KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தூரப்பார்வை வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

தூரப்பார்வை வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Long Sight

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

நோய் பற்றிய விபரம்

தூரக்கண் பார்வை என்பது பொருட்களை மிக அருகில் பார்க்கக் கடினமாக இருக்கும் ஒருநிலை. இது, வெள்ளெழுத்து (Hyperopia) எனப்படும் முதுமைப்பார்வைக் குறைவினாலோ அல்லது தூரப்பார்வை குறைவினாலோ (Presbiopia) ஏற்படும். முதுமைப்பார்வைக் குறைவினால் ஏற்படும் அறிகுறிகளும், தூரப்பார்வை குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் காரணங்கள் வெவ்வேறு.

உதாரணத்திற்கு, மிகவும் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க சிரமம், மிகச் சிறிய எழுத்துக்களைப் பார்ப்பதில் சிரமம், மங்கலான பார்வை போன்றவை முதுமைப்பார்வைக் குறைபாட்டிலும் இருக்கின்றன; தூரப்பார்வை குறைபாட்டிலும் இருக்கின்றன. ஆனால் அதன் காரணங்கள் வெவ்வேறு.

ஹைபரோபியா (Hyperopia) -இது, ஒருவருடைய எந்த வயதிலும் பாதிக்கலாம். இதனால் கண் உருளை (Eye ball) மிகவும் சிறியதாகவோ அல்லது கண்வில்லையின் (Lens) வடிவம் மாறியோ இருக்கும். இதன் காரணமாக கண் உள்ளே செல்லும் ஒளியானது ரெடினா (Retina) மீது குவிய இயலாது. அதனால் உருவம் ரெடினாவுக்கு பின்னால் ஏதோ ஒரு புள்ளியில் குவிகிறது.

பிரஸ்பயோபியா (Presbiopia) பொதுவாக வயதானவர்களைப் பாதிக்கின்றது. வயது முதிர்வின் காரணமாக கண்வில்லை (Lens) கடினமாவதால், அது தன்னுடைய மீள் தன்மையை இழப்பதால் ஏற்படுகிறது. தூரக்கண் பார்வை, கண்ணாடி (Reading glasses) அணிவதன் மூலம் சரி செய்யப்படுகிறது.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 17, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பத்மாஸனம்
  1. கூர்மகும்பகம்
  1. ஸமகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31

த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32

இதம்பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி,
பத்மாஸனம்

பத்மாஸனம்

இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79

அத கூர்மகும்பக:

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோர்ச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79

மொழிபெயர்ப்பு

கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அசையாது அமர்ந்திருங்கள்.
  1. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  1. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள்.
  1. இயற்கையாகவே,ள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  1. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  1. இதனை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

அத ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு'கம் த்'ரு'தி: /
ஸம: கும்பொ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

மொழிபெயர்ப்பு

சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைக் கண்களில் நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.