KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தோல் பிரச்சினை வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

தோல் பிரச்சினை வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Skin Problems

நோய் பற்றிய விபரம்

மைக்கோஸிஸ் (Mycosis) என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளில் உருவாகும் ஒரு பூஞ்சான் தொற்றாகும். இது பொதுவாக ஏற்படக்கூடியதாக இருந்தாலும் பல்வேறு சூழல்களும், உடல்நிலைகளும் இந்த பூஞ்சான் நோய் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. சிறு பூஞ்சான்களைக் கொண்ட காற்றைச் சுவாசிப்பதன் மூலமும், சில நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகள் மூலமும் அடுத்தடுத்து பரவுகிறது. ஆகையால் பூஞ்சக் காளான்கள் நுரையீரல் அல்லது தோல்களில்தான் முதலில் தொடங்குகிறது.

விளைவுகள்:

மக்கள், கடுமையான நுண்ணுயிர் எதிரிகள் மருந்துகளை (Anti-biotics) நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சான் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏனென்றால் ஆண்டி பயாடிக் மருந்து, சிதைக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதில்லை. ஆனால் உடலுக்குத் தேவையான நல்ல கிருமிகளையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இந்தச் செயல்பாடு வாய், பெண் பிறப்புறுப்பு, குடல்பகுதி மேலும் உடலில் மற்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் சமன்பாட்டை மாற்றிவிடுகிறது. இதனால் பூஞ்சான்கள் அதிகளவில் வளர்ந்து விடுகின்றன. நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படும். ஹெச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்க மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் வேதியல்சிகிச்சை எடுத்துக்கொள் பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த நிலைதான் நேர்கிறது. மேலும் நீரிழிவு உடையவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படலாம். மிக சிறிய வயது மற்றும் அதிக வயதானவர்கள் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 5, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. மாகடாஸனம்
  1. சா'ந்தகும்பகம்
  1. ஸீதகாரீ ப்ராணாயாமம்
  1. பஸ்த்ரிகாகும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்
  1. த்ரிகு'லகும்பகம்

1. மாகட ஆஸனம்,

ஜோக_ ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 125-127

அது மாகடாஸனம்

தோஊ பகதலீ ஸம்புட ஆனே தினகீ பிஷ்டி பூமிபரி டானை /
மூலத்வார ஏடயாம்பரி ல்யாவே மூடா ஹாஉ உசா டஹராவை // 125

தோஊ கரகீ அங்குரீ ஜோஊ வத_ம் ஆனி லகாவை ஸோஊ /
காஜி குஜாவன் கீ ஜ்மும் கரை த்ரிகுட த்ரிஷ்டி அசல கரி தரை // 126

தரனஸு கபஹு நா சிகை அக்னிவ்ரு'த்தி அதி ஹோய /
வேக தமை அரு உதரஸுை மாகட கே குன ஸோய // 127

மாகட ஆஸனம்

மாகட ஆஸனம்

செய்நுட்பம்

  1. முட்டிக்கால் போடவும்.
  1. பாதங்களைச் சேர்த்து வைத்து,குதிகால்களில் ப்ருஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
  1. கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
  1. உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.

2. மாகடாஸனத்தில் இருந்தபடியே

சா'ந்தகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 90

அcredits அத சா'ந்தகும்பக:

காயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா'ந்த கும்பக உதாஹ்ரு'த: /
ஸ்தானயோரந்தரே రుத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.

செய்நுட்பம்

  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உள்ளே நிறுத்தும்போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு உள்ளே நிறுத்த முடியாதபோது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. மாகடாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43

அcredits அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. மாகடாஸனத்தில் இருந்தபடியே

ப॒ஸ்த்ரிகாகும்ப॒க:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77

அத ப॒ஸ்த்ரிகாகும்ப॒க:

ப॒ஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்॒ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75

ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்ப॒கம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் ப॒ஸ்த்ரிகா-கும்ப॒கம் ஸுீதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

மொழிபெயர்ப்பு

கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)

இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தைள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
  1. சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்ப்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
  1. இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.

5. மாகடாஸனத்தில் இருந்தபடியே

த்ரிநேத்ர கும்புக:, கும்புக பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ர கும்புக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தர்ய ஸ்வர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன் நோய்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்புக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திக: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து சுவாசத்தையடக்கும் இத் திரிநேத்ரகும்பகம், மூன்று சித்திகளைத் தரவல்ல முக்கண்ணன் சி வனால் அருளப்பட்டதாகும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.

6. மாகடாஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'ல கும்பக:,கும்பக பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'ல கும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாத்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக இருநாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதையும் 21 முறை செய்யுங்கள்.