KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தைராய்டு பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

தைராய்டு பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Thyroid Problems

நோய் பற்றிய விபரம்

தைராய்ட் சுரப்பி செயல்படாமல் இருக்கும் பொழுதும், தைராயிடை ஊக்குவிக்கும் ஹார்மோனைச் (TSH, Thyroid - Stimulatiy Hormone) சுரக்கும் பிட்யூட்டரி சுரப்பியே சரியாகச் செயல்படாமல் இருக்கும் பொழுதும், இந்தப் பிட்யூட்டரி சுரப்பியை ஒழுங்குப்படுத்தும் தைரோபுராப்பின் ஹேர்மோனை வெளியிடும் ஹைபோதாலமல் (Hypothalamui) சரியாகச் செயல்படாமல் இருக்கும் பொழுதும், தைராய்ட் ஹார்மோன் சுரப்பதில் ஒழுங்கற்ற தன்மை ஏற்படுகின்றது. கூஞஏ இன் செறிவு வயதுக்கு தக்கவாறு அதிகரிக்கின்றது. அதனால் வயதுக்கு ஏற்ற பரிசோதனை தேவைப்படுகின்றது.ஹைபோதைராடிஸம் (HypoThyroid-ism) வயதுக்கு வந்தவர்களை மூன்றிலிருந்து பத்து சதவிகிதம் பாதிக்கின்றது. வயதானவர்கனையும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கின்றது.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 30, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. போத்யாஸனம்
  1. ஜாலந்தர பந்தம்
  1. த்ரிசூ'லகும்பகம்
  1. நாககும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்

1. போத்யாஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 123-124

அத போத்யாஸனம்

தோஊ ஹாத பக பாஹர ஆனை கோடாதரை காகஸீ டானை /
அங்குஷ்ட பிண்டலீ ல கதா துரை சரண உபை ஆகாஸதீஸீ கரே /

பிஷ்டிரூ கூலா தரதீ லாவை உதாஸங்கோச ஊர்த டஹராவை /
கோடா ஸீஸபி தம்பன கரை இஹ விதி போத்யாஸன துரை // 123

தேஹ விஸாலீ நாரஹை ரக்தபித்தி புனி ஜாய /

புந்நஸீ கும்மரி ஆதி ஜௌ நாநா ரோக நஸாய // 124

போத்யாஸனம்

போத்யாஸனம்

செய்நுட்பம்

  1. தரையில் கால்களை நீட்டி அமருங்கள்.
  1. கெண்டைக்கால் பகுதியைக் கைகளால் பிடித்து, தலையை நோக்கி கால்களை உயர்த்துங்கள்.
  1. கால்களை மடக்கக்கூடாது.
  1. வயிற்றுப் பகுதியைச் சுருக்குங்கள்.
  1. தலையை முட்டியின்மீது வைக்கவும்.
  1. இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.

(இந்த ஆஸனத்தை முதல் படத்தில் உள்ளதுபோன்றும்ப செய்யலாம்.)

2. போத்யாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

அத ஜாலந்தரபந்த:

கண்ட_-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபகம் ஹ்ரு'தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசா'தார-பந்தம் // 3-12

மொழிபெயர்ப்பு

தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
  1. மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. போத்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லரும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாத்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத்திரிசூலரும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. போத்யாஸனத்தில் இருந்தபடியே நாகரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாகரும்பக:

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டே_னாபூரயேச்சனை: /

தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பு: சி'வோதித: /
க்ஷுாதாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

5. போத்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்பூ பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸிஸ்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால்

அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.