KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய-Sign in
வாழும் அவதார புருஷர்

தைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய-

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Thyroid Problems

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: 1 பிப்ரவரி 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. ஸிம்ஹாஸனம்
  1. ஜாலந்தர பந்தம்
  1. த்ரிகு'லகும்பகம்
  1. நாககும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்

1. ஸிம்ஹாஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா,உபதேசம் 2, ஸ்லோகங்கள் 14, 15

அத ஸிம்ஹாஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷ்ணஸ்யாதோ வ்யுத்க்ரமேணோர்த்வதாம் கதௌ /
சிதியுக்மம் பூமிஸம்ஸ்தம் கரௌ ச ஜானுனோபரி // 14

வ்யாத்த-வக்த்ரோ ஜலந்த்ரேண நாஸாக்ரமவலோகயேத் /
ஸிம்ஹாஸனம் பவேதேதத்-ஸர்வவ்யாதி விநாச'கம் // 15

மொழிபெயர்ப்பு

செங்குத்தாக வைக்கப்பட்ட குதிகால்களைப் பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குறுக்காக வைத்து, அவற்றின் மேல் அமரவும். முழங்கால்கள் தரையில் படும்படி வைத்து, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு ஜாலத்தரமுத்ராவைப் பயிற்சி செய்யுங்கள். மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும். இந்த ஸிம்ஹாஸனம் அனைத்து வியாதிகளையும் நாசம் செய்கிறது.

ஸிம்ஹாஸனம்

நிலை 1
நிலை 2

நிலை 1 நிலை 2

செய்நுட்பம்

  1. முட்டிக் காலிட்டு அமரவும். பாதங்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.
  1. பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குதிகால்களைக் குறுக்காக வைத்து, (வலது பக்கமாக இடது குதிகாலையும், இடப்பக்கமாக வலது குதிகாலையும் வைத்து)அவற்றின் மேல் அமரவும்.
  1. முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து ஜாலந்தரமுத்ராவைப் பயிற்சி செய்யுங்கள்.
  1. மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
  1. இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.

2. ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

அத ஜாலந்தரபந்த:

கண்ட_ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசா'ாதார-பந்தம் / 3-12

மொழிபெயர்ப்பு

தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
  1. மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.

3. ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே

த்ரிசூ'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லரும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்‌ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத்த்ரிசூலக்ரும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாககும்பக:

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோத்தி: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச ப்ரலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்ப்ட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

5. ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.