KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபடSign in
வாழும் அவதார புருஷர்

தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Skin Problems

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 6, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பத்மாஸனம்
  1. கதாகும்பகம்
  1. தத்வகும்பகம்
  1. ஸூர்யபேதனகும்பகம்
  1. சந்த்ரபேதனகும்பகம்
  1. உஜ்ஜாயீகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தௌனெ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்த்ரு'சௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுக் வக்ஷ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம பத்மாஸனம் ப்ரோக்தம ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யென கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

பத்மாஸனம்

பத்மாஸனம்

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே

கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112

அத கதாகும்பக:

உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி'வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112

மொழிபெயர்ப்பு

இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசி களையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே தத்வகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 122

அத தத்வகும்பக:

தத்வாதௌ பூரயேத்வாயும் தத்தத்வாந்தே விரேசயேத் / 122

மொழிபெயர்ப்பு

ஒருவர், ஒரு குறிப்பிட்ட தத்துவம் எழும் முன்னர் சுவாசத்தை உள்ளிழுத்து, தத்துவத்தின் முடிவில் சுவாசத்தை வெளிவிட வேண்டும். இது தத்வ கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. அதே ஆசனத்தில் அமரவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போதே, உங்கள் தோல் குணமடைவதாக பாவனை செய்யுங்கள்.
  1. உங்கள் மொத்தத் தோல் பகுதியும் குணமடைந்துவிட்டதாக பாவனை செய்யுங்கள். இந்த பாவனையே தத்வம் எனப்படுகிறது.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸூர்யபேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-127

அத ஸூர்ய-பேதனகும்பக:

தினேச'வர்த்மனாஆக்ரு'ஷ்ய பாஹ்யவாயும் ஸச'ப்தகம் /
யாவத் ஹ்ரு'த்கண்ட_யோக: ஸ்யாதானதாக்ரசி'காக்ரகம் // 126

பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பீதம் சேடயா த்யஜேத் /
ஸூர்யபேதாக்ய-கும்பீயம் புன: புனரிமம் சரேத் // 127

மொழிபெயர்ப்பு

ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தைச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஸூர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.

செய்நுட்பம்

  1. தொண்டைக்குழி நிரம்பும்வரை வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
  1. பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

5. பத்மாஸனத்தில் இருந்தபடியே

சந்த்ரபேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-128

அத சந்த்ர-பேதனகும்பக:

தினேச'வர்த்தமநாக்ரு'ஷ்ய பாஹ்யவாயும் ஸச'ப்தகம் /
யாவத் ஹ்ரு'த்கண்ட_யோக: ஸ்யாதானகாக்ரசி'க்ராக்ரகம் // 126

பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பீதம் சேடயா த்யஜேத் /
ஸூர்யபேதாக்ய-கும்பேயம் புன: புனரிமம் சரேத் // 127

அநேந விநினா சந்த்ர-நாட்யோக்தச்'-சந்த்ரபேத: // 128

மொழிபெயர்ப்பு

ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, சுவாசத்தை வலப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஸூர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வே ண்டும்.

இதையே சுவாசத்தை இடப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்துச் செய்தால் சந்த்ரபேதனகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொண்டைக்குழி நிரம்பும்வரை இடப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
  1. பின் வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. பத்மாஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜாயீகும்பக:

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132

அத உஜ்ஜாயீகும்பக:

முக்ம் நியம்ய நாட்ய்பாமாக்ரு’ஷ்யாஸு'ம் நியோஜயேத் /
குண்டலீ-பார்ச்’வயோர் பசொ’த் கும்பயேதுதர-ஸ்திதம் //131//

ரேசயேதிடயா வாயுப் கச்சன்-திஷ்ட_ன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி'வேநாத்ில-வேதினா //132//

மொழிபெயர்ப்பு

வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசி யையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

செய்நுட்பம்

  1. அதே ஆசனத்தில் அமரவும்.
  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.

இதனை 21 முறை செய்யுங்கள்.

சிறிது நேரம் தளர்வாக அன்க்ளட்சிங் மனநிலையோடு அமரவும்.

இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.