நிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க Care for Achromatopsia
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நோய் பற்றிய விபரம்
நிறப்பார்வையின்மை குறைபாடு- ஐந்து தனிப்பட்ட அறிகுறிகளைக் கொண்டதாக இருக்கிறது. அவையாவன: 1. நிறத்தைக் கண்டறியும் நுண்ணுணர்வை இழத்தல், 2. பெரு மூளையின் சிரையில் ஏற்படும் நிறப்பார்வையின்மை, 3. பிறவி இரத்த சோகையினால் ஏற்படும் நிறப்பார்வையின்மை, 4. அதிக வெளிச்சத்தில் நிறங்களைக் கண்டறிய முடியாமை 5. அதிகவெளிச்சத்தில் திருப்திகரமான அளவிற்கு நிறங்கள் தெளிவாகத் தெரியாமல் இருத்தல்.
இக்குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கும்போது, பொதுவாக அதனுடைய 6ஆம் மாதத்தில்தான் இக்குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதிக வெளிச்சத்தைத் தாங்க முடியாமல் அசாதாரணமான முறையில் அக்குழந்தைச்சிரமப்படும்போதோ அல்லது அதனுடைய விழிகள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருந்தாலோ மட்டும்தான் இக்குறைபாட்டை கண்டறியமுடிகிறது. விழிகள் ஊசலாட்டம் என்பது அவ்வயதில் கண்டறிவதற்கு கொஞ்சம் சிரமமான அறிகுறியாகவே இருக்கிறது. இக்குறைபாட்டை 6-7 ஆம் வயதில்தான் கண்டறிய முடியும். பிறவிலேயே இக்குறைபாடு இருந்தால் அது அப்படியே அதே அளவில் மட்டுமே இருக்கும். வயதாக வயதாக அது அதிகரிப்பதில்லை.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 20, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பச்’சிமோத்தான-ஆஸனம்
- சீ’தலீ ப்ராணாயாமம்
- ஸீதகாரீ ப்ராணாயாமம்
- பவனமுக்தாஸனம்
- திரிநேத்ரகும்பகம்
- த்ரிகு’லகும்பகம்
1. பச்’சிமோத்தான-ஆஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26
அथ பச்'சிமோத்தான-ஆஸனம்
ப்ரஸார்ய பாதௌ புவி தண்டரூபௌ ஸம்ந்யஸ்த-ஃபாலம் சிதியுக்ம-மத்யே/
யத்னேன பாதௌ ச த்ரு’தௌ கராப்யாம் யோகீந்த்ர-பீடம்
பச்’சிமோத்தானமாஹு: // 2.26
மொழிபெயர்ப்பு
கால்களை ஒரு குச்சியைப் போல விரைப்பாகத் தரையில் நீட்டி, குதிங்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழுங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்நிலை பச்சிமோத்தான ஆஸனம் எனப்படுகிறது.

பச்சிமோத்தான-ஆஸனம்
செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள். குதிங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
- முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழுங்கால்களின் மேல் வைக்கவும் (முழுங்கால்களை மடக்க வேண்டாம்).
- பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.
2. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- பச்சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
3. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே சீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத சீத்காரீ ப்ராணாயாமம்
சீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே, கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
4. பவனமுக்தாஸனம், யோகாஸனம்,
மூன்றாம் அத்யாயம், ஸ்லோகங்கள் 4-5
அத பவனமுக்தாஸனம்
த்வயோர்ஸ்து பாதயோ: பார்ஷ்ணி லாத்வாஸ்வஸ்வநிதம்பகே /
ஜானுனீ வக்ஷஸி ஸாதுர்பத்னாதி கரபந்தனை: // 3.4
ஏவம்-வித-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்தாஸனம் /
புவேதனேன வசா'சு'த்தீர்மலஸ்தவாயோர்மோசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிங்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்பட்டு அடிவயிறு தூய்மையடைகிறது (3.5)

பவனமுக்தாஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமரவும்.
- முழங்கால்களை மடக்கி, இரண்டு குதிங்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) இடைப்பட்ட பகுதியில் வைக்கவும். 3. கைகளால் முழுங்கால்களைக் கட்டவும்.
- முழுங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
- முதுகு நேராக இருக்கட்டும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
5. பவனமுக்தாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பஃ
ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பஃ ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திதஃ //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.
6. பவனமுக்தாஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லகும்பஃ, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத் த்ரிசூலகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூலினா த்ரிசூலாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூலனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் த்ரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று த்ரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.