நோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Infection
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 26, 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- கருடாஸனம் (வடிவுருவம் 1)
- ப்லாவினீகும்பகம்
- மூர்ச்சநாகும்பகம்
- கருடாஸனம் (வடிவுருவம் 2)
- கமலகும்பகம்
- குமுதகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்
1. கருடாஸனம் (வடிவுருவம் 1),
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 90
அத கருடாஸனம்
ஆஸண கெள குண ஸர்ப ஆதீ தே பிஷ வ்யாபை நஹீ / 90
செய்நுட்பம்
- தரையில் நேராக நிமிர்ந்து நிற்கவும்.
- உங்களைச் சமநிலைப்படுத்திக் கொண்டு, இடது பாதத்தைத் தூக்கி, வலது தொடை ஆரம்பிக்கும் இடத்தில் இடது பாதத்தின் மேற்பகுதியை வைக்கவும்.
- உங்கள் வலது முழுங்காலை சிறிது மடக்கவும்.
- உங்கள் இடது முழுங்காலை வலது கணுக்காலுக்கு அருகில் (முடிந்தவரை) கொண்டு வரவும்.
- உங்கள் இரு கைகளையும் கூப்பி மார்புப் பகுதியின் அருகில் வைத்துக் கொள்ளவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

கருடாஸனம்
2. கருடாஸனம் (வடிவுருவம் 1)ல் இருந்தபடியே ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171
அத ப்லாவினீகும்பக:
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
3. கருடாஸனம் (வடிவுருவம் 1)ல் இருந்தபடியே மூர்ச்சனாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170
அத மூர்ச்சனாகும்பக:
ஆபூர்ய கும்பீதம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்போ மனோமூர்ச்சா ஸுகப்ரதா // 170
மொழிபெயர்ப்பு
உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
செய்நுட்பம்
- சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது என்னும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. கருடாஸனம் (வடிவுருவம் 2),
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 72
அத கருடாஸனம்
டாவோ பக மோடி யேட மாஹிலௌம் கூல்ப மூலத்வார நீசை தே /
பைஸை ஜீமணீ பகதலீ துரதீ டேகி கோடோ ஊஞ்சௌ உபௌராஷை /
பகதலீ மாஹிலீ கோர டாவா கோடா அரு பீட மாஹிலீ /
கானீ லகாவை ஹாத தோஉ கோடா உபரி ராஷை த்ரிஷ்டி நாஸா அக்ர /
ஆஸண கௌ குண கஹி பாதி தூத ஜாதி ஹோச தத பை // 72

கருடாஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமர்ந்து கொள்ளவும்.
- இடது காலை மடித்து குதிகாலை குதப்பகுதிக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
- வலது காலை மடித்து, முழங்கால் மேல் நோக்கியவாறும் பாதங்கள் வலது புட்டத்திற்கு அருகில் இருக்கும்படியும் வைத்துக் கொள்ளவும்.
- வலது கையை வலது முழங்காலின் மீதும், இடது கையை இடது முழங்காலின் மீதும் வைத்துக் கொள்ளவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இதே நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
5. கருடாஸனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே
கமலரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189
அத கமலரும்பக:
பூரயே்தர்கநாட்யாஸு கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலரும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
- இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6. கருடாஸனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே
குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமுதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
7. கருடாஸனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
அத க்ரமநேத்ரகும்பக:
ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய சூர்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா // 191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.