நிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Achromatopsia
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 20, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பர்வதாஸனம்
- சீ'தலீ ப்ராணாயாமம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- ருத்ராஸனம்
- திரிநேத்ரகும்பகம்
- த்ரிகு'லகும்பகம்
1. பர்வதாஸனம்,
யோக ரஹஸ்யம், அத்யாயம் 5, ஸ்லோகம் 22
அத பர்வதாஸனம்
மூத்ரபிண்ட-யக்ரு'த்-ப்லீஹவபா-சு'த்தயே நிரந்தரம் /
உபவிச்'ய ச ஸுப்தாத பரவதாஸனமப்யஸேத் // 5.22


பர்வதாஸனம்
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகளை இணைத்துக் கொள்ளவும்.
- இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
(இந்த ஆஸனத்தை உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் கீழ்வரும் கும்பகங்களை உட்கார்ந்த நிலையிலேயே செய்யுங்கள்)
2. பர்வதாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74
அத சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும். 4. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
3. பர்வதாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அथ ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை7 நிமிடங்கள் செய்யுங்கள்.
4. ருத்ராஸனம், யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 25
அथ ருத்ராஸனம்
பகதலீ ஸம்புட கரி ஹாதஸ்யௌ பக உசாச /
பகாகா அங்குடா தோஉ லேஹ பரலீகானீ தாலவை லாகாவை /
பசை தோஉ ஹாத பகாமாஹே கரி நீசை கரி சீரை ஆணி /
பகாகீ ஆகல்யாபர காங்கஸீ கரை த்ரிஷ்டி நாஸா அக்ர /
ஆஸன கெஸகுண ஊத்ர பிஷை கஹீ பாதி கெள ரோக ஹோச /
யதி யஹு ஆஸண கரீ ஆகானை ஸோவை ஜைஅவரஜாச /
காரோகபீடா ஹோஸதெள யஹு ஆஸண கரி மூலத்வார டேகி தரதி /
ஸ்யௌபைஸை ஜைரோகனஹோச தெள ஸூஇதூஆ ஆஸன ரீபௌ ரை // 25
செய்நுட்பம்

- தரையில் அமர்ந்து கொள்ளவும், படுத்துக் கொண்டும் இதைச் செய்யலாம்.
- இரு குதிங்கால்களுக்கு அடியில் கைகளை நுழைத்து, இடது கையால் இடது பாதத்தையும் வலது கையால் வலது பாதத்தையும் பிடித்துக் கொள்ளவும்.
- குதிங்கால்களை மார்பை நோக்கிக்கொண்டு வரவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்தச் சுற்றானது கண்ணில் உள்ள சக்திச்சுற்றை நிறைவடையச் செய்து பார்வையைத் தெளிவாக்கும். இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
ருத்ராஸனம்
5. ருத்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்பூ பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. ருத்ராஸனத்தில் இருந்தபடியே
த்ரிகூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிகூ'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாத்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.