நோய் பற்றிய விபரம்
வயதானவர்கள் தங்களின் முக்கிய பிரச்சினையாக உணர்வது இந்த ஞாபக மறதியைத்தான். அதுவும் அது நோயாகவே மாறிவிடும்போது அதைக் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதில் ஏற்படும் சாதாரண ஞாபக மறதிக்கும், ஞாபக மறதி நோய்க்கும் இடையே அவற்றின் தன்மையில் வித்தியாசம் உள்ளது. (Budson & Price, 2005). பொதுவாக ஒருவரின் நினைவுத் திறனின் செயல்பாடுகள், வயது கூடும் போது அதனைச் சார்ந்து நலிவடையும் என்பதை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. வயதானோர் தாங்கள் கற்றுக் கொண்ட தகவல்களை வரிசைக்கிரமப்படி வெளிப்படுத்தும் செயல்திறனில் குறைபாடு காணப்படும். தகவல்களை வரிசைக்கிரமப்படி வெளிப்படுத்த ே வண்டுமானால், அவற்றை அவர்கள் எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது எந்தக் சந்தர்ப்பத்தில் தெரிந்து கொண்டார்கள் என்கின்ற மூல நினைவுப்பதிவுகள் தேவைப்படுகின்றன. மேலும் வருங்காலத்திற்குத் தேவைப்படும் நினைவுகளும் இதில் அடங்கும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 13, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- மத்ஸ்யாஸனம்
- நாதகும்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
- த்ரிசூ'லகும்பகம்
1. மத்ஸ்யாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 21
அத மத்ஸ்யாஸனம்
முக்தபத்மாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஞ்சரேத் /
கூர் பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆஸனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.

மத்ஸ்யாஸனம்
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
- முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும். இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
2. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே
நாதகும்பக:, ஹட ஸங்கேத சந்த்ரிகா
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்மரந்திரத்தை அடையும்.
செய்நுட்பம்
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம்செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும். 4. இதனை 21 முறை செய்யுங்கள்.
3. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்பய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திக: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.
4. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிசூ'லகும்பக:
கோணாப்ப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.